24 மே 2011

சபாஷ் ஜப்பான் !புதிய அணு உலைகளுக்கு தடா !

      ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் ஜப்பான் மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளார் .10-05-2011 அன்று அவர் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள செய்தியில் இனி ஜப்பானில் எக்காரணம் கொண்டும் புதிய அணு உலைகள் அமைக்கப்படாது என்றும் இதனால் உண்டாகும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் .இதை உலகெங்கிலும் உள்ள சுற்று சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளார்கள் .
      
   ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்த அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சை நிறுத்த இது வரை எந்த வழியையும் கண்டுபிடிக்க இயலாததால் ஜப்பான் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இது தவிர மேலும் பல அணு உலைகள் ஆபத்தில் இருப்பதால் அவற்றை மூடக்கோரி அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருவதும் ஜப்பான் அரசை சிந்திக்க வைத்துள்ளது .
      

      ஏற்கெனவே ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் புதிய அணு உலை திட்டங்களை கை விட்டுள்ளன .இதற்கிடையில் இந்தியப் பிரதமர் ஒவ்வொரு நாடுகளாக சென்று அணு உலைகள் அமைக்க உதவி கோரி வருகிறார் .சுற்று சூழல் பாதுகாப்பு (?)அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மகாராஷ்ட்டிரா மாநிலம் ஜைத்தாபூரில் பத்து அணு உலைகளை கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக இருக்கிறார் . இவர்கள் திருந்தமாட்டார்கள் என்றே தோன்றுகிறது .

கருத்துகள் இல்லை: