மனிதன் வாழ்கையில் மரணம் நிச்சயிக்கப்பட்டதுதான் .ஆனால் அணு அணுவாக சாவது
என்பது நரகத்திற்கு ஒப்பானது .
அணு அணுவாக சாதல் என்ற வாக்கியமே அநேகமாக
ஹிரோஷிமா சம்பவத்திற்கு பின்பாக தோன்றியதாக இருக்கலாம் .
இப்போது ஹிரோஷிமாவை
ஏன் நினைவு படுத்துகிறேன் .இன்றுதான் ஹிரோஷிமா சோகம் நிகழ்ந்த தினம்
.
1945 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி காலை 8.15 மணிக்கு லிட்டில் பாய்
என்கின்ற அணு குண்டை அமெரிக்க ராணுவத்தினர் ஹிரோஷிமா நகரின் மீது
வீசினார்கள் .அணு குண்டு விழுந்த மாத்திரத்தில் அங்கு வசித்த 80,000 மக்கள்
கருகி உயிரிழந்தார்கள் .அதனால் காயமடைந்தவர்கள் ,கதிரியக்கத்தால்
பாதிக்கப் பட்டவர்கள் என சுமார் ஒன்றரை லட்சம் பேர் அதே வருடத்தில்
உயிரிழந்தனர் .
மேலு அணு அணுவாக சித்திர வதைக்குள்ளானோர் பல லட்சம் பேர்
.உலகில் எந்த ஒரு நாடும் செய்ய வராத மூடத் தனத்தை செய்த ஒரே நாடு
அமெரிக்காதான் .அதன் பிறகு அணு ஆயுதங்கள் பற்றிய விழிப்புணர்வு பல்வேறு
நாடுகளுக்கும் வர ஆரம்பித்தது .அணு சக்தியை ஆக்கமாக பயன்படுத்த எண்ணி அணு
உலைகள் அமைக்கப் பட்டன .ஆனால் இதிலும் பிரச்சனை வந்தது .
1986 ல்
செர்னோபிலில் அணு உலை வெடித்துச் சிதறி மீண்டும் ஹிரோஷிமாவை நியாபகப்
படுத்தியது .இதன் காரணமாகவும் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்
,லட்சக்கணக்கானோர் கதிரியக்க பாதிப்பிற்கு உள்ளாகினர் .இதனை தொடர்ந்து அணு
உலைகளை பாதுகாப்பாக வடிவமைப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தின .
இதிலும்
இடி விழுத்தது மிகப் பாது காப்பானதாக வடிவமைக்கப் பட்ட ஃபுகுஷிமா
அணு உலைகள் இயற்கையின் தாக்குதலில் சின்னாபின்னமாகின .
இதைத் தொடர்ந்து பல
நாடுகள் அணு உலைகள் ஆபத்தானவை என்றுணர்ந்து மின்சாரம் தயாரிக்க மாற்று
வழிகளை தேடத் தொடங்கிவிட்டன .
இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டும் அணு
உலைகளை அமைக்க அதீத ஆர்வம் காட்டுகின்றன .
ஹிரோஷிமா நினைவிடம்
இன்றைய தினம் அணு குண்டுக்கு இரையான ஹிரோஷிமா மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அணுவற்ற அமைதியான உலகைப்படைக்க உறுதி ஏற்போம் .
19 கருத்துகள்:
அந்த நாட்கள் ..
திரும்பி வரக்க கூடாத நாட்கள்..
நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே!
எத்தனை இடர்பாடுகளை சந்தித்தாலும் முன்னேறிக் கொண்டே இருக்கும் ஜப்பான் நாடு மற்ற நாடுகளுக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
அமெரிக்கா என்றாலே மூடத்தனம் தான்...
சோகமான தினம்
நினைவு கூர்ந்ததற்கு நன்றி நண்பரே
அஞ்சலி செலுத்துவோம் நண்பரே
சோகத்தையும்,துயரத்தையும் வெற்றியாக மாற்றும் ஜப்பானிய மக்களுக்கு சல்யூட்.
''அணு குண்டுக்கு இரையான ஹிரோஷிமா மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அணுவற்ற அமைதியான உலகைப்படைக்க உறுதி ஏற்போம்''
அஞ்சலிகளும்,உறுதியும்.
நினைவூடியதுக்கு நன்றி.
இனியும் அணு ஆயுதங்கள் தேவையா? இன்னொரு ஹிரோஷிமா உருவாகனுமா?
மனிதம் தொலைந்த நாளில் ஒரு மனித நேய பதிவு
எல்லா ஓட்டுக்களும் உமக்கே உமக்கு ...
மீண்டும் வரக்கூடாத அந்த நாட்களை நினைவூட்டியதற்கு நன்றி... இனிமேலாவது அணு ஆயுதங்களை தடுத்தால் நலம்
நினைவு கூர்ந்ததற்கு நன்றி பாலா !
இனியாவது அப்பாவி மக்களை வதைக்கும் இந்த கொடூரங்களை நிறுத்தி விட்டு அமைதிக்கு வித்திடுவோம்.
காலத்தால் உலக மக்களால் மறக்கமுடியாத நிகழ்வு...
அமைதியாய் அஞ்சலி செலுத்துவோம்
வன்முறை இன்றி அமைதி மட்டுமே உலகில் நிலவட்டும்
நினைவு கூர்ந்ததற்கு நன்றி பாலா!
இனிமேலாவது மனிதன் மனிதனாக
வாழ முயற்ச்சி செய்யட்டும்.
நினைவு கூர்த்தர்கு நன்றிகள் . அமைதியாய் பிரார்த்திப்போம்
நன்றிகள்
அஞ்சலி செலுத்துவோம் மாப்ள!
அமைதியான உலகை படைக்க உறுதி ஏற்போம்
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி பாஸ்.எனது நண்பர்கள் வலைபதிவு சார்பாக அந்தத்துயரத்தில் உயிரை இழந்தவர்களுக்கு இந்தநாளில் அஞ்சலி செலுத்தி நிற்கின்றேன்.
மீளாத் துயரம் கொண்ட நாள்
அதனின்றும் மீண்டேன்ழுந்த ஜப்பான்
இன்று அணுசக்தியால் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளது.
ஒரு ஜப்பானியர் நிறுவனத்தில் பணிபுரியும் நான் அவர்களின்
மன உறுதியை நேரில் கண்டவன்.
உழைப்பில் அக்கறை என்பது ஜப்பானியர்களிடம்
கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு சாதுர்யம்.
கடந்தகால புரைகளை களைந்து ஜப்பான் மென்மேலும் வளர
இறைவன் அருள்புரியட்டும்.
@மகேந்திரன்நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே!
எத்தனை இடர்பாடுகளை சந்தித்தாலும் முன்னேறிக் கொண்டே இருக்கும் ஜப்பான் நாடு மற்ற நாடுகளுக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
அமெரிக்கா என்றாலே மூடத்தனம் தான்...
கருத்துரையிடுக