22 ஜூன் 2011

கூடங்குளம் அணு உலை தலைமை வடிவமைப்பாளர் மரணம் .

ரஷ்யாவில் நேற்று நடந்த விமான விபத்தில் 44  பேர் பலியாயினர் .

மாஸ்கோவிலிருந்து petrojavotsk  க்கு சென்ற விமானம் தரையிறங்கும்போது வெடித்து சிதறியது .

இவ்விபத்தில் பலியான 44  பேரில் பெரும்பாலோனோர் அணு விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது .


இவ்விபத்தில் தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் VVER  மென்னீர் ரக அணு உலையின் தலைமை வடிவமைப்பாளர் செர்கே ரிசொவ் பலியானார் .

இவரின் மரணம் ரஷ்ய அணு விஞ்ஞானிகளையும் இந்திய அணு விஞ்ஞானிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .


மூன்று வருடங்களுக்கு முன்னர் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் தலைமை இயக்குனர் சுனில் குமார் அகர்வால் திடீர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார் .
கடந்த ஆண்டு உசிலம் பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இயக்குனராக இருக்கும் காசிநாத் பாலாஜி படுகாயமடைந்தார் .சம்பவத்தில் அவரது மனைவி உயிரிழக்க நேரிட்டது .

சில வருடங்களுக்கு முன்பாக ஜூனியர் விகடன் பத்திரிகையில் கொல்ல வரும் கூடங்குளம் எனும் கட்டுரை வெளிவந்துகொண்டிருந்தது .அப்போது அது சற்று வேடிக்கையாக இருந்தது .

கூடங்குளம் அணு உலை முக்கிய அதிகாரிகளை மட்டும்  கொல்லுமா அல்லது தமிழக மக்களையும் கொல்லுமா என்பது தெரியவில்லை .

13 கருத்துகள்:

Unknown சொன்னது…

வருத்தமான செய்தியை ஒரு எச்சரிக்கையோடு பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுகள் ,இறந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

வருத்தமான செய்தி...

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி மாப்ள!

Admin சொன்னது…

கூடங்குளம் பற்றிய செய்திகளை படிக்கும்பொழுதேல்லாம் கல்லூரியில் கூடங்குளம் வரக்கூடாது என்பதற்கான காரணத்தையும், அணுமின் நிலையங்களால் ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் செமினார் எடுத்தது தான் நினைவிற்கு வருகிறது. ஜப்பானை பார்த்தும் கூட இன்னும் அணுமின் நிலையம் தொடர்பாக அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது.

கூடல் பாலா சொன்னது…

இது பற்றி நான் ஒரு முறை கூடங்குளம் மக்களிடம் வினவியபோது அணு உலை பகுதிக்குள் ஒரு கோவில் இருப்பதாகவும் அந்த கோவில் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக கோவிலில் உள்ள சாமிதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று கூறுகிறார்கள் ! குற்றம் ! நடந்தது என்ன ?

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமதுஆமாம்... .இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ ?

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakashஆமாம்.....நன்றி

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம்வந்ததுக்கு நன்றி மாம்சே

சக்தி கல்வி மையம் சொன்னது…

இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ?

மகேந்திரன் சொன்னது…

எதேச்சையாக நடக்கும்
சம்பவங்கள் தான்.
இருப்பினும் எச்சரிக்கை மணி அடிக்கும்
துன்பகரமான சம்பவங்கள்.
எத்தனையோ தொழில்நுட்பவாதிகள் இருந்தாலும்
ஒரு தொழிற்சாலையை வடிவமைத்த பொறியியலாளர்கள்
இருந்தால் மட்டுமே அந்த தொழிற்சாலை ஓட ஆரம்பித்து
சிலகாலங்கள் எந்த விதமான பிரச்சனை வந்தாலும்
சரி செய்ய எதுவாக இருக்கும்.

வெறும் மூன்று சதவிகித மின்சார விளைச்சலுக்காக
ஏன் இத்தனை ஆபத்தடங்கிய தொழிற்சாலையை
தொடங்க வேண்டும்??!!
சிந்தியுங்கள் ஆட்சியாளர்களே.......
மாற்று வழியை யோசியுங்கள் ...........

உயிருக்கு உலைவைக்கும்
எமனை தீனிபோட்டு வளர்ப்பதா???!!!!


நல்ல பதிவுக்கு
என் சிரம்தாழ்ந்த நன்றிகள்
நண்பரே.

அன்பன்
மகேந்திரன்

நிரூபன் சொன்னது…

சுனில் குமார் அகர்வால் அவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்,
வருத்தத்திற்குரிய செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க சகோ.

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன்நீங்கள் சொல்வது சரியான கருத்து .நம் நாட்டில் மரபு சாரா எரி சக்தி வளங்கள் ஏராளம் இருந்தபோதும் அணு உலைதான் தீர்வு என ஆட்சியாளர்கள் பிடிவாதம் பிடிப்பது ஏனோ தெரியவில்லை ..

பெயரில்லா சொன்னது…

கிடைக்கும் தகவல்களை உற்று நோக்கின் ஒரு உண்மை விளங்கும். அவர்களின் மரணத்திற்கும், அணு உலையினால் எற்படும் ஆபத்திற்கும் சம்மந்தமில்லை என்பது புலனாகும்.