19 செப்டம்பர் 2011

இந்த கடுமையான போராட்டம் ஏன்? : நேரடி ரிப்போர்ட்


உண்ணாவிரதத்தின் முதல் நாளில் நான் (ஆரஞ்சு T-SHIRT)

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 127  பேர் இடிந்தகரையில் இன்று 9  வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளோம் .



தினமும் 15000 க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு ஊர்களிலிருந்து கலந்துகொண்டு வருகின்றனர் .நாளுக்கு நாள் இப்போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது .பல்வேறு அரசியல் கட்சிகளும் ,அமைப்புகளும்,குறிப்பாக பதிவுலகமும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இத்தகைய கடுமையான போராட்டம் இப்போது அதுவும் அணு உலையை கட்டி முடிக்கும் தருவாயில் ஏன் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது. முதலில் அணு உலையை மூடக் கோருவதற்கான காரணங்களைத் தருகிறேன் .

1) கூடங்குளம் அணு உலையானது மிகவும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது .பொதுவாக இது போன்ற பெரிய அணு உலைகள் அமையும் பகுதியிலிருந்து 16  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மிகக் குறைவான மக்கள் தொகையே இருக்கவேண்டும்.மாறாக இங்கு 16 கிலோ மீட்டருக்குள் 1 லட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள் .அணு உலை நல்ல நிலையில்  இயங்கினால்கூட இவர்களுக்கு பல்வேறு குணமாக்க முடியாத நோய்கள் ஏற்படும் .

2 ) சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்ததைப் போலொரு விபத்து கூடங்குளத்தில் நிகழுமாயின் அணு உலையைச்சுற்றி 30  கிலோமீட்டருக்குள் வசிக்கும் 10  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 24  மணி நேரத்திற்குள் வெளியேற்றப் படவேண்டும் .இது முற்றிலும் சாத்தியமில்லாதது.

3)முக்கியமான இன்னொரு காரணம் தரமற்ற கட்டுமானம் .இதைப் பற்றி விளக்கமாக அறிய கூடங்குளம் அணு உலை பில்டிங் வீக் என்ற இப்பதிவை வாசிக்கவும் .

4) உக்ரைனின் செர்நோபில் விபத்து போல விபத்து நிகழுமாயின் தமிழகம் மற்றும் வடக்கு இலங்கையில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழினமே அழியும் .

5) அணு உலையிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் கலந்த நீர் கடலில் கலக்கப் படுவதால் கடல் வளங்கள் அழியும் .

6) அணு உலையின் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மண்ணுக்கடியில் புதைக்கப் படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் .மேலும் இவற்றை 24000  ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க படவேண்டும் .

7 ) அணு உலைகள் கடற்கரையில் கடல்மட்டத்திலிருந்து வெறும் 7  மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளதால் எளிதில் சுனாமி தாக்கும் ஆபத்து உள்ளது .சமீபத்தில் ஃபுகுஷிமா அணு உலைகளை 20  மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கியது நினைவுகூறத் தக்கது .

8 )தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளுக்கு முக்கிய இலக்கு அணு உலைகள். இலங்கையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும் கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது .

பொதுவாக இதுபோன்ற பெரிய பெரிய திட்டங்களை ஆரம்பிக்கும் முன்னதாக அதன் சாதக பாதகங்களை மக்களுக்கு விளக்கி அவர்களின் கருத்து அறியப் படவேண்டும் .ஆனால் அணு உலைகளால் ஏற்படும் பாதகமான அம்சங்கள் மக்களிடம் அரசால் மறைக்கப்பட்டன மாறாக அணுமின் நிலையங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மிகப்பெரிய தொழிற்ச்சாலை என மக்களிடம் திரித்து கூறப்பட்டு இப்பகுதி மக்களின் ஆதரவோடு கட்டத் தொடங்க பட்டது .

நாளடைவில் மக்கள் விழிப்புனர்வடையத் தொடங்கினர் விளைவாக போராட்டங்கள் தொடங்கின .ஆனால் அரசின் ஒடுக்கு முறையால் வெளியுலகுக்கு அவை தெரியவில்லை .

சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை விபத்து மக்களுக்கு முழு அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியது .அதன் விளைவாக அணு உலை கட்டி முடிக்கப்படும் தருவாயிலும் அதை செயல்படவிடாமல் தடுத்தே ஆகவேண்டும் என்ற நோக்கில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இப்போதும் போராட்டத்திலிருந்து தமிழக மக்களை திசை திருப்ப அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது .


அதையும் தாண்டி போராட்டம் வெற்றி பெற்று அணு உலை மூடப் படும் என நம்புகிறோம் .

என்னை நட்சத்திர பதிவராக தேர்வு செய்த தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு நன்றி !

27 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தமிழ் மணம் நட்சத்திர வாழ்த்துக்கள் .

Unknown சொன்னது…

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தன்னம்பிக்கையுடன் போராடும் தங்களுக்கு தமிழ்மணம் நட்சத்திர மதிப்பளித்துப் பாராட்டியிருப்பது பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பா..

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

போராட்டம் வெல்ல ஒரு வாழ்த்து
நட்சத்திர மதிப்புக்கு இன்னொரு வாழ்த்து.

சம்பத்குமார் சொன்னது…

அரசாழ்வோரே..உங்களின்
செவிக்குள் எங்களின்
ஒப்பாரிகள் ஒலிக்கவில்லையா ?
உங்கள் கண்ணீரின்
உப்பு கரிக்கவில்லையா ?
இதயக் கிணற்றில்
இரக்க நீர் சுரக்கவில்லையா ?
எங்களின் சுவாசங்கள்
அடைபடப் போகிறதே…
சுவாசிக்கும் உங்களுக்கு
இன்னுமேன் தெரியவில்லை ?

தங்களின் போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஆதரவுடன்
சம்பத்குமார்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

போராட்டம் பற்றி இதுவரை வாய்திறக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

விரைவில் போராட்டம் வெற்றி பெரும் என்று நம்புகிறேன்...

மனோதிடத்துடன் போராடும் அனைத்து மக்களுக்கும் என்சிரம்தாழ்ந்த வணக்கங்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தமிழ்மணம் அறிவிக்கும் முன்னே தாங்கள் நட்சத்திரமாக மின்னிவிட்டீர்கள்..

வாழ்த்துக்கள்...

J.P Josephine Baba சொன்னது…

என் வாழ்த்துக்கள் அணு உலை பற்றி நான் எழுதிய பதிவையும் பகிருகின்றேன். நன்றி வணக்கம் http://josephinetalks.blogspot.com/2011/09/tirunelveli-kudankulam.html/

கூடல் பாலா சொன்னது…

சற்று சோர்வாக இருப்பதால் பின்னூட்டம் இட இயலாமைக்கு வருந்துகிறேன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உங்கள் போராட்டத்துக்கு உலகெங்கும் ஆதரவு பெருகி வருகிறது, நல்லதே நடக்க வாழ்த்துக்கள்....!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மத்திய மாநில அரசுகள் மௌனம் சாதிப்பது ஏன்...??? சிங்'டிக்கு சோனியா இன்னும் வாயை திறக்க சொல்லலையா அல்லது சோனியாவுக்கு இந்த போராட்டம் பற்றி யாரும் சொல்லலையா...???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

koodal bala சொன்னது…
சற்று சோர்வாக இருப்பதால் பின்னூட்டம் இட இயலாமைக்கு வருந்துகிறேன்//


நீங்கள் தைரியமாக இருங்கள் பாலா...

SURYAJEEVA சொன்னது…

பாலா கவலை படாதீர்கள்,

Unknown சொன்னது…

போராட்டம் கண்டிப்பாக வெற்றியை பெறும் அண்ணா

பாளை.தணிகா சொன்னது…

பாலா கண்டிப்பாக மூடப்படும்.அணுமின்நிலையம் கவலைபடவேண்டாம்.

ராஜா MVS சொன்னது…

மனம் தலராதீர்கள் பாலா... கண்டிப்பாக போராட்டம் வெற்றிபெறும்...

* வாழ்த்துகள்...

சத்ரியன் சொன்னது…

மக்கள் போராட்டம்
வெல்லும்! வெல்லும்! வெல்லும்!
வெற்றியை வரலாறு
சொல்லும்! சொல்லும்! சொல்லும்!

தறுதலை சொன்னது…

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - செப் '2011)

சக்தி கல்வி மையம் சொன்னது…

கண்டிப்பா வெற்றிபெறுவோம்..

Thennavan சொன்னது…

// போராட்டத்திலிருந்து தமிழக மக்களை திசை திருப்ப அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது .//

தன் எழுச்சியான மக்கள் போராட்டத்தை திசை திருப்ப முடியாது நண்பா.

சென்னை பித்தன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்.உடற்சோர்விருந்தும்,நட்சத்திர வாரத்தின் பணியை விலக்காத உங்களுக்கு மனச் சோர்வு ஏது?போராட்டம் வெற்றி பெற்றே தீரும்,அதி விரைவில்.

பெயரில்லா சொன்னது…

அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

avainaayagan சொன்னது…

மக்கள் அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களையும் தந்துள்ளது இக்கட்டுரை.

பெயரில்லா சொன்னது…

போராட்டம் கண்டிப்பாக வெற்றியை பெறும்...ரெவெரி

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாலா அண்ணா,
கூடங்குளம் போராட்டத்தின் அவசியம் பற்றிய அருமையான விளக்கத்திற்கு நன்றி.

உங்களின் இப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்!

தமிழ்மண நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் பாலா - தமிழ் மண நடசத்திரமாகச் ஜொலிக்க - நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - கூடங்குளம் போராட்டம் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா