24 மே 2011

படங்களை எளிதாக RESIZE செய்ய இலவச மென்பொருள் !

       இப்பொழுது பெரும்பாலும் புகைப்படங்கள் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கிறோம் .அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்கள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கும்(5 MB வரை ).இவற்றை நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஈ மெயில்  மூலமாக அனுப்புவது சற்று சிரமமாக இருக்கும் .மேலும் பதிவிடும் சமயங்களில் முக நூலில் பகிர்தலிலும் பெரிய அளவுடைய புகைப்படங்கள் சிரமத்தை ஏற்படுத்தும்.
       
     இத்தகைய பெரிய அளவிலான படங்களை மிக எளிதாக சிறியதாக அதே சமயத்தில் தரம் குறையாமல் மாற்றுவதற்கு ஓர் இலவச மென்பொருள் உள்ளது .IRFAN VIEW என்ற இம்மென்பொருளை கணினியில் நிறுவி படங்களை சிறிதாக்கலாம் சுழற்றலாம் ,அழகு படுத்தலாம் .ஒரு இலவச மென்பொருளில் இத்தனை சிறப்புகள் நிறைந்திருப்பது அபூர்வம்தான் .

   படங்களை சிறிதாக்க IRFAN VIEW ல் படத்தை திறந்துகொண்டு Ctrl+R அழுத்தவும் .எந்த அளவிற்கு படத்தை சிறியதாக்க வேண்டுமோ அதற்குரிய OPTION கள் வரும் .அவற்றை உபயோகித்து படத்தை சிறியதாக்கிகொள்ளலாம். 
                  
             இலவசமாக டவுன்லோடு செய்ய இங்கே சுட்டவும் .

1 கருத்து:

Admin சொன்னது…

தேடிய மென்பொருளை தந்து விட்டிர்கள்