வளரும் நாடுகளில் சுற்று சூழல் பாது காப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் கழிவுகள் .இதில் முக்கிய பங்கு வகிப்பது மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் .
மும்பையிலுள்ள கடைகளில் ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினால்கூட அதை பிளாஸ்டிக் பையில்தான் கொடுப்பார்கள் .இதன் காரணமாக மும்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் தேங்க ஆரம்பித்து விட்டன.
இதை தடுக்க எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பயனில்லை.இதை சட்டம் போட்டு தடுக்கவும் இயலவில்லை .
இந்நிலையில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க ஒரு அருமையான திட்டம் தீட்டப்பட்டுள்ளது .மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி இத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது .
இனி மும்பை கடைகளில் பொருட்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் பை கொடுக்கமாட்டார்கள் .கண்டிப்பாக பை தேவையென்றால் அதற்கு தனியாக காசு கொடுக்கவேண்டும் .
2 கிலோ அளவிற்கு பொருள் வைக்ககூடிய பைக்கு 1 ரூபாய்
3 கிலோவிற்கு 2 ரூபாய்
5 கிலோவிற்கு 3 ரூபாய்
அதற்குமேல் 5 ரூபாய்
மிகப்பெரிய பைக்கு 7 ரூபாய் தனியாக செலுத்தவேண்டும் .
இதன் காரணமாக பொருள் வாங்க வீட்டில் இருந்து பை கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வர வாய்ப்பு உள்ளது.பிளாஸ்டிக் பயன்பாடும் குறிப்பிடத்தக்க அளவு குறையும் என எதி பார்க்கப்படுகிறது .
டிஸ்கி :தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை உள்ளது
14 கருத்துகள்:
நல்ல யோசனை !! அமல்படுத்தினால் நல்லதுதான்.
ஊட்டியில் கூட பிளாஸ்டிக் பைகளுக்கு தடை இருக்கிறது.
nalla irruku
மலேசியாவில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் இந்த திட்டம் நிறைவேற்ற படுகிறது நண்பா ..நம்ம ஊரில் தினமும் செய்தால் சிறப்பா தான் இருக்கும்
@அசோக் குமார் \\\ஊட்டியில் கூட பிளாஸ்டிக் பைகளுக்கு தடை இருக்கிறது.\\\ நல்ல விஷயம்தான்
வணக்கம் சகோ, இது பதிவுக்கான பின்னூட்டம் அல்ல,
உங்களின் மின்னஞ்சல் முகவரியினைப் பெற முடியாத காரணத்தால், பின்னூட்டம் மூலமாக இடையூறு செய்கிறேன், மன்னிக்கவும்.
நண்பேன்டா தொடர்பதிவினைத் தொடர உங்களையும் அன்போடு அழைகிறேன்.
@rishikesav நன்றி ரிஷிகேசவ்
@ரியாஸ் அஹமது நல்ல ஆலோசனைதான்
@நிரூபன் அழைப்பிற்கு மிக்க நன்றி .எனது ஆதரவு எப்போதும் உண்டு .
பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் சகோ, சுற்றுச் சூழல் பாதுகாப்பினை மெருகேற்ற ப்ளாஸ்டிக் தடையும் ஓர் அருமையான திட்டம்.
வெகு விரைவில் அமுல்படுத்தினால் தான்- மண் வளத்தினைப் பேணுவதற்குச் சிறப்பாக இருக்கும்.
சரியான யோசனை தான்
காசு கொடுத்து வாங்கணும்னா
கொஞ்சமாவது குறையும்னு நம்பலாம்!!
வெளியே கடைக்கு போகும் போது
வீட்டில் இருந்து ஒரு துணிப்பை
எடுத்துச் செல்ல பழகுவோம்!!
மகேந்திரன் மஞ்சள் பையோடு கிளம்பிட்டீங்களா? வாழ்த்துக்கள்...
பாலா..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..நேரமிருந்தால் என் பதிவுகளையும் வாசியுங்கள்..
http://reverienreality.blogspot.com/
கருத்துரையிடுக