13 ஆகஸ்ட் 2011

உலகை குழப்பத்தில் ஆழ்த்தி வரும் வெளியுறவு அமைச்சர் ?

ஹினா ரப்பானி ,இந்த பெயரை அறியாத உலகத் தலைவர்கள் யாரும் இருக்க முடியாது .பாகிஸ்தானின் இளம் வெளியுறவு அமைச்சரான இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல்வேறு (!)விதமாக தலைவர்களைக் கவர்ந்து வருகிறார் .

இன்று விஷயம் இவரைப் பற்றியது அல்ல .இந்த இளம் அமைச்சருக்கு நேர் எதிராக செயல் பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் மூத்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவைப் பற்றியது .


சமீபத்தில் ஐ நா சபையில் சென்று இந்தியாவின் அறிக்கையை வாசிப்பதற்கு பதிலாக போர்ச்சுக்கல் அமைச்சரின் அறிக்கையை வாசித்து உலகையே வியப்பில்(?) ஆழ்த்தினார் .இப்போது இவர் காமெடி செய்திருப்பது இந்திய நாடாளு மன்றத்தில் .

இந்திய சிறையில் நீண்ட நாட்களாக அடை பட்டு முதுமையால் துன்பத்தை அனுபவித்து வரும் பாகிஸ்தானியர் ஒருவரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வி நாடாளு மன்றத்தில் நேற்று முன் தினம் எழுப்பப் பட்டது .

இதற்க்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா அளித்த பதில் இதுதான் ."பாகிஸ்தான் சிறையில் நீண்ட நாட்களாக அடை பட்டு கிடக்கும் அவரை விடுவிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இது தொடர்பாக தூதரக அளவில் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது ."

இதை கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர் .கூச்சலிட்ட உறுப்பினர்கள் இந்திய சிறையில் அடை பட்டுள்ள கைதியைப் பற்றி பேசினால் இவர் எந்த நாட்டில் உள்ள கைதியையோ பற்றி பேசுகிறார் என்று கிண்டல் செய்தனர் .

கம்யூனிஸ்ட் உறுப்பினர் பிருந்தா கரத் " அமைச்சர் யாரைப் பற்றியோ பேசுகிறார்" என்றார் .இதில் பிரதமர் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார் .


                                                     நான் சரியாத்தான் பேசுறனா?

வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவுக்கு கூறப் படும் அறிவுரை என்னவென்றால் இனி அவர் பேசுகையில் அடிக்கடி "நான் சரியாத்தான் பேசுறனா" என்று அருகிலிருப்பவர்களிடம் கேட்கவேண்டும் .அப்படி செய்தால்தான் இனி பிரச்சினைகள் எழாது.

35 கருத்துகள்:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.பாலா...
ஒரு குழப்பமும் இல்லை...
அடுத்த வருஷம் இவருக்கு 80 வயசு..!
(born 1 May 1932)
முதுமை காரணமாக மறதி & தடுமாற்றம் அதிகம் ஆகிருச்சு. பேசாமல் ரிடையர் ஆகச்சொல்லுங்க..!

உடனடி தேவை ஓர் அவசர சட்டம் : "அரசியல்வாதிகளுக்கு ஒரு ரிட்டையர்மெண்ட் ஏஜ்"

75 வச்சுக்கலாமா..? உங்கள் அபிப்பிராயம்..?

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இவங்க என்ன குழப்பத்தில் இருக்கிறார்களோ....

Unknown சொன்னது…

ஹிஹி மாப்ள பய புள்ள இங்க கூட வரப்போகுது....பாக்குறேன் எப்படி பேசுறாருன்னு ஹிஹி!

சக்தி கல்வி மையம் சொன்னது…

என்னதான் சொல்லுங்க... அவங்க அழகே தனி..

கூடல் பாலா சொன்னது…

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' \\\உடனடி தேவை ஓர் அவசர சட்டம் : "அரசியல்வாதிகளுக்கு ஒரு ரிட்டையர்மெண்ட் ஏஜ்" 75 வச்சுக்கலாமா..? உங்கள் அபிப்பிராயம்..\\\\ 75 அதிகம்தான் ...காலாவதியான உணவுப் பொருளையெல்லாம் குப்பையில்தான் போடுறாங்க ...கருத்துக்கு நன்றி அண்ணே !

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் ஒரே குழப்பமா இருக்கு

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம் அங்க வேற வருதா ...புதுசா என்ன குழப்பத்தை உண்டாக்க போகுதோ ...

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! கொஞ்சம் அழகா இருந்துட்டா போதுமே ...அவுங்க வீட்டு காரருக்கு எப்போ இதெல்லாம் தெரியப் போகுதோ .....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

இதுக்கு பேர் தான் கோத்து...விடரதுங்கரதா ?....

நான் உங்கள் சொல்லவில்லை

பிருந்தா கரதை சொல்லுகிறேன் .

Unknown சொன்னது…

அடக்கடவுளே!
இப்படியும் மந்திரிகளா..
எதுவும் எழுதவே எனக்கு வெக்கமாக
இருக்கு!

புலவர் சா இராமாநுசம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல ஃபிகருதான்

பெயரில்லா சொன்னது…

///"பாகிஸ்தான் சிறையில் நீண்ட நாட்களாக அடை பட்டு கிடக்கும் அவரை விடுவிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இது தொடர்பாக தூதரக அளவில் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது ."//வயசு போனவர்களை எல்லாம் அட்சியில் அமர்த்தினால் இப்படி தான் ,தாமாகவே இவர்கள் ஒதுங்கிக்கொள்ளலாமே!!!

கூடல் பாலா சொன்னது…

@நண்டு @நொரண்டு -ஈரோடு நம்மள கோர்த்து விடாம இருந்தா சரிதான் .....

கூடல் பாலா சொன்னது…

@புலவர் சா இராமாநுசம் நமக்கு கூட வெட்கமா இருக்கு ...சம்மந்தப் பட்டவுங்களுக்கு இல்லியே ....அதுதான் வெட்கமா இருக்கு

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார் சிபி கண்ணுல மாட்டுனா சிக்கல்தான் .......

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. ஒதுங்கினா நல்லாத்தான் இருக்கும் ......ஒதுங்க மாட்டேன்கிறாங்களே ....

rajamelaiyur சொன்னது…

//
அவர் பேசுகையில் அடிக்கடி "நான் சரியாத்தான் பேசுறனா" என்று அருகிலிருப்பவர்களிடம் கேட்கவேண்டும்
//

அதையும் மறந்துடுவார்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

ஜெயலலிதா உண்ணாவிரதம்

FARHAN சொன்னது…

நல்ல வேலை பாராளுமன்றத்தில் தான் யார் என்று கேட்காமல் விட்டாரே .....

M.R சொன்னது…

N காது K காது

வேற என்ன சொல்ல

அடுத்தவருக்கு வழி விடலாமே

M.R சொன்னது…

தமிழ் மணம் பத்து

காட்டான் சொன்னது…

வயதானவர்களு வரும் நோய்தான்.. அவரை வீட்டுக்கு அனுப்பி கடைசி காலத்தில் பிள்ளைகளுடன் சந்தோஸமாய் இருக்க விடுவோமையா...

காட்டான் குழ போட்டான்...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ஹா...ஹா.. சூப்பரு.

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா இவர என்ன பண்ணலாம் .....

கூடல் பாலா சொன்னது…

@FARHAN இன்னும் கொஞ்ச நாள் கழித்து கேட்கலாம் ...

கூடல் பாலா சொன்னது…

@M.R நீங்க சரியாத்தான் பேசுறீங்க ......

கூடல் பாலா சொன்னது…

@M.R \\தமிழ் மணம் பத்து\\ தாராளமா குத்துங்க ......நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@காட்டான் \\காட்டான் குழ போட்டான்\\ அடுத்த தடவை வைக்கோல் போடுங்க .....

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash ரொம்ப தாங்க்ஸ் !

மாய உலகம் சொன்னது…

ஏங்க அவர் சரியா தான் பேசுனாரா???

மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 12

மகேந்திரன் சொன்னது…

வெட்கக்கேடு
இப்படியும் மானத்தை வாங்குறாங்களே....

ராஜா MVS சொன்னது…

இளைஞர்கள் அரசியலுக்கு வராததுதான் காரணம்.
இளைஞர்கள் வந்திருந்தால் இவர்கள் எப்போதோ அவரவர் வீட்டில் முடங்கியிருப்பார்கள்.
ஒரு பாதை அமைக்க அங்கிருக்கிற பாறை, கல் எல்லாம் நாம்தான் அகற்ற வேண்டும்.
அரசியலுக்கு வராமலேயே எங்களுக்கு வழி விடல..,வழி விடல.., என்று கோசம் மட்டும் எழுப்பினால் எப்படி பாதை அமைக்க முடியும்.
இது இளைஞர்கள் மேல் உள்ள தவறு..,
கூடிய சீக்கரமே மாற்றம் நிகழும் என்று நம்புவோம்.

பகிர்வுக்கு நன்றி.., பாலா.

நிரூபன் சொன்னது…

இதுக்குத் தான் தாமும் குழம்பி,
மக்களையும் குழப்புவது என்று சொல்லுவார்களோ....
அவ்....அவ்....

நிரூபன் சொன்னது…

நான் பிசியாக இருந்து வலைப் பதிவிற்கு வரமுடியாது என் பதிவில் முடங்கியிருந்து விவாதம் செய்த நேரத்திலும், என் பதிவிற்கு வந்து கருத்துக்க்ளை வழங்கி என்னை உற்சாகப்படுத்திய உங்களின் அன்பிற்கு நன்றிகள் அண்ணா.