மனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின்
விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு காரணம் மனித மூளையின்
சக்திதான் .
இதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர்
திறமையற்ற மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே
பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்) தங்கள்
மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள்
.
ஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை
கூறுகிறது .
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட
ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான்
எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள் .
நரம்பு
உயிரியல் பேராசிரியர்" சைமன் லாலின்" மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும்
திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும் மனிதனால்
தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும்
கூறுகிறார் .
மூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும்
மிகுந்த அறிவாளிகள் மூளையில் இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும்
குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும்
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை
பேராசிரியர் "எட் புல்மோர்" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில்
இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால் கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற
பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப்
பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக பரிமாற்றம் செய்யப்
படுவதாகவும் கூறுகிறார் .
சிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு
திறனுக்கும் (IQ ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் .
இவர்கள்
ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம்
மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .
இதைத்தான் நம்மவர்கள்
"சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ .
நன்றி :
Dailymail ,UK.
27 கருத்துகள்:
வணக்கம் சகோ, மூளையின் எடையினைப் பற்றிய சந்தேகம் உள்ள பலருக்கு, அதனை நிவர்த்தி செய்யும்- அறிவியல் விளக்கப் பதிவு அருமை சகோ.
நல்ல பகிர்வு.
புதிய தகவல்.இதுவரை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்றுதான் சொல்லி வந்தார்கள்.
உடலையும் மனதையும் நல்ல முறையில் பயன்படுத்தினால் மூளையின் இழைகள் சரியாக இயங்கும் என்பதை அருமையாக ப்திவில் குறிப்பிட்டுள்ளீர்கள்... இதற்கு அடிப்படை தியானமும், உடற்பயிற்சியும் நல்நூலகளை பயில்வதிலிம் அடங்கும். நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே...
உள்ள இவ்வளவு விஷயம் இருக்கா புதுமையான தகவல்
நல்ல தகவல்...பகிர்வுக்கு நன்றிகள் !!
@saro வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரோ !
@FOOD மிக்க நன்றி !
@நிரூபன் இது புதிய விளக்கம்தான்...இன்றுதான் வெளியானது ..
@ஸ்ரீராம். ரொம்ப நன்றி அண்ணா !
@shanmugavel ஆம் ...இத்தகவல் இன்றுதான் வெளியானது ..
@மாய உலகம் நல்ல ஆலோசனைகள்...நன்றி !
@கிராமத்து காக்கை ஹாட் நியூஸ் ...
@மைந்தன் சிவா நன்றி மாப்ள !
நல்லதொரு விடயம் பகிர்வுக்கு நன்றி
இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .
இதைத்தான் நம்மவர்கள் "சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ .
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
nice info
வழக்கம் போல் அருமையான பதிவு...கலக்குங்கள்...
இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .
அப்பாடி ஆறுதலாக ஒரு விஷயம் இருக்கே
என்னமோ போங்க...கொஞ்ச கொஞ்சமா என்னை புத்திசாலி ஆக்கிட்டே வர்றீங்க...
Reverie
அறிவுத்திறன் மிளிரும் பகிர்வு. வாழ்த்துகள்.
@மதுரன் நன்றி மதுரன் !
@Reverie கலக்கிட்டா போச்சி ...
மூளை பற்றிய சிறப்பான தகவல் பாலா !
நல்ல தகவல் சகோ . அப்ப நம்மகிட்ட இருக்கிறது இப்புட்டு தான
பயனுள்ள நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் சகோ .
நன்றி பகிர்வுக்கு .எனது தளத்தில் ஒரு கவிதையும்
சோகப் பாடலும் உங்கள் கருத்துக்காக் காத்துக்கிடக்கு
சகோ .பாடலுக்கு மறக்காம உங்க ஓட்டப் போட்டுடுங்க.
நன்றி சகோ .......
உண்மைதான் மூளையின் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கே யோகா பயிற்சி சிறந்தது. அடுத்ததாக செய்பவர்கள் கூட மூளையின் சக்தியை அதிகரிக்கச் செய்தவர்கள் என்றே நம்புகின்றேன். ஐரோப்பிய தொலைக்காட்சிகளில் இவர்களின் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன். இவற்றைப் பார்க்கும் போது கடவுளையே சந்தேகிக்க வேண்டிய நிலமை ஏற்படுகின்றது.
கருத்துரையிடுக