10 ஜூன் 2011

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம் ,போட்டோஷாப் பயிலுங்கள் !

ஆங்கில மொழி வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது அனைவருக்கும் தெரியும் .

நம் தாய் தமிழ் மொழிக்கு இணையான மொழி உலகத்தில் கிடையாது என்றபோதிலும் வேறு மாநிலங்களிலோ அல்லது வேறு நாடுகளிலோ பணிபுரிய ஆங்கிலம் மிகவும் இன்றியமையாதது .

கணினி உபயோகிப்பவர்கள் ஆங்கிலம் நன்றாக தெரிந்து வைத்திருந்தால் உபயோகிப்பது எளிது .

இத்தகைய பயன் மிகுந்த ஆங்கிலத்தை ஒரு வலை பூவில் மிக எளிமையாக  தமிழில் கற்றுத் தரப்  படுகிறது .

ஆங்கிலம் கற்க ஆர்வமுடையவர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள் .
அடுத்ததாக போட்டோஷாப் .

படங்களை வடிவமைக்கவும் அழகு படுத்தவும் ,மாற்றங்கள் செய்யவும் ,அழகிய எழுத்துக்களை வடிவமைக்கவும் உலகில் அதிக மக்கள் பயன்படுத்துவது போடோஷாப் மென்பொருள்தான் .

இதை நன்றாக கற்றுக்கொள்பவர்கள் சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ அமைக்கலாம் .மேலும் அச்சுத்துறை பத்திரிகை துறைகளில் வேலை வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு .இத்தனை பயன் மிகுந்த போடோஷாப் ஒரு வலைப்பூ மூலமாக தமிழில் கற்றுத்தரப் படுகிறது .

போட்டோஷாப் கற்க ஆர்வமுடையவர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள் .

13 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல அறிமுகம் நண்பா.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் போஸ்ட்

sarujan சொன்னது…

நல்ல அறிமுகம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அருமையான இரண்டு தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி பாலா சார்!

கூடல் பாலா சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன்நன்றி நண்பரே ...

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்ரைட்டு ..

கூடல் பாலா சொன்னது…

@sarujan(சாருஜன்)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

கூடல் பாலா சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிஉண்மையிலேயா .........?

ADMIN சொன்னது…

அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..!!

கான் சொன்னது…

வணக்கம்.....

என் தளத்தை தமிழ் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்.

அன்புடன்: கான்
தமிழில் போட்டோசாப் பாடம்
http://tamilpctraining.blogspot.com/

கூடல் பாலா சொன்னது…

@கான்தாங்கள் போடோஷாப் குறித்து வலைப்பூவில் விளக்கி வருவது சாதாரணமான விஷயம் அல்ல .அது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு தெரியும் .அதுவும் இலவச பயிற்சியை வழங்குகிறீர்கள் .இதை பலரும் அறியச்செய்ய என்னாலான ஒரு சிறு உதவி .தொடருட்டும் உங்கள் கைவண்ணம் .

கூடல் பாலா சொன்னது…

@தங்கம்பழனிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே .

shanmugavel சொன்னது…

நல்ல அறிமுகம்.நன்றி.