25 மே 2011

USB safely remove பிரச்சினையா? இலவச மென்பொருள் !

        உங்கள் கணினியில் இணைத்த USB DEVICE களை SAFELY REMOVE செய்ய முயற்சி செய்யும்பொழுது சிலசமயங்களில் இது போன்ற POP UP வரலாம் .
          
   எத்தனை முறை முயற்சி செய்தாலும் தொடந்து இது போலவே வந்துகொண்டிருக்கும் .FORMAT செய்ய முயற்சித்தால்  அதுவும் முடியாது .இந்த POP UP ஐ அலட்சியம் செய்துவிட்டு DEVICE ஐ அகற்றினால் அதிலுள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்துவிடும் .

      இந்த POP UP வருவதற்கு காரணம் நமது USB DEVICE ல் உள்ள ஏதாவது ஒரு கோப்பு கணினியில் இயங்கிக்கொண்டிருக்கும் .ஆனால் அதை கண்டுபிடிக்க முடியாது .
    
    அத்தகைய இயக்கத்தை கண்டறிந்து நிறுத்த ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது .இதன் பெயர் UNLOCKER என்பதாகும் .இதனை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் .
      
      இப்போது இயங்கும் நிலையில் உள்ள USB DEVICE மீது RIGHT CLICK செய்து UNLOCKER என்பதை தேர்வு செய்யவும் .இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAM களின் பட்டியல் வரும் .அதிலுள்ள UNLOCK ALL என்னும் பட்டனை அழுத்தினால் இயங்கிகொண்டிருக்கும் அத்தனை PROGRAM களும் நிறுத்தப் பட்டுவிடும் .இனி கவலையின்றி நமது USB DEVICE ஐ அகற்றலாம் .
     
    இதில் இன்னொரு பயனும் உள்ளது .சில வேளைகளில் நமது கணனியிலுள்ள கோப்புகளை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முயற்சி செய்தாலும் முடியாமல் போகலாம் .இத்தகைய கோப்புகளையும் RIGHT CLICK செய்து UNLOCKER உபயோகித்து பிரச்சினையை சரி செய்யலாம்.


  இது முற்றிலும் இலவச மென்பொருள் .பயன்படுத்துவதும் மிக எளிது. மென்பொருள் தரவிறக்க சுட்டி .

4 கருத்துகள்:

பாண்டியன் சொன்னது…

எனது usb எத்தனை முறை போர்மட் செய்தாலும் அதில் உள்ள சில கோப்புகள் அழியவில்லை more than 700 mb files . என்ன செய்யலாம்? அது வைரஸ் என்பது தெரியும். i tried format softwares and cmd prompt. but no use. is there any other option?

கூடல் பாலா சொன்னது…

@நிலா
avast நன்றாக வேலை செய்கிறது .முயன்று பாருங்கள் .

மாலதி சொன்னது…

thevaiyana pathiu ulam kanintha paattukal

கூடல் பாலா சொன்னது…

@FOOD
கருத்துக்கு நன்றி ஆய்வாளர் அவர்களே .