10 ஜூலை 2011

இந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகள் திறக்கப் பட்டு அங்கிருந்த கற்பனைக்கெட்டாத பொக்கிஷங்கள் இன்று உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது .

இந்தியாவிலுள்ள பணக்கார கோவில்கள் வரிசையில் முதல் 5  இடங்களை பிடித்திருக்கும் கோயில்களை பார்ப்போம் .

1.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் 


108  வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலின் இன்றைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட  2  லட்சம் கோடி .

2 .திருப்பதி வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில்


இக்கோவில் தனது கட்டிடத்திலேயே 1  டன் தங்கத்தை கொண்டுள்ளது.வருடத்திற்கு சராசரியாக 650  கோடிக்கு மேல் வருமானம் வருகிறது .தினமும் சராசரியாக 60000  பேர் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள் .

3 .மகாராஷ்டிரா ஷிர்டி சாய்பாபா கோவில்




மும்பைக்கு அருகிலுள்ள இக்கோவிலில் 32  கோடி ரூபாய் அளவிற்கு தங்க நகைகள் உள்ளன .வருடத்திற்கு 350  கோடி அளவிற்கு வருமானம் உள்ளது

4 .மும்பை சித்தி விநாயகர் கோவில்



வருடத்திற்கு 48  கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் உள்ளது

5  .அமிர்தசரஸ் பொற்கோவில்


பஞ்சாபில் அமைந்துள்ள இக்கோவில் தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.தினமும் 40000  பேர் தரிசனத்திற்கு வருகிறார்கள்

11 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான தரிசனப் பகிர்வ்க்கு நனறி.

கிராமத்து காக்கை சொன்னது…

பணக்கார கோவில்கள் உள்ள நாட்டில்
ஏழைமக்கள் அதிகம் என்ன கொடுமை சார்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாங்க இன்னும் ஏழைங்கதான் சாமீ......!!!!

இதுக்கு ஒரு வழி உண்டா காண்பி.....????

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி நன்றி ராஜ ராஜேஸ்வரி

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை என்ன பண்ணலாம் ?

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ தமிழ் நாட்டின் பணக்கார பதிவரே இப்படி சொன்னால் ???!!!

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அமர்க்களம்
அருமையான
ஆன்மீக
வருமானத்
தகவல்கள்
நண்பரே

நிரூபன் சொன்னது…

ஆன்மீகம் எனும் பெயரின் பின்னே உள்ள அல்லது மறைந்துள்ள நிதியினை எடுத்துப் பொதுச் சேவைக்குப் பயன்படுத்தினால் நாட்டில் உள்ள வறுமையின் சிறு பங்கினையாவது இல்லாதொழிக்கலாம்.

ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.

Unknown சொன்னது…

முதலாவதி கோவில் பற்றிய அண்மைய செய்திகள் தான் தலையை சுற்ற வைக்கிறது பாஸ்

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்
திருப்பதி
மகாராஷ்டிரா ஷிர்டி சாய்பாபா கோவில்

இந்த தலங்களை பார்க்கிற பார்த்திருக்கிறேன்.

ஏனையவற்றை பார்க்க இறைவன் அருள் செய்யட்டும்..

ஆனா இந்த புதையலுக்கு அப்புறம் அந்த
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை திரும்ப பார்க்கனும் னு நினைக்கிறேன்.

பார்க்கலாம் .. எல்லாம் சிவன் செயல்

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

மகேந்திரன் சொன்னது…

கிடைத்த பொருளை
நல்ல காரியங்களுக்கு
பயன்படுத்தலாமே!!
அப்படியே பூட்டி வைத்து
என்ன பயன்??