31 ஜூலை 2011

காஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து காரணங்கள் .

நன்றி : லாரி ஜெங்கின்ஸ் ,நேக்டு ஹெல்த்
காபியும் டீயும் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி ,சிலருக்கு டீ ,மற்றும் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியையும் டீயையும் ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது .அதற்கான ஐந்து காரணங்கள் இதோ .

1 .விலை

காஃபி ,டீ இரண்டும் வெவ்வேறு தரங்களில் வெவ்வேறு விலைகளில் கிடைத்தாலும் தரமான காஃபி அல்லது டீயின் விலையை ஒப்பிட்டால் காஃபியின் விலை அதிகம் .மேலும் காஃபியை விட டீயை அதிக நாட்கள் கெடாமல் வைக்கலாம் .

2 . பல் பாதுகாப்பு

காஃபி ,டீ இரண்டுமே பற்களில் கரையை ஏற்படுத்துபவை என்றாலும் காஃபி அதிக கரையையும் வாய் துர் நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது .ஆனால் டீயில் உள்ள ஃப்லூரைடுகள் மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட்கள் பற்களை உறுதியாக்குகின்றன மேலும் இதிலுள்ள டனின்கள் வாயிலுள்ள கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.

3 .இதய ஆரோக்கியம்

உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கும் காஃபிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு  உண்டு .மாறாக டீ அருந்துவது  உயர்  ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது மேலும் அதிலுள்ள டனின் மற்று கேடசின்கள் இதய நோயையும் கேன்சரையும் தடுக்கக் கூடியது .

4 .குறைவான காஃபின்

காஃபியில் தேயிலையை விட அதிக காஃபின் உள்ளது .டீயிலுள்ள காஃபின் இரத்தத்தில் மெதுவாகவே கலக்கிறது .காஃபியைப் போல் உடல் நடுக்கத்தையோ படபடப்பையோ உண்டாக்குவதில்லை .

5 .சுற்றுசூழல் பாதுகாப்பு

தேயிலை விவசாயத்திற்கு காடுகள் அழிக்கப்படுவதில்லை ,மாறாக காபி விவசாயத்திற்கு மழைக்காடுகள் அழிக்கப் படுகின்றன ,அதிக அளவு பூச்சி கொல்லி மருந்துகளும் இரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன மேலும் காபி ஆலைகள் மூலம் காற்றிலும் மாசுகள் கலக்கின்றன .

இப்போது நீங்களே சொல்லுங்கள் எது நல்லது என்று .

31 கருத்துகள்:

Unknown சொன்னது…

நண்பா பயனுள்ள பதிவு ...
காலையில் மட்டும் ஒரே ஒரு டீ ...
என்னைக்காவது காப்பி ....
இது நம்ம வழக்கம்
இப்போ வடை

Unknown சொன்னது…

நண்பா என் 9 காப்பி பேஸ்ட் பதிவுகளில் எல்லாம் பதிரிகை செய்திகள் மட்டுமே ...யாருடைய கற்பனையையும் சுட்டதில்லை ..தப்பா நினைக்க வேண்டாம் நண்பா

M.R சொன்னது…

உபயோகமான பதிவு நண்பரே

M.R சொன்னது…

அது மட்டுமில்லை நண்பரே சிகரெட்டை விட காபி கெடுதல் என்று ஒரு செய்தியில் படித்தேன் நண்பரே

கூடல் பாலா சொன்னது…

நான் காப்பியை சொல்லவில்லை மாப்ள ...9 காஃபி குடிப்பது ஓவர் என்று சொன்னேன் ......மற்றபடி இந்த பதிவு கூட ஒரு ஆங்கில பதிவின் மொழி பெயர்ப்புதான் ...

கூடல் பாலா சொன்னது…

@ ரியாஸ் அஹமது நான் காப்பியை சொல்லவில்லை மாப்ள ...9 காஃபி குடிப்பது ஓவர் என்று சொன்னேன் ......மற்றபடி இந்த பதிவு கூட ஒரு ஆங்கில பதிவின் மொழி பெயர்ப்புதான் ...

M.R சொன்னது…

indly, tamil 10.

கூடல் பாலா சொன்னது…

@M.R
சிகரெட்டை விட கெடுதலா ? இப்போதுதான் கேள்விப் படுகிறேன் ...நன்றி ரமேஷ் !

மாய உலகம் சொன்னது…

இனி காபியை சாப்பிடமாட்டேன்(குடிக்க மாட்டேன்) ... ஒரு கப் டீ பார்சல்.... பகிர்வுக்கு நன்றி நண்பரே

கோகுல் சொன்னது…

வாங்க சகோ டீ சாப்டுவோம்

Anbu சொன்னது…

என்றைக்குமே எனக்கு பிடித்தது டீ தான்..

Mathuran சொன்னது…

அட இவ்வளவு விசயம் இருக்கா... இனிமேல் காப்பியே குடிக்கிறதில்ல

ஷர்புதீன் சொன்னது…

ada!!

Unknown சொன்னது…

மாப்ள பயனுள்ள பதிவு .

பெயரில்லா சொன்னது…

நம்ம வோட்டு ...
Green tea...
Black coffee...

பெயரில்லா சொன்னது…

நம்ம வோட்டு ...
Green tea...
Black coffee...


Reverie
http://reverienreality.blogspot.com/

மகேந்திரன் சொன்னது…

அடேயப்பா தேநீரில்
இவ்வளவு விஷயமா???!!!!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

டீ அவசியமா?

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம் இதோ வந்துகிட்டே இருக்கு ...

கூடல் பாலா சொன்னது…

@கோகுல் நல்ல கடையா கூட்டிட்டு போங்க ....

கூடல் பாலா சொன்னது…

@anbu எனக்கும்தான் .....

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் ஆணியே பிடுங்கவேண்டாமா...

கூடல் பாலா சொன்னது…

@ஷர்புதீன் ஆமா ...

கூடல் பாலா சொன்னது…

@id ரைட்டு ..

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் படிச்சவுங்க சொல்றாங்க ...

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash டீ குடிச்சா கேன்சர்கூட வராதாமாம் ...

Unknown சொன்னது…

@koodal bala

நன்றி !நானும் நிறைய மொழி பெயர்ப்பு செய்துள்ளேன் ஹி ஹி

ராஜ நடராஜன் சொன்னது…

//தேயிலை விவசாயத்திற்கு காடுகள் அழிக்கப்படுவதில்லை ,மாறாக காபி விவசாயத்திற்கு மழைக்காடுகள் அழிக்கப் படுகின்றன ,அதிக அளவு பூச்சி கொல்லி மருந்துகளும் இரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன மேலும் காபி ஆலைகள் மூலம் காற்றிலும் மாசுகள் கலக்கின்றன .//

நல்லவேளை மொழிபெயர்ப்புன்னு சொல்லி தப்பிச்சிகிட்டீங்க:)

டீ,காபி இரண்டுக்குமே மழைக்காடுகளை அழிப்பது அவசியம்.டீ ப்ராஸஸிங்க் மிக நீளமான முறையிலான மனித உழைப்புக் கொண்டது.

தேயிலைக்கழிவுகள் அதிக நாற்றத்தை உருவாக்குவதில்லை.

டீ போடுவது சிரமமான வேளை.காபி கலக்குவது எளிது.

ஒரு டாக்டர் டீ குடிக்கச் சொல்கிறார்.இன்னொரு டாக்டர் காபி குடிங்கிறார்.இன்னுமொருத்தர் இரண்டையுமே தொடாதே சொல்கிறார்.யார் உண்மையான டாக்டர்:)

koodal kanna சொன்னது…

மிகவும் பயனுள்ள செய்தி நண்பரே! காப்பியை விட டீ சிறந்தது என்று சொல்லி அதற்கு ஐந்து காரணங்களையும் கூறியதற்கு மிக மிக நன்றி நண்பரே !

நிரூபன் சொன்னது…

காப்பியை விடத் தேநீர் சிறந்தது என்பதனை சிறப்பாக ஒப்பிட்டு விளக்கியுள்ளீர்கள் சகோ.

Unknown சொன்னது…

மிகவும் அருமையான செய்தி தோழரே விவசாயத்த உக்குவிக்ற நன்று