29 மே 2011

அணு உலைகளை மூடக் கோரி 1,60,000 பேர் ஊர்வலம் .

      கடந்த 11-3-2011 அன்று ஜப்பானில் நடந்த அணு உலை விபத்தால் அந்நாட்டில் கடும் சுற்று சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன .அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் .

   இதை தொடர்ந்து இதே போன்ற பாதிப்புகள் தங்கள் நாட்டிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கருதி பல்வேறு நாடுகள் தங்கள் அணுமின் திட்டங்களை கை விடத் தொடங்கியுள்ளன .

   பல நாடுகளில் சுற்று சூழல் ஆர்வலர்கள் தங்கள் நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகளை மூட வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் .

        இதன் ஒரு பகுதியாக நேற்று (28-5-20011) ஜெர்மனியில்  சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் அணு உலைகளுக்கு எதிரான கோஷங்களுடன் பெர்லின் ,ஹம்பக் .முனிச் ஆகிய நகரங்களின் வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர் .

      இதை தொடர்ந்து பேட்டியளித்த Chancellor ஏஞ்சலா மெர்க்கல் ஜெர்மனி அணு உலைகள் அனைத்தையும் மூட தயாராக இருப்பதாகவும் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஜூன் 6 ம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறினார் .

        ஏற்கெனவே 10  வருடங்களுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூட ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது  .ஆனால் போராட்ட காரர்களின் கோரிக்கை அணு உலைகளை உடனடியாக மூடவேண்டும் என்பதே .

4 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஏற்கெனவே 10 வருடங்களுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூட ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .ஆனால் போராட்ட காரர்களின் கோரிக்கை அணு உலைகளை உடனடியாக மூடவேண்டும் என்பதே//

வரவேற்க படவேண்டிய முடிவு...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹே ஹே ஹே ஹே வடையும் எனக்குதானா...?

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ
yes no doubt.vada was captured by you .

மகேந்திரன் சொன்னது…

அணுசக்தி மானிடற்கு பலவகையில்
துன்பத்தை தரும் என்கையில்
அதை அறவே ஒழிப்பது நல்லது.
மாற்று சக்தியை பயன்படுத்தி மின்சாரம்
தயாரிக்கலாமே?!!!!