இயற்கை சீற்றங்களில் தற்போது மக்களை மிகவும் அச்சுறுத்தி வருவது சுனாமி என்றழைக்கப் படும் ஆழிப் பேரலை .உலகில் பல்வேறு பகுதிகளை தாக்கிய சுனாமிகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றை பார்ப்போம்
1 ) ஜப்பான்
1983 ல் ஜப்பானின் நோஷிரோ கரையை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 10 மீட்டர் வரை இருந்தது .
2 ) சாலமன் தீவு
2007 ல் சாலமன் தீவுகளை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 12 மீட்டர் வரை இருந்தது .
3 ) சாமொவா தீவு
2009 ல் சாமொவா தீவை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 14 மீட்டர் வரை இருந்தது
4 ) பாப்புவா நியூ கினியா
1998 ல் பாப்புவா நியூ கினியாவை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 15 மீட்டர் வரை இருந்தது.
5 ) சிலி
1960 ல் சிலி நாட்டிலுள்ள வால்டிவியா என்னுமிடத்தை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 25 மீட்டர் வரை இருந்தது.
6 ) அமெரிக்கா
1964 ல் அமெரிக்காவின் அலாஸ்க்காவை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30 மீட்டர் வரை இருந்தது.
7 ) இந்தோனேஷியா
2004 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30 மீட்டர் வரை இருந்தது.இது வரை தாக்கிய சுனாமிகளில் அதிக உயிர்களை பலி கொண்ட சுனாமி இதுதான் .
8 ) ஜப்பான்
11 -3 -2011 ல் ஜப்பானை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 30 மீட்டர் வரை இருந்தது.
9 ) ஜப்பான்
1993 ல் ஜப்பானின் ஹோக்கைடோவை சுனாமி தாக்கியது .அலையின் உயரம் அதிக பட்சமாக 31 மீட்டர் வரை இருந்தது.
10 ) அமெரிக்கா
1958 ல் அமெரிக்காவிலுள்ள லித்துயா கடலில் சுனாமி உருவானது . உலகிலேயே மிகப் பெரிய்ய சுனாமி இதுதான் .இதனால் உருவான அலைகள் 520 மீட்டர் உயரம் வரை இருந்தன .நல்ல வேளையாக இந்த சுனாமி தாகிய இடத்தில் அதிகம் மக்கள் வசிக்கவில்லை .இந்த சுனாமி காரணமாக இரண்டுபேர் உயிரிழந்தனர் .
தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து
படங்கள் : கூகுளிலிருந்து
பிற்சேர்க்கை :
அணுமின் நிலையங்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பவை சுனாமி அலைகள்தான் .தமிழ் நாட்டிலுள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்திலும் கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 8 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைந்துள்ளன .
20 கருத்துகள்:
அண்ணே உங்க புள்ளி விவரம் கதிகலங்குதே...
அரசுக்கு இனியாவது உறைக்குமா?
நல்ல புள்ளி விவரம்,
சகோ . பெரிய சுனாமி 520 மீட்டர் வந்தது அப்படின்னு சொல்லிட்டு கூடங்குளம் 8 மீட்டர் உயரத்தில் தான் இருக்கு அப்படின்னு பயமுருத்திடீங்க. 30 . 6 மில்லியன் Cubic Meter உள்ள ஒரு பெரிய பாறை 914 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீரில் விழுந்ததினால் தான் தண்ணீர் அப்படி எழுந்தது. அந்த உண்மையை கொஞ்சம் எழுதிவிடுங்க . ஏனெனில் கூடங்குளத்தில் அப்படி ஏதும் பெரிய பாறை கிடையாது ( விழுவதற்கு ). தகவலுக்கு http://geology.com/records/biggest-tsunami.shtml
அதனால் பயப்படாதீங்க .... இருந்தாலும் நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
அண்ணா ..! புதிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. நண்பர் இருதயம் கருத்துகள் கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டியவை .
ல தொகுப்பு.சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கவேண்டும்.
@இருதயம்நான்கூட ஆச்சரியப்பட்டதுண்டு இவ்வளவு உயர சுனாமி எப்படி உருவானது என்று ...தகவலுக்கு நன்றி ...எப்படி இருந்தாலும் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலான ஆழிப் பேரலைகள் உலகில் பல முறை ஏற்பட்டுள்ளன ...கண்டிப்பாக இந்திய அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ள உயரம் ஆபத்தை தாங்கும் வகையில் இல்லை .
பாலா சார் எப்படிஇருக்கிங்க நலமா
அதிக அச்சுப்பணி சுமையால் உங்களோடு வலைதளத்துக்கு ஒரு மாதமாக வரமுடியவில்லை
அணு உலைகள் பற்றி அதிகப்படியான
பல பயனுள்ள தகவல்களையும் அதிர்ச்சிகளையும் கூறியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
தொடரும் நமது பயணம்
தமிழ் மணம் 3
@கிராமத்து காக்கைநலமாக உள்ளேன் சகோ .தாங்கள் நலம்தானே ...தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது ...
நல்ல புள்ளி விவரம்...
அணுமின் நிலையங்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பவை சுனாமி அலைகள்தான் .தமிழ் நாட்டிலுள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்திலும் கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 8 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைந்துள்ளன ./
அருமையான தொகுப்பு..
//Kudankulam site is located far off (about 1500 km) from the tsunamigenic fault (where tsunamis originate). Thus a tsunami would take time and lose some of its energy by the time it strikes Kudankulam site. As against this, the tsunamigenic fault was only about 130 km away at Fukushima. The Kudankulam site was not affected by the 2004 Indian Ocean tsunami due to its design of higher finished floor level. The water level experienced at the site due to December 26, 2004 tsunami triggered by a 9.2 magnitude earthquake was 2.2 m above mean sea level.//
http://www.theweekendleader.com/Causes/716/Koodankulam-plants!.html
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல் நண்பரே
வணக்கம் நண்பர் பாலா
எப்படி இருக்கீங்க?
உடல்நலம் சுகமா?
அருமையான புள்ளி விவரங்கள் கொடுத்திருக்கீங்க.
மிக்க நன்றி.
சென்னையின் பெரும்பாலான பகுதிகள் 1 - 5 மீட்டருக்குள் தான் வருகிறது!
3 கோடி பேர் வசிக்கும் பம்பாயில், டிராம்பே அணு உலை நிலையம் உள்ளது!
2004 சுனாமியில், கூடன்குளத்திற்கு வந்த அலையின் உயரம் என்ன?
இலங்கை சுனாமியின் பாதிப்புகளை தென் தமிழகத்திற்கு ஏற்படவிடாமல் தடுக்கிறது!
2004 இல் நாம ஊர்ல சுனாமி வந்த போது குமரி வள்ளுவர் சிலையை விட உயரமாக வந்ததாக சொன்னாங்களே...
அடடா, நல்லதோர் பொது அறிவுத் தகவலாக இப் பதிவு இருக்கிறதே.
உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன், பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_16.html
கருத்துரையிடுக