18 அக்டோபர் 2011

கல்பாக்கம் அணு உலை பணியாளர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு :NPCIL

இந்தியாவுக்கு அணு உலைகள் வேண்டுமா வேண்டாமா என்ற ஒரு பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்கள் சிலருக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

அணு உலையில் பணி புரியும் சில பராமரிப்பு பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட சற்று அதிகமாக டிரிடியம் கதிர் வீச்சு பாதிப்பு இருப்பதாக இந்திய அணுமின் கழகம் (NPCIL ) தெரிவித்துள்ளது .

சேதன் கோதாரி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட  விளக்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் மூலம் இந்திய அணு உலைகள் பாதுகாப்பாக இயங்குகின்றன என்று கூறிவரும் மத்திய அரசின் முக மூடி கிழிந்துள்ளது


13 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

விளைவுகள் பற்றி அரசு கவலைப்படாமல் இருக்கே? என்ன செய்ய?

aotspr சொன்னது…

அரசாங்கம் இதனை கவனிக்க வேண்டும்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

SURYAJEEVA சொன்னது…

மக்களால் தேர்ந்தெடுத்த அரசு துரோகம் செய்யுமா என்று கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாரே இருதயம், அவருக்கும் இந்த செய்தி கண்ணில் படும்படி செய்யுங்கள்... அவர் வலை பூவுக்கு போக எனக்கு பிடிக்கவில்லை...

மாய உலகம் சொன்னது…

இந்த சம்பவம் மூலம் இந்திய அணு உலைகள் பாதுகாப்பாக இயங்குகின்றன என்று கூறிவரும் மத்திய அரசின் முக மூடி கிழிந்துள்ளது//

உண்மையை மூடி மறைக்க முடியாது... இனிமேலாவது அரசு மக்களின் எண்ணங்களுக்கு செவி சாய்க்கட்டும்...

Unknown சொன்னது…

இப்போதான் வெளுக்க ஆரம்பித்து இருக்கிறது நன்றி மாப்ள!

Prabu Krishna சொன்னது…

ம்ம் சில முட்டாள்கள் இதையும் மறுப்பார்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மத்திய அரசின் அடாவடி போக்கை என்னான்னு சொல்ல ம்ஹும்...!!!

ராஜா MVS சொன்னது…

தலையால அடிச்சிக்கிட்டு சொன்னா கேட்கிறது இல்ல... பாதிக்கப்பட்ட பிறகு..என்னத்த சொல்ல...

இனியாவது அரசு கேட்குமா?

Unknown சொன்னது…

என்ன சொன்னாலும், அதிகார மையங்கள் எப்போதும் சொன்னதைத் தான் சொல்லும்...

Kousalya Raj சொன்னது…

இனியாவது அணுஉலை விசயத்தில் தீவிரமான நடவடிக்கை, உடனடியாக எடுக்கபட வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

இது ஆரம்பம் தான் பாலா...டேஹெல்கா நிருபரிடம் நேற்று பேசினேன்...கூடிய விரைவில் அவர் இந்தியா முழுவதும்...
இதுவரை...

1 . மறைக்கப்பட்ட அணு விபத்துக்கள்.
2 . கழிவுப்பொருள் சேமிப்பு பின் விளைவுகள்
3 . புற்று நோய் அதிகரிப்பு புள்ளி விவரம்
4 . உண்மையான கதிரியக்க அளவு
5 . அணு உலை ஊழியர்களின் உடல் கேடுகள்.
6 . சுரண்டப்பட்ட குடி நீர்...
7 . மாசுபடுத்தப்படும் நிலத்தடி நீர்.
8 . அழியும் கடல் சார்ந்த உயிரினங்கள்
9 . அவசர நடைமுறைப்படுத்தல்...

போன்ற புள்ளி விவரங்கள்...ஆராய்ச்சி...கொண்ட Investigative Report http://www.tehelka.com/ வருகிறது என்றார்...

அது பல பேர் வாயை அடைத்து....இந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் பாலா...

M.R சொன்னது…

அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் .

shanmugavel சொன்னது…

புதிய செய்தி.அரசு கவனமாக பரிசீலிக்கவேண்டும்.