07 ஆகஸ்ட் 2011

மாரடைப்பை ஏற்படுத்தும் டீசல் புகை -அதிர்ச்சி தகவல்

ஸ்காட்லாந்து நாட்டின் தலை நகரான எடின்பர்கில் அமைந்துள்ள எடின்பர்க் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் உலக அளவில் அதிக மாசடைந்த நகரங்களில் சில ஆராய்சிகளை மேற்கொண்டனர் .

அதிக  அளவு நகரங்களில் காற்றின் மாசு பாடுக்கு காரணமாக இருப்பது டீசல் மூலம் உருவாகும் புகை எனக் கண்டறிந்துள்ளார்கள் அவர்கள் .இந்த டீசல் புகையில் உள்ள நுண் துகள்கள் இதயத் திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களை எளிதாக சிதைக்கக் கூடியவை ,இதன் காரணமாக நரம்புகள்,தமனிகள் பாதிப்பு ,இரத்த உறைவு ,மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .

எனவே இதய நோய் உள்ளவர்கள் டீசல் வாகனங்கள் அதிகமாக நடமாடும் சாலைகளில் அதிக நேரம் செலவழிக்க கூடாது எனவும் மிகவும் பர பரப்பான சாலைகள் நிறைந்த பகுதிகளில் குடியிருக்க வேண்டாம் எனவும் பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் இணை இயக்குனர்  ஜெர்மி பியர்சன் கூறுகிறார் .

இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் டீசல் புகை மாசு எதன் மூலம் அதிகம் ஏற் படுகின்றன என்பதையும் கண்டறிந்துள்ளனர் .

  • அதிக பாரத்தை சுமக்கும் டிராக்டர்கள் மற்றும் ட்ரைலர்கள்  
  •  நீண்ட தூர லாரிகள் 
  • குப்பை லாரிகள் 
  • பேருந்துகள் 
  • மின்சார ஜெனரேட்டர்கள் 
  • போக்கலைன்கள் 
  • கடல்வழி ஊர்திகள் 
மேற்கூறிய வாகனங்களுடன் இணைந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாரடைப்பு ,பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வர அதிக வாய்ப்பிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் .


டீசல் புகை மாசை குறைக்க வேண்டுமானால் பழுதடைந்த வாகனங்களை இயக்கக் கூடாது எனவும் ,காலாவதியான வாகனகளை அப்புறப் படுத்தவேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார்கள் .

32 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

கருத்தில் கொள்வார்களா சம்மந்தப்பட்டவர்கள்?

கிராமத்து காக்கை சொன்னது…

சென்னையில் வாகனங்கள் அதிகமாக நடமாடும் சாலைகள் தான் அதிகம் அதில் தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் இதை கட்டுபடுத்த வழிதான் என்ன

Unknown சொன்னது…

டீஸல் முதல் அணுகுண்டு வரை எத்தனை விசயத்துக்கு பயப்பட வேண்டியதா இருக்கு

நாய் நக்ஸ் சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நாய் நக்ஸ் சொன்னது…

http://naai-nakks.blogspot.com/2011/08/blog-post.html

shanmugavel சொன்னது…

விழிப்புணர்வு தகவல்.நண்பர்கள்தின வாழ்த்துக்கள்.

M.R சொன்னது…

நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்

பகிர்வுக்கு நன்றி

பாலாவிற்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கூடல் பாலா சொன்னது…

@கோகுல் கருத்தில் கொள்வார்களா சம்மந்தப்பட்டவர்கள்? ....ரிப்பீட்டு ....நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கோகுல் !

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை கொஞ்சம் கஷ்டந்தான் ....நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ப்ரதர் !

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது எல்லாம் பய மயம் ....நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மாப்ள !

கூடல் பாலா சொன்னது…

@NAAI-NAKKS சேம் டு யு ப்ரதர் ...

கூடல் பாலா சொன்னது…

@shanmugavel தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் அண்ணா !

கூடல் பாலா சொன்னது…

@M.R நன்றி ....தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ரமேஷ் !

காட்டான் சொன்னது…

மாப்பிள டீசலுக்கு மாற்றான வாகணங்க்ள் வர இருக்கு... அதுவும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு ஏற்றது.. என்ன கொஞ்சகாலம் பிடிக்கும்.. அதுவரை...!!?

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

புகை நமக்கு பகை

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மகேந்திரன் சொன்னது…

அறிந்துகொள்ளவேண்டிய படைப்பு
நாம் தினமும் சுவாசிக்கும் காற்றில்
நம்மையும் அறியா நச்சுப் பொருட்கள் கலந்திருக்க
காரணமான சில பல ஆதாரங்களில் டீஸல் புகையும் ஒரு பெரிய
காரணம். சம்பத்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம்
நினைத்தால் இதை சரிசெய்ய முடியும்..
செய்வார்களா????

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே.

கூடல் பாலா சொன்னது…

@காட்டான் கொஞ்சம் சிக்கல்தான் ....நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

sakthi சொன்னது…

நல்ல கருத்து நண்பரே ,
அரசு போர் கால நடவடிக்கை மற்றும் கடுமையான சட்டம் போட்டு கட்டுபடுத்த வேண்டும்
நண்பர்கள் அனைவர்க்கும்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நட்புடன் ,
கோவை சக்தி

ராஜா MVS சொன்னது…

தமிழ் நாட்டில் ஓடும் அரசு பேருந்தை மாற்றினாலே பாதிப்பு பாதியாக குறையும்.., நண்பா..,

நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி பாலா.

அனைவர்க்கும்
நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Yazhini சொன்னது…

சுற்று சூழலை மாசுபடுத்தி உடல்நலக் குறைவு ஏற்படுத்தும் இது போன்ற காரணிகளை தடை செய்து மாற்று ஏற்பாடு செய்து தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்...

நல்ல பதிவு பாலா... நன்றி !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்தியன் சினிமா தண்டனைதான் சரி.......

Unknown சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Mahan.Thamesh சொன்னது…

Good post , happy friendship day

பெயரில்லா சொன்னது…

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Reverie

Unknown சொன்னது…

நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் பாலா... நன்றி
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மாய உலகம் சொன்னது…

சமூக அக்கரைக்கான பதிவு அவசிய பகிர்வு நன்றி நண்பரே

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,
பழுதடைந்த வாகனங்களை இயக்குவதால் வரும் விளைவுகளை உதாரண விளக்கத்தோடு விழிப்புணர்வுப் பதிவாக கூறியிருக்கிறீங்க.
நன்றி சகோ.

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் ஷேர்