16 அக்டோபர் 2011

அணுமின் நிலையங்கள் வேண்டாம் பிரபலங்கள் வழக்கு

நன்றி : BBC

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராட்டம் தொடரும் நிலையில், நாட்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அணுமின் நிலையங்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, முன்னாள் அதிகாரிகள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பொதுநல வழக்குகளுக்கான மையம், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் உள்பட 14 பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

கோரிக்கைகள்

அரசு மற்றும் அணுசக்தி அமைப்பு சாராத சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து, தற்போதுள்ள மற்றும் உத்தேச அணுசக்தி நிலையங்கள், யுரேனிய சுரங்க வசதிகள் மற்றும் பிற அணுசக்தி எரிபொருள் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரம், பாதுகாப்பு குறித்தும், மாற்று எரிசக்தியுடன் ஒப்பிடுகையில் அணுசக்தி மின்சாரத்தின் சிக்கனத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆய்வுகள், சிக்கனத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் முடியும் வரை, உத்தேச அணுமின் நிலையங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, சுயாதீன அணுசக்தி நிபுணர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நலனுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக உள்ள சிவில் அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் 2010-ஐ சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அணு விபத்து நடந்தால், அணுசக்தி நிலையங்களை நடத்துவோர் மற்றும் விநியோகஸ்தர்களை முழுமையாகப் பொறுப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நடந்துள்ள ஒப்பந்தங்களை வெளிப்படையாக அறிவிப்பதுடன், எதிர்காலத்தில் நடக்கும் அணுசக்தி உலைகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களையும், அது தொடர்பான தொழில்நுட்பங்களையும் வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்துக்குப் பிறகு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அணுமின்சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இந்திய அணுமின் நிலையங்கள் 101 சதம் பாதுகாப்பானதாக உள்ளதாக அணுசக்தித் துறை செயலர் அறிவித்திருப்பது மக்களை திசை திருப்பும் செயல் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடங்குளத்தை காலிசெய்யும் அணு உலை பணியாளர்கள் 

12 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தகவலுக்கு நன்றி.

SURYAJEEVA சொன்னது…

அணு உலை மின்சாரம் என்பது பிணம், தோண்ட தோண்ட நாற்றம் அதிகமாகி கொண்டே இருக்கிறது... ஆனால் அதை வாசனை என்று பலர் சொல்வதும், பிறகு மூக்கை மூடி கொண்டு மௌனமாகி விடுவதும் நடக்கிறது..

shanmugavel சொன்னது…

நீதிமன்ற உத்தரவு நல்ல தீர்வைத்தரும் என்று நம்புவோம்.

Unknown சொன்னது…

நல்ல தகவல் அண்ணே

C.P. செந்தில்குமார் சொன்னது…

நல்ல தீர்ப்பு வரும்என்று நம்புவோம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்ல தீர்ப்பு கிடைக்கும் நம்புவோம், வெற்றி வாகை சூடுவோம்...

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி

ராஜா MVS சொன்னது…

தகவலுக்கு நன்றி... நண்பா...

நிரூபன் சொன்னது…

நல்லதோர் முயற்சி பாஸ்,
இம் முயற்சிக்காவது பலன் கிடைத்து கூடங்குளம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.

மகேந்திரன் சொன்னது…

நல்ல தீர்ப்பு வருமென்று காத்திருப்போம்..

M.R சொன்னது…

காத்திருப்போம் ,தகவலுக்கு நன்றி நண்பா

ரசிகன் சொன்னது…

தகவலுக்கு நன்றி. இதில சொல்லப் பட்டுள்ள விஷயங்கள்லாம் ரொம்ப ஷார்ப்பா இருக்கே, வழக்கை விசாரணைக்கு எடுத்துகிட்டாங்களா?

தாங்கள் களத்திலும் இறங்கி போராடுவதாக அறிகிறேன். வாழ்த்துகள். உங்கள் முயற்சிக்கு எனது ஆதரவு உண்டு.