10 ஜூலை 2011

இந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகள் திறக்கப் பட்டு அங்கிருந்த கற்பனைக்கெட்டாத பொக்கிஷங்கள் இன்று உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது .

இந்தியாவிலுள்ள பணக்கார கோவில்கள் வரிசையில் முதல் 5  இடங்களை பிடித்திருக்கும் கோயில்களை பார்ப்போம் .

1.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் 


108  வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலின் இன்றைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட  2  லட்சம் கோடி .

2 .திருப்பதி வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில்


இக்கோவில் தனது கட்டிடத்திலேயே 1  டன் தங்கத்தை கொண்டுள்ளது.வருடத்திற்கு சராசரியாக 650  கோடிக்கு மேல் வருமானம் வருகிறது .தினமும் சராசரியாக 60000  பேர் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள் .

3 .மகாராஷ்டிரா ஷிர்டி சாய்பாபா கோவில்




மும்பைக்கு அருகிலுள்ள இக்கோவிலில் 32  கோடி ரூபாய் அளவிற்கு தங்க நகைகள் உள்ளன .வருடத்திற்கு 350  கோடி அளவிற்கு வருமானம் உள்ளது

4 .மும்பை சித்தி விநாயகர் கோவில்



வருடத்திற்கு 48  கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் உள்ளது

5  .அமிர்தசரஸ் பொற்கோவில்


பஞ்சாபில் அமைந்துள்ள இக்கோவில் தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.தினமும் 40000  பேர் தரிசனத்திற்கு வருகிறார்கள்

மும்பை :பிளாஸ்டிக் பையை ஒழிக்க சூப்பர் ஐடியா !

வளரும் நாடுகளில் சுற்று சூழல் பாது காப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் கழிவுகள் .இதில் முக்கிய பங்கு வகிப்பது மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் .

மும்பையிலுள்ள கடைகளில் ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினால்கூட அதை பிளாஸ்டிக் பையில்தான் கொடுப்பார்கள் .இதன் காரணமாக மும்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் தேங்க ஆரம்பித்து விட்டன.

இதை தடுக்க எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பயனில்லை.இதை சட்டம் போட்டு தடுக்கவும் இயலவில்லை .

இந்நிலையில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க ஒரு அருமையான திட்டம் தீட்டப்பட்டுள்ளது .மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி இத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது .
 
இனி மும்பை கடைகளில் பொருட்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் பை கொடுக்கமாட்டார்கள் .கண்டிப்பாக பை தேவையென்றால் அதற்கு தனியாக காசு கொடுக்கவேண்டும் .


2  கிலோ அளவிற்கு பொருள் வைக்ககூடிய  பைக்கு 1  ரூபாய் 
3  கிலோவிற்கு 2  ரூபாய் 
5  கிலோவிற்கு 3 ரூபாய் 
அதற்குமேல் 5  ரூபாய் 
மிகப்பெரிய பைக்கு 7 ரூபாய் தனியாக செலுத்தவேண்டும் .


இதன் காரணமாக பொருள் வாங்க வீட்டில் இருந்து பை கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வர வாய்ப்பு உள்ளது.பிளாஸ்டிக் பயன்பாடும் குறிப்பிடத்தக்க அளவு குறையும் என எதி பார்க்கப்படுகிறது .


டிஸ்கி :தமிழ் நாட்டில் கன்னியாகுமரி  மாவட்டத்தில் மட்டும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை உள்ளது 

09 ஜூலை 2011

AK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் எதற்கு ஆகும் என்று நாம் சொல்வதுண்டு .


ஆனால் இங்கே சிலர் பயங்கர ஆயுதமான AK-47 ஐ மனித குரங்கின் கையில் கொடுத்துவிட்டு உயிர் தப்ப போராடுகிறார்கள் .



டிஸ்கி : எது எது யார்கிட்ட இருக்கணுமோ அவுங்ககிட்டதான் இருக்கணும். இல்லாட்டி அவஸ்தைதான் .ரைட்டா ...

ஊரை தூக்கி கடலில் போடும் காணொளி !

டைட்டானிக் கப்பல் எவ்வளவு பெரியது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இன்றும் டைட்டானிக் கப்பலை விட பெரிய சொகுசுக்கப்பல்கள்  பல பயன்பாட்டில உள்ளன .

இவற்றை துறை முகங்களில் நாம் காணும்போது ஆச்சரியத்தில் மெய் மறந்து விடுவோம் .ஆனால் இவ்வளவு பெரிய கப்பலை தொழிற்ச்சாலைகளில் வடிவமைத்து கடலில் விடப்படுவது எப்படி என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

08 ஜூலை 2011

சக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....




                உள்ள இறங்கு மாப்ள ஒரு குளியல் போட்டுறலாம் 

 

                           


                                 நான் இப்பத்தான் lkg  ல சேந்திருக்கேன் 

 

                                                         
                                                            என்னடா மொறைப்பு 

 
                       

               எப்படி ? கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்கேனா ?

 


 இதுக்கு மேல பேசுனீங்க ...அத்தனை பேரையும் பெட்ரோல்       ஊத்தி                   கொளுத்திடுவேன்  ஆமா 

 

                                         


                                                     ச்சீ  .......ஆசைய பாரு 

 

                           

                       மாப்ள நீ இனிமேல் எப்படி வேணும்னாலும் திட்டிக்க 

 
  ஹீரோவா ஆகணும்ன்னா நம்மள மாதிரி பெர்சனாலிட்டி வேணும்

 




இந்த பல்ல பாத்துதான் பல பொண்ணுங்க மயங்கியிருக்காங்க 

 



                                          ஏய் ...நீ ரொம்ப அழுக்கா இருக்க 

 



                              பான்பராக் கரைதான் வேற ஒண்ணுமில்ல 

 



நாக்கை நீட்ட சொல்றான் எப்படின்றத சொல்லி குடுக்க மாட்டேன்றான் 

 


                            சக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....