05 ஆகஸ்ட் 2011

கட்டப் பட இருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடம் : ருசிகர தகவல்கள் .

உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை இது வரை துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா என்ற கட்டிடம் இது வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது .

ஆனால் அதன் பெருமை தற்போது முறியடிக்கப் பட உள்ளது .சவூதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரத்தில் 1000  மீட்டர் (1  கிலோ மீட்டர் ) உயரத்தில் கிங்டம் டவர் என்ற கட்டிடம் கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன .

கட்டிடத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டு இதர வேலைகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டு வருகின்றன .

                                                             கட்டிடத்தின் மாதிரி

இக்கட்டிடத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் .

1. 1000 மீட்டர் உயரம் (1  கிலோ மீட்டர் )

2 .5400  கோடி ரூபாய் செலவில் கட்டப் படுகிறது
 
3 .மொத்தம் 5,30,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது
 
4.நான்கு பருவ காலங்களையும்      உணரும் வகையிலான ஹோட்டல்    ஒன்றும்  இக்கட்டிடத்தில்  அமைகிறது
 
5 .மேலே செல்ல வசதியாக 59  லிப்டுகள் அமைக்கப்பட உள்ளன
 
6 .லிப்டுகள் வினாடிக்கு 10  மீட்டர் வேகத்தில் இயங்கும்


                                                உலகின் உயரமான கட்டிடங்கள்

டிஸ்கி : செலவை யாராவது ஏற்றுக் கொண்டால் அடுத்த பதிவர் சந்திப்பை இங்கு நடத்தலாம் ?!

25 கருத்துகள்:

கிராமத்து காக்கை சொன்னது…

அருமையான தகவல் கொடுத்தீங்க அப்படியே
எங்களை நேரில் கூட்டிட்டு போய் கண்பிச்சா நல்லா இருக்கும்

M.R சொன்னது…

டிஸ்கி : செலவை யாராவது ஏற்றுக் கொண்டால் அடுத்த பதிவர் சந்திப்பை இங்கு நடத்தலாம் ?!

அப்பிடி யாராவது ஏத்துக்கிட்டாங்கன்னா என்னையும் அழைத்து செல்லுங்கள்

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை முதலில் கட்டி முடிக்க விடுவோம் ...

கூடல் பாலா சொன்னது…

@M.R அட நீங்களும் நம்ம குரூப்புதான் !

Unknown சொன்னது…

மாப்ள விஷயம் சூப்பர் ...கடைசியா சொன்னியே டிஸ்கில அது யார மனசுல வச்சி...வேணும்னா அம்மாகிட்ட கோரிக்கை வச்சி பாப்போம்...ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த பதிவர் சந்திப்புக்கு நான் கலந்துக் கொள்ள வில்லை..
எனக்கு உயரம்ன்ன பயம்...

மகேந்திரன் சொன்னது…

உயரத்துக்கு அளவே இல்லை
பணத்தை எங்கே கொண்டு போடணும்னு தெரியாத
நாடுகள் இப்படிதான் கன்னாபின்னான்னு செலவு செய்றாங்க....

ஆனாலும் பார்க்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு
அடுத்த பதிவர் சந்திப்பை இங்கு நடத்தினால் நல்லா தான் இருக்கும்
என்னையும் கூட்டிட்டு போய்டுங்க நண்பரே...
என்னோட முதல் பதிவர் சந்திப்பு சௌதி ல இருக்குறதில ஒரு நப்பாசை தான்....

சக்தி கல்வி மையம் சொன்னது…

அட அறிய தகவல்..
நன்றி மாப்ள..

பதிவர் சந்திப்பா எங்க?எங்க?

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம் அட ...நல்ல ஐடியாதான் !

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் அந்த பயம்ல்லாம் இல்ல .......செலவை நம்ம தலைல கட்டிடப்புடாதுன்னுதானே ஓடுறீங்க ....

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் அய்யய்யோ ......நான் கூட்டிட்டுப் போறதா சொல்லவே இல்ல ...

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! உங்க காதுலயும் விழுந்திடுச்சா .......முதல்ல துட்டு செலவழிக்க யாராவது சிக்குறாங்களான்னு பாப்போம் ...

K.s.s.Rajh சொன்னது…

சுவாரஸ்யமான தகவல் பகிர்ந்து இருக்கிறீங்க நன்றி

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அருமையான தகவல்களை
அள்ளி தந்த விதம் அருமை
மாற்றம் ஒன்றே மாறாதது
இதுவும் கடந்து போகும்

பெயரில்லா சொன்னது…

போனா உள்ள விடுவாங்களான்னு தெரியல...ஒழுங்கா exit விசால வெளிய வந்த ஞாபகம் இல்ல...
உங்க படத்திலே டொரோண்டோ CN Tower ...மலேசியா பெட்ரோனாஸ் லாம் மிஸ் ஆகுது ..ஏன்னு தெரியல...
ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்...உடனே துபைலையும் ..சீனாவுலயும் உடனே மேல இரண்டு கம்பிய நீட்டி உயரத்தை கூட்டிருவாங்க சீக்கிரம்... btw .. நல்ல பதிவு பாலா...இவ்வளவு எழுதிட்டு இத சொல்லனைனா கோவிச்சுக்குவீங்கள்ளே...

மாய உலகம் சொன்னது…

எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சந்திப்ப அங்க நடத்திருவோம்...

ராஜா MVS சொன்னது…

கட்டட்டும்.., கட்டட்டும்..,
சந்திப்ப மொட்டமாடில ஏற்ப்பாடு செய்தால் மறந்துடாம என்னையும் கூப்பிடுங்க.., பாலா

ஹேமா சொன்னது…

பணக்கார நாடுகளின் உயரம் கட்டிடங்களிலும் !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உயரமான பகிர்வுக்கு உன்னதமான பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தகவலுக்கு நன்றிங்கோ.....!!!

M.R சொன்னது…

FIRST TAMIL NADU ARASU PASUMAI VEEDU KADAIKITTUM. APRAM DUBAI SAUDI MERI KATTUVOM OKAY

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

எம்புட்டு பெரிசு கட்டடம்...ஆஆஆஆ...

koodal kanna சொன்னது…

அருமையான தகவல் கொடுத்தீங்க அப்படியே
எங்களை நேரில் கூட்டிட்டு போய் கண்பிச்சா நல்லா இருக்கும்.அருமையான தகவல்களை
அள்ளி தந்த விதம் அருமை
மாற்றம் ஒன்றே மாறாதது
இதுவும் கடந்து போகும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டிஸ்கி ஓவ்வர் லொள்ளுய்யா