11 அக்டோபர் 2011

கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது .இருப்பினும் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு சாதகமாக உறுதியான பதில்கள் கிடைக்காததால் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது .

இது மக்கள் போராட்டமாக இருந்தாலும் சில ஊடகங்களும் ,அணு உலை ஆதரவாளர்களும் இப்போராட்டம் மர்ம நபர்களால் தூண்டி விடப் படுகிறது என்று நடுநிலையாளர்களை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள் .இப்போராட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையில் உண்மை நிலவரத்தை உங்களுக்கு தருகின்றேன் .

கடந்த 11-9-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது .உண்ணாவிரதம் தொடங்கி 5  நாட்கள் கடந்த நிலையில் போராட்ட குழுவில் முக்கிய அங்கம் வகிக்கும் திரு உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டனர் .அத்திட்டத்தை உண்ணாவிரதமிருந்த 127  பேரிடமும் நாசூக்காக தெரிவித்தனர்.

ஆனால் அக்கணமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோர் போராட்டக் குழுவினரிடம் அணு உலையை மூடுவதற்கு முன்பாக எக்காரணம் கொண்டும் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என்று மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டனர் .

அன்றைய தினம் தமிழக அமைச்சரவைக் குழுவும் போராட்டக் குழுவினரை சந்திக்க தாலுகா தலை நகருக்கு வந்திருந்தனர் .அதே வேளையில் அமைச்சர் குழுவை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்வதற்கு போராட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கானோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர் .அதற்கு காரணம் சரியான முடிவு கிடைக்காமல் போராட்டக்குழுவினர் போராட்டத்தை முடித்துவிடக்கூடாது என்பதால்தான் .

அணு உலையை மூட அமைச்சர் குழு உறுதி கூறாவிட்டால் பேச்சு வார்த்தையை நிராகரித்துவிடுவோம் என்று போராட்டக்குழுவினர் பொதுமக்களிடம் உருதியளித்தபின்புதான் பேச்சு வார்த்தைக்கு பொது மக்களும் ,உண்ணாவிரதத்தில் ஈடு பட்டிருந்தோரும் அனுமதித்தனர் .

பலரும் நினைப்பது போல் உதயகுமாரோ ,அல்லது ஆயர்களோ போராட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது .இதற்கு காரணம் அணு உலையை மூடுவதற்காக எதையும் இழக்கத் துணிந்துள்ள பல்லாயிரக்கணக்கான கூடங்குளம் பகுதி மக்கள்தான் .

இவர்களை மீறி போராட்டக்குழுவினர் ஒரு பாதகமான முடிவை எடுத்தால் அது அவர்களுக்கே பெரிய பாதகமாக முடியலாம் .இதன் காரணமாகத்தான் தற்போது மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது .

தற்போது இப்பகுதி மக்களின் மன நிலை அணு உலையை மூடுவதற்கு முன்பாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கூடாது என்பதுதான் .

டிஸ்கி : கடந்த மாதம் நடை பெற்ற 11 நாள்  உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் எனது உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளானதால் மருத்துவர் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறேன் .

31 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தமிழ்மணம் இணைச்சுட்டேன்'

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நண்பரே... உண்மை நிலையை பகிர்ந்தமைக்கு நன்றி

SURYAJEEVA சொன்னது…

http://maniblogcom.blogspot.com/2011/10/blog-post_11.html

இந்த போராட்டத்திற்கு ஆதரவாய் வலை பதிவுகளில் முன்னை விட அதிக பதிவுகள் காணப் படுகின்றன... பாமரனின் வலை பூவும் செம தாக்கு தாக்குகிறது...

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ்

கூடல் பாலா சொன்னது…

@suryajeeva மகிழ்ச்சியான விஷயம்தான் அண்ணாச்சி ...

Unknown சொன்னது…

உங்கள் போராட்டம் வரவேற்க தக்கது தல!

இருதயம் சொன்னது…

அப்படியானால் போராட்டம் துவங்கிய கூடங்குளத்தில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் தற்பொழுது தீவீரமாக உள்ளார்கள் என் கேள்விபடுகிறோமே ..? அது உண்மையா ..? நண்பர் பதில் சொன்னால் மகிழ்வேன்.

இருதயம் சொன்னது…

// பலரும் நினைப்பது போல் உதயகுமாரோ ,அல்லது ஆயர்களோ போராட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது//

ஆம் .. உண்மை தான் ..

சம்பத்குமார் சொன்னது…

// அணு உலையை மூடுவதற்காக எதையும் இழக்கத் துணிந்துள்ள பல்லாயிரக்கணக்கான கூடங்குளம் பகுதி மக்கள்தான் .//

இந்த முறை போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் நண்பரே..

துணை நிற்கிறோம்

நன்றியுடன்
சம்பத்குமார்

மாய உலகம் சொன்னது…

போராட்டம் வெற்றி பெறட்டும்... ஓய்வில் இருந்தாலும் செய்திகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

கோகுல் சொன்னது…

தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!உடல்நலம் பார்த்துக்கொள்ளுங்கள்!
நேற்று டிஸ்கவரி தமிழில் NO NUCLEAR என ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.புகுஷிமா அணுஉலை வெடிப்பைப்பற்றி அதைப்பார்த்த யாரும் நமது தேசத்தில் அணு உலையை நிறுவ ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!

மகேந்திரன் சொன்னது…

தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தோழமைகளுக்கும்
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
கடந்த சில வாரங்களாக தென்மாவட்டங்களில் பவர் கட் அதிகமாகி உள்ளது..
கூடங்குளம் மூடியதால் தான் இது நடக்கிறது என்ற பேச்சை மக்களிடையே பரப்பியும் வருகிறார்கள்..
இது போன்ற தருணத்தில் தொடர் உண்ணாவிரதம் ஆரம்பித்து இருக்கும் தோழமைகளின் முடிவும் நோக்கமும் சரியானதே.

உடல் சோர்வின் நிலையிலும் பதிவேற்றி நிலையை விளக்கி சொன்ன உங்களுக்கு மிகுந்த நன்றிகள் நண்பரே.

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா நன்றி மாப்ள ....

கூடல் பாலா சொன்னது…

////இருதயம் சொன்னது…

அப்படியானால் போராட்டம் துவங்கிய கூடங்குளத்தில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் தற்பொழுது தீவீரமாக உள்ளார்கள் என் கேள்விபடுகிறோமே ..? அது உண்மையா ..? நண்பர் பதில் சொன்னால் மகிழ்வேன்./// உண்மைதான் .....ஆனால் அவசியமானது ....

கூடல் பாலா சொன்னது…

@சம்பத்குமார் தங்கள் ஆதரவுக்கு நன்றி .....போராட்டம் பலரையும் சென்றடைய பதிவர்கள் முக்கிய காரணம் ....

கூடல் பாலா சொன்னது…

@ மாய உலகம் நன்றி சகோ

கூடல் பாலா சொன்னது…

@கோகுல் படிப்படியாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது .......நன்றி கோகுல்

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் சில உண்மைகளை கூறியாக வேண்டியுள்ளது ....நன்றி அண்ணாச்சி......

Thennavan சொன்னது…

// ////இருதயம் சொன்னது…

அப்படியானால் போராட்டம் துவங்கிய கூடங்குளத்தில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் தற்பொழுது தீவீரமாக உள்ளார்கள் என் கேள்விபடுகிறோமே ..? அது உண்மையா ..?//


இது காலத்தின் கட்டாயம் நமக்கான அரசியலை நாமே செய்வோம்.

Unknown சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

முதலில் உங்கள் உடல் நிலை
தேறட்டும் பாலா

புலவர் சா இராமாநுசம்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மக்களுடைய உயிரைக் காப்பதைவிட இந்த அரசுக்கு முக்கியமான கடமைகள் நிறைய இருக்கிறதல்லவா..

இந்த சிக்கல் தொடர்பாக இணையபக்கங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு செய்தி..

இந்த அரசுதரப்பினரை கூடங்குளத்துல வந்து குடியிருக்கச் சொல்லுங்க..

என்பதுதான் நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

என் உணர்வுகளை

அடக்கம் செய்யவா அறிவியல் என்று..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

கொட்டித் தீர்த்தேன் நண்பரே..

Unknown சொன்னது…

பாலா வணக்கம் -
நல்ல வேலை பதிவுலகில் இருந்து நீங்கள் அந்தப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்து உண்மை நிலவரத்தைச் சொல்ல இருக்கிறீர்கள். இல்லையெனில், பல்வேறு யூகங்களையும், புனைவுகளையும் எடுத்து விட்டு இந்தப் போராட்டத்தின் பரந்து பட்ட ஆதரவை ஒடுக்கப் பார்க்கிறார்கள். நன்றி...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆதரவு!!!

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

வணக்கம்! உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு கூடங்குளத்தில் நிறைய அரசியல் கூத்துக்களைப் பார்க்கலாம்.

ராஜா MVS சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்... நண்பா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன் ஸாரி மக்கா, உங்கள் போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு என்றும் உண்டு...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லா ஓய்வெடுங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி...

paa.rangaraaj rajendhiran சொன்னது…

Dear Bala, You have done a great job by updating all latest information about the koodankulam issue.Please update with the hunger strike to be held at Coimbatore on 15.12.2011.Please take care of your health.