10 ஆகஸ்ட் 2011

அரசு அதிகாரிகள் உணர்வார்களா :அனைவரும் காணவேண்டிய வீடியோ





இது ஒரு குறும்படம் .அரசு அதிகாரிகளும் மக்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது .

இது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப் பட்டுள்ளதால் புரிந்து கொள்ள வசதியாக வீடியோவில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளை தமிழில் தருகிறேன் .

மின் வாரிய அதிகாரிக்கு ஒரு தொலைப் பேசி அழைப்பு வருகிறது 

அழைத்தவர் : அய்யா நான் கணேஷ் நகர் மூன்றாவது சந்திலிருந்து பிரசாந்த் பேசுறேன் ...எங்க ஏரியாவுல நாலஞ்சி நாளா தெரு விளக்கு எரியல சார் .... 

அதிகாரி : இதுக்கு முன்னாடி வேற யார்கிட்டாயாவுது புகார் சொல்லியிருக்கீங்களா ? 

அழைத்தவர் :பல தடவை சொல்லியாச்சி சார் ...நாலு நாள் ஆவுது இது வரைக்கும் யாரும் வரல ..... 

அதிகாரி : அரசு அதிகாரிகளுக்கு பல வேலைகள் இருக்கும் அதனால் எதையும் உடனடியாக செய்து விடமுடியாது 

அழைத்தவர் : எங்க ஏரியா ரொம்ப நெரிசலான இடம் சார்... எல்லாருமே ரொம்ப சிரமப் படுறோம் ...தயவு செஞ்சி கொஞ்சம் சீக்கிரமா பாருங்க சார் .... 

அதிகாரி : சரி செய்கிறோம் 

சிறிது நேரத்தில் ஒரு மின்வாரிய ஊழியர் வந்து தெரு விளக்கை சரி செய்கிறார் .சரி செய்தவுடன் அருகிலுள்ள ஒரு பூத்திலிருந்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்கிறார் 

மின் வாரிய ஊழியர் :ஹலோ ..சூரி சாரா ..நான் பார்த் பேசுறேன் ...லைட்ட சரி பண்ணியாச்சி ...ரொம்ப சின்ன ரிப்பேர்தான் ...ஒரு நிமிஷத்துல முடிஞ்சிடுச்சி 

இப்போது பூத் உரிமையாளர் மின்வாரிய ஊழியரிடம் கேட்கிறார் 

பூத் உரிமையாளர் : லைட்டு இப்போ நல்லா எரியுதா சார் ? 

மின் ஊழியர் : ஆம் ...நல்லா எரியுது .....எவனோ தெரியல நாலஞ்சி நாளா லைட்டு எரியலன்னு அடிக்கடி போன் பண்ணி ஒரே இம்சை ... 

பூத் உரிமையாளர் :உங்களுக்கு இம்சை குடுத்த அந்த முட்டாள் இப்போ உங்க முன்னாடிதான் சார் இருக்கான் ... 

மின் ஊழியர் :ஓ ..நீங்கதானா அது ...சரி போன் பேசியதற்கு காசு எவ்வளவு ? 

பூத் உரிமையாளர் : காசெல்லாம் வேண்டாம் சார் எங்க தெருவுக்கு எவ்வளவு பெரிய நன்மை செஞ்சிருக்கீங்க ... 

மின் ஊழியர் :இது என் காசு கிடையாதுய்யா ...அரசாங்கத்தோடது ...சும்மா வாங்கிக்க ... 

இவ்வாறு கூறி காசை மேஜை மீது வைக்கிறார் .அதை எடுக்க பூத் உரிமையாளர் தடுமாறுகிறார் .அப்பொழுதுதான் பூத் நடத்துபவருக்கு பார்வை கிடையாது எனும் விஷயம் மின் ஊழியருக்கு தெரிய வருகிறது 

மின் ஊழியர் : ஏம்யா ...உனக்கு கண் தெரியாதா ? 

பூத் உரிமையாளர் :ஆமா சார் எனக்கு துப்பரவா கண் தெரியாது .. 

மின் ஊழியர் : கண் தெரியாத நீ ஏம்யா லைட் எரியலங்கிறதுக்காக அடிக்கடி போன் பண்ணுன ? 

பூத் உரிமையாளர் : ஏன்னா ...வெளிச்சம் இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டம்ங்கிறது எனக்குதானே தெரியும் .

25 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

முதல் ஊழியன்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை .

மாய உலகம் சொன்னது…

மிகவும் பாராட்டப்பட வேண்டிய குறும்படம்..தனது வலி மற்றவர்கள் உணரக்கூடாது என பரந்தமனப்பாண்மையை உணர்த்தி அதில் சமூக அக்கரையையும் அரசாங்கத்தின் அக்கரையின்மையும் அதன் ஊழியர்கள் கீழ்தரமாக நடந்துகொள்ளும் விதத்தையும் மனதில் அடித்து அற்புதமாக சொல்லிய விதத்திற்காகவே குறும்படத்திற்கு பாராட்டுக்கள்... அதை புரியும் வண்ணம் தமிழில் வசனங்களாக பதிவிட்ட நண்பர் பாலாவுக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்...

ப.கந்தசாமி சொன்னது…

பாராட்டுகள்.

ராஜா MVS சொன்னது…

நல்ல கருத்து பாலா..,
படம் நல்லா இருக்கு,
தேவயில்லாத காட்சின்னு எதையும் காட்டல,
சொல்ல வந்த விஷயத்த கரெக்டா சொல்லியிருக்காங்க.
இந்த பகிர்வுக்கு நன்றி பாலா..,

M.R சொன்னது…

அருமையான ஒரு விசயத்தினை சொல்லியிருக்கிறீர்கள் .நன்றி நண்பரே

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி கூடல் பாலா
ஒரு நல்ல குறும்படத்தை பதிவிட்டுக் காட்டியமைக்கும்
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற
உயரிய நோக்கில் தமிழ் படுத்திக் கொடுத்தமைக்கும்.

sakthi சொன்னது…

அருமை பாலா ,
சுரீர் என்று அடித்த உணர்வு .பதிவாக எழுதிய உங்கள் உணர்வுக்கு பாராட்டுகள்
நட்புடன் ,
கோவை சக்தி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பரா சொல்லி இருக்கீங்க மக்கா.....!!!

Unknown சொன்னது…

SUPER

கோகுல் சொன்னது…

ஒரு விஷயம் இல்லாத போதுதான் அதன் சிறப்பு தெரியும்.

பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

தேவை இத்தகை பதிவு-சமூக
சேவை செய்யும் பதிவு
நன்றி! பாலா

வாருங்கள் வலைப் பக்கம்
புலவர சா இராமாநுசம்

பெயரில்லா சொன்னது…

ஏன்னா ...வெளிச்சம் இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டம்ங்கிறது எனக்குதானே தெரியும்...

நல்ல வேளை...ஆபீஸ்ல youtube தெரியாது...இல்லாட்டி உங்க உணர்வு கலந்த எழுத்தின் மூலம் அதை ரசிச்சிருக்க முடியாது பாலா...ஒரு வகையில் அந்த பார்வை அற்ற அன்பரைப்போல்...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பகிர்வும் அருமை. மொழிபெயர்ப்பு தெளிவு.

மகேந்திரன் சொன்னது…

நெஞ்சில் பதியும் காணொளி
சமூக சிந்தனையுள்ள பதிவு.
நல்லா இருக்கு நண்பரே.

nellai ram சொன்னது…

பகிர்வு அருமை

பெயரில்லா சொன்னது…

ம்ம்ம்... அந்த மனிதனுக்கு இருக்கும் சமூக அக்கறையில் ஒரு துளியளவேனும் அரசாங்க அதிகாரிகளுக்கு தா இறைவா...

நல்ல பகிர்வு நண்பரே

koodal kanna சொன்னது…

மிகவும் பாராட்டப்பட வேண்டிய குறும்படம்..தனது வலி மற்றவர்கள் உணரக்கூடாது என பரந்தமனப்பாண்மையை உணர்த்தி அதில் சமூக அக்கரையையும் அரசாங்கத்தின் அக்கரையின்மையும் அதன் ஊழியர்கள் கீழ்தரமாக நடந்துகொள்ளும் விதத்தையும் மனதில் அடித்து அற்புதமாக சொல்லிய விதத்திற்காகவே குறும்படத்திற்கு பாராட்டுக்கள்... அதை புரியும் வண்ணம் தமிழில் வசனங்களாக பதிவிட்ட நண்பர் பாலாவுக்கும் நன்றியுடன் பாராட்டுக்

நிரூபன் சொன்னது…

வணிக ரீதியில் தொடர்பாடலை மேற்கொள்ளுவதற்கேற்ற சிறப்பான குறும்பட விளக்கத்தினைப் பகிர்ந்திருக்க்கிறீங்க.
நன்றி பாஸ்.

shanmugavel சொன்னது…

இறுதியில் நச்சென்று அருமை.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.கூடல் பாலா,
பல விஷயங்களை உள்ளடக்கிய செம டச்சிங் பதிவு..!
நன்றி சகோ.

Prabu Krishna சொன்னது…

அருமையான விஷயம்... உண்மையில் வெட்கப்படுகிறேன் நான் இப்படி இல்லையே என்று.

ம.தி.சுதா சொன்னது…

படம் பார்க்க முடியல சகோ... வாசித்து விட்டு மட்டும் போகிறேன்...

Mani சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Mani சொன்னது…

naan udumalaipettaiyilirunthu manikandan intha kurumbadam eanakku migavum pidithirikirathu ithupool kurumpadam thayarikkavendum eandru eanakku aasai aana ennal athu mudiyaathu irunthaalum ennudaya manithaina nanbargal ippadi oru kurumbadam thayariththu irukiraargal ennudaya manamaarntha vaalthukkal