26 ஆகஸ்ட் 2011

கூடங்குளம் அணு உலைக்கெதிராக போராட்டம் ஏன் ?நேரடி ரிப்போர்ட் .

சமீப நாட்களாக கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பல்லாயிரக் கணக்கானோர் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.கூடங்குளம் பகுதி மக்கள் ஏன் அணு உலையை எதிர்க்கிறார்கள் என்று தொலை தூரத்திலிருக்கும் நண்பர்களும் பல பத்திரிகையாளர்களும் என்னை அடிக்கடி வினவுகிறார்கள் .

நான் இந்த அணு உலை அமையும் இடத்திற்கு அருகாமையில் வசிப்பதால் இது பற்றிய உண்மைத் தகவல்களை இப்பதிவின் வாயிலாகத் தருகிறேன் .

தமிழ் நாட்டின் தென் கோடியில் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ளது கூடன்குளம் ஊர் .இங்குதான் சர்ச்சைக்குரிய அணு உலைகள் கட்டப் பட்டு வருகின்றன .


1988  ம் வருடம் இங்கு அணு உலைகள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கின .அப்போதே இவ்வணு உலைகளுக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .காரணம் அதற்கு 2  வருடங்களுக்கு முன்புதான் (1986 ) செர்நோபில் அணு உலைகள் வெடித்துச் சிதறி சில லட்சம் உயிர்களை காவு வாங்கியது .

ஆனாலும் அப்போது கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் அணு உலையை எதிர்க்கவில்லை மாறாக மலர் தூவி வரவேற்றார்கள் .அதற்க்குக் காரணம் இப்பகுதி மக்களின் வறுமை ,வேலை வாய்ப்பின்மை மற்றும் அறியாமை போன்றவை .நமது பகுதிக்கு ஒரு பெரிய தொழிற்சாலை வருகிறது என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார்களே  தவிர அது ஒரு பெரிய பிரச்சினையை சுமந்து வருகிறது என்பதை யாரும் உணரவில்லை .அதன் காரணமாக அணு உலைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஊருக்குள் வருபவர்களை விரட்டியடித்தனர் .

அன்றைய நாட்களில் இந்தியாவில்  எந்த ஒரு மாநிலத்திலும் அணு உலைகள் கட்ட அங்குள்ள மக்கள் அனுமதிக்காத நிலையில் கூடங்குளம் பகுதி மக்களின் மன நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அணுசக்தி துறையும் மத்திய அரசும் இணைந்து கூடங்குளத்தில் காலூன்றியது .

2001  ம் ஆண்டு அணு உலைகளின்  கட்டுமான வேலை தொடங்கியது   .அதன் பின்னர்தான் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அணு உலை என்றால் என்ன என்ற விஷயம் உலைகளின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் இப்பகுதியைச் சார்ந்தவர்கள் மூலமாககொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்தது .  

அணு உலைகள் வெடிக்க நேரிட்டால் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டிய நிலை வரும் அதை மீறி வசித்தால் கதிரியக்கத் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை சமீபத்தில்தான் இப்பகுதி மக்கள் உணர்ந்தார்கள் .

இதை மேலும் தெளிவு படுத்தும் விதமாக ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்துக்கள் அமைந்தது .ஜப்பானில் நிகழ்ந்த விபத்து காரணமாக 50  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகள் உடைமைகளை கைவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் செய்திகள்  இப்பகுதி மக்களின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது .

ஜப்பான் ஒரு வளர்ந்த நாடு என்பதால் மக்களை பத்திரமாக வெளியேற்றி முகாம்களில் பத்திரமாக தங்க வைத்துள்ளது .

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இது போன்ற ஒரு விபத்து நிகழ்ந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு எந்த ஒரு அதிகாரியும் இது வரை சரியான பதிலை அளிக்கவில்லை .

அணுசக்தி துறை அதிகாரிகள் இதற்கு அளிக்கும் ஒரே பதில்  விபத்து நிகழாது எனவே மக்கள் அச்சப் படவேண்டியதில்லை என்பதுதான்  .

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள மக்கள் 

விபத்து நிகழ்ந்தால் மக்களை வெளியேற்றுவோம் என்பதை மக்களிடம் தெரிவித்தால் மக்கள் அணு உலையை எதிர்ப்பார்கள் என்று உணர்ந்து மக்களை திசை திருப்பும் வேலைகளில்   அதிகாரிகள் ஈடு பட்டு வந்தனர் .(கூடங்குளம் அணு உலையிலிருந்து 30  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் கிட்டத்தட்ட 10  லட்சம் மக்கள் வசிக்கின்றனர் .அணு உலையில் விபத்து நிகழ்ந்தால் இவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் )  .

 இதன் காரணமாக மக்கள் அணு உலைகளை மூடும் வரை தொடந்து போராடுவது என்ற முடிவோடு  தொடர்ந்து போராடி வருகின்றனர் .

35 கருத்துகள்:

M.R சொன்னது…

தமிழ் மணம் 2

உங்கள் கருத்து ஏற்க்க கூடியது தான் நண்பரே.

செங்கோவி சொன்னது…

மக்களின் அறியாமையை அரசே பயன்படுத்திக்கொண்டது துரதிர்ஷ்டம் தான்!

காட்டான் சொன்னது…

வளந்த நாடுகளே அணுவுலைகளை மூட உள்ளன உதாரணம் யேர்மணியில 2020க்குள்ள அனைத்து அணுவுலைகளையும் மூடுவதாக இருக்கிறது இந்தியாவில் சோலார் மின்சக்திய உபயோகிக்கலாமே... சூரியபகாவான் துனனையிருக்க பயமேன்..!!?? 

கடம்பவன குயில் சொன்னது…

//அணு உலைகள் வெடிக்க நேரிட்டால் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டிய நிலை வரும் அதை மீறி வசித்தால் கதிரியக்கத் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை சமீபத்தில்தான் இப்பகுதி மக்கள் உணர்ந்தார்கள் .//

விபத்து தலைமுறை தலைமுறையாக பாதிப்பை ஏற்படுத்துமே . அது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாதது ஏனோ.

தங்களைப் போன்றவர்களின் விழிப்புணர்வு பிரசார சேவைக்கு பாராட்டுக்கள் பாலா சார்.

பெயரில்லா சொன்னது…

Welcome back Baalaa...கலக்கல்...நம்ம ஏரியா பத்தி...நம்ம பிரச்னை பத்தி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மக்களின் அவதிகளையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சற்றுத் தாமதமானாலும், விழிப்புணர்வு வரத்தொடங்கி இருப்பது மகிழ்ச்சி!

Prabu Krishna சொன்னது…

அந்தக் காலத்தில் அந்த அளவுக்கு விழுப்புணர்வு இல்லாததும் காரணம்.

போராட்டம் யாராலும் கண்டுகொள்ளப்பாடாதது குறித்து வருத்தமாக உள்ளது.

Unknown சொன்னது…

அறியத்தந்தமைக்கு நன்றி சார்.

கோகுல் சொன்னது…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இது போன்ற ஒரு விபத்து நிகழ்ந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு எந்த ஒரு அதிகாரியும் இது வரை சரியான பதிலை அளிக்கவில்லை .
//
இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பாதுகாப்பானது என பிரதமர் சிலநாட்களுக்கு முன் நம் பிரதமர் சொல்லிருந்தார்!
இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
அப்படி இங்கே உள்ள அணு உலைகள் உண்மையிலேயே பாதுகாப்பானது தான் என்றால் விஷயம் தெரிந்த மக்கள் பிரதிநிதிகளை கூட்டி விளக்கமளிக்கவேண்டியதுதானே?
சரி உண்மையிலே பாதுக்காப்பானது என நிரூபித்தாலும் சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்தது போன்று இயற்கைச்சீற்றங்களைத்தாங்கும் சக்தி உள்ளது என்பதற்கு என்னை உத்திரவாதம்.அப்படி நடக்கும் பட்சத்தில் சீற்றத்தால் ஈற்படும் பாதிப்பை விட கதிரியக்கத்தால் ஈற்படும் பாதிப்பே அதிமாகும் அல்லவா?
முதலில் பாதுகாப்பு குறித்த அணைத்து விசயங்களையும் பூர்த்தி செய்துவிட்டு அப்பறம் அணு உலைகளை திறப்பது பற்றி அரசு யோசிக்கட்டும்!
நாங்கள் இருளில் கூட மூழ்கி இருக்கிறோம்(உயிரோடு).

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் நண்பர் பாலா
நீண்ட நாட்கள் பின்னர் வந்த உங்களை வரவேற்கிறேன்.
நாட்கள் கடந்து வந்தாலும் நல்ல விஷயத்தை கொண்டு வந்து இருக்கிறீர்கள்.
மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு பெருக வேண்டும்.
அணுமின் நிலையங்களை அடியோடு அழிக்கும் வரை போராட வேண்டும்.

கூடங்குளம் செய்திகளை சிறுவயதிலிருந்து உங்களைப் போல
கேட்டறிந்தவன் நானும்.
எந்த ஒரு தொழிற்சாலையும் இதுவரை சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு
பற்றி தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
கூடங்குளம் விசயத்தில் அதிகம் பாதிப்பு என்பதால்
நம் மக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே விழிப்புணர்வுடன் இருப்பதை
கண்கூடாக கண்டு வருகிறோம்.
இருப்பினும் மத்திய அரசு இதை கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.

நம் நாடு தொழிற்சாலை பாதுகாப்பு கொள்கையில் கும்பினியாரை
பின்தொடர்கிறார்கள். அவர்களின் கொள்கையில் தொழிற்சாலை
கலன்களுக்கு தான் முதல் முக்கியத்துவம் தருகிறார்கள். (SHE policy S-safety H-Health E-Environment)
சுற்றுப்புறச் சூழல் கடைசி பட்சம் தான்.
ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கையை பின்பற்ற வேண்டும்
அதற்கு சுற்றுப்புற சூழல் முதல் முக்கியத்துவம் தருகிறது. (EHS policy E-Environment H-Health S-Safety)

மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 13

போராட்டம் ஜெயிக்கட்டும்... அணு அகற்றட்டும்

அம்பாளடியாள் சொன்னது…

வளந்த நாடுகளே அணுவுலைகளை மூட உள்ளன உதாரணம் யேர்மணியில 2020க்குள்ள அனைத்து அணுவுலைகளையும் மூடுவதாக இருக்கிறது இந்தியாவில் சோலார் மின்சக்திய உபயோகிக்கலாமே... சூரியபகாவான் துனனையிருக்க பயமேன்..!!??

பயனுள்ள பகிர்வு. என்கருத்தும் இதுவே நன்றி சகோ பகிர்வுக்கு
வாழ்த்துக்கள் .

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ் மணம் 14 வது ஓட்டுப் போட்டுவிட்டேன் .

koodal kanna சொன்னது…

@koodal kanna

கூடல் பாலா சொன்னது…

@M.R நன்றி ரமேஷ்

கூடல் பாலா சொன்னது…

@செங்கோவி உண்மைதான்

கூடல் பாலா சொன்னது…

@காட்டான் இங்குள்ள தலைவர்களுக்கு எதன் மூலம் நல்ல மின்சாரம் என்பது முக்கியமல்ல .....எதன் மூலம் அதிக கமிஷன் கிடைக்கும் என்பதுதான் முக்கியம் ..குழ போட்டதற்கு நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில் அறியாமை கவலை தரும் விஷயம்தான் .....மக்கள் விழிப்புணர்வு அடைவதைத் தடுக்க அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் அதீத முயற்ச்சிகளும் இதற்கு காரணம் ..(விழிப்புணர்வு ஏற்படுத்துதல் எனும் வார்த்தைக்கு அரசு கூறும் பொருள் பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்துதல் )..நன்றி குயில் !

கூடல் பாலா சொன்னது…

@ரெவெரி இன்னும் வரும்

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் அப்படி ஒரு அரசைத்தான் நீண்ட நாட்களாக எதிர் நோக்கியிருக்கிறோம்

கூடல் பாலா சொன்னது…

@பன்னிக்குட்டி ராம்சாமி அரசு இதற்கு செவி சாய்த்தால் இன்னும் மகிழ்ச்சிதான்

கூடல் பாலா சொன்னது…

@பலே பிரபு அந்த வருத்தம்தான் எங்களுக்கும் நிறைய உள்ளது .....அதிலும் சிலர் போராட்டங்களைப் பற்றி தவறாகக் கூறுவது இன்னும் வருத்தம் ..(

கூடல் பாலா சொன்னது…

@கோகுல் பிரதமருக்கு நாம் சொல்வது எதுவுமே காதில் விழாது ...அவர்தான் காதை இறுகக் கட்டிவிட்டாரே !

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் அருமையான விளக்கமளித்துள்ளீர்கள் அண்ணா .....இன்று (27-8-2011 தூத்துக்குடியில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம் நடை பெறுகிறது )

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம் தங்கள் கருத்து உண்மையானால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்

கூடல் பாலா சொன்னது…

@அம்பாளடியாள் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி சகோதரி !

மகேந்திரன் சொன்னது…

நண்பர் பாலா
நான் இப்போது துபாயில் இருக்கிறேன்..
தூத்துக்குடிக்கு அடுத்த மாதம் தான் வருகிறேன்..
இந்த தருணத்தில் அங்கு இருந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கொஞ்ச நாள் கேப்புக்கு அப்புறம்!!

Riyas சொன்னது…

நல்ல பகிர்வு

தமிழ்மனம் 16

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அணு உலை பற்றி ஒரு விழிப்புணர்வு இன்னும் யாருக்கும் வரவில்லை .அணு உலை சம்பந்தமாக அரசியல் மட்டுமே இங்கு நடக்கிறது .

Unknown சொன்னது…

நல்ல பகிர்வு நன்றி!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நன்றி நன்றி நன்றி....

நிரூபன் சொன்னது…

சூழலுக்குத் தீமையினை ஏற்படுத்தும் அணு உலைகளை மூடுவதற்கான மக்களது போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,

ராஜா MVS சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.., பாலா..