20 செப்டம்பர் 2011

இது நாட்டை காக்கும் போராட்டம் :மேதா பட்கர்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 10  வது நாளாக 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம் .

கூடங்குளம் பகுதியைச் சார்ந்த பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர் .வியாபாரிகள் தொடர்ந்து கடையடைப்பு நடத்தி வருகின்றனர் .தினமும் பத்தாயிரக் கணக்கான மக்கள் உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்து வருகிறார்கள் .

இந்த மாபெரும் போராட்டத்தை மீனவர்களின் போராட்டம் என சிலர் திசை திருப்ப முயன்றனர் .ஆனால் அது முறியடிக்கப் பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் இது தமிழகத்திற்கான போராட்டம் என்றுணர்ந்து தங்கள் ஆதரவை இப்போராட்டத்திற்கு வழங்கி வருகிறார்கள் .

நேற்று உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட மக்கள்  

இந்நிலையில் நேற்று இப்போராட்டத்தில் நேரில் கலந்துகொண்ட மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேதா பட்கர் இப்போராட்டம் மீனவர்களுக்கு மட்டுமோ அல்லது தமிழகத்திற்கு மட்டுமோ அல்ல ,இது நம் தேசத்தை காக்கும் போராட்டம் என உணர்ச்சி பொங்க கூறினார் .

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டாலும் அதன் கதிரியக்கத்தை யாராலும் தடுக்க முடியாது .இதிலிருந்து மக்களைக் காக்க அரசுகள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை .மக்கள் எழுச்சி மூலமாகத்தான் இதைத் தடுக்க முடியும் .அதுதான் இங்கே நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் 127 பேரில் இது வரை 40  பேருக்கும் மேலானோர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது .இவர்களுக்கு மருத்துவ வசதியை போராட்டக் குழுவே செய்து வருகிறது .

இன்று மத்திய அமைச்சர் நாராயண சாமி எங்களை சந்திக்க வருவதாக தகவல் வந்துள்ளது .
எனக்கு கைகொடுத்த சமூக சேவகி மேதா பட்கர்
எனது உடல்நிலை சீராக இருந்து வருகிறது .எடை மட்டும் ஏழு கிலோ குறைந்துள்ளது .

தொடர்ந்து பதிவின் வாயிலாகவும் ,தொலைப்பேசி வாயிலாகவும் ஆதரவு தெரிவித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி !

15 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

நல்ல செய்தி நடந்தேறி இருக்கிறது...
நீங்கள் ஏழு கிலோ எடை குறைந்தது மனதை பாதிக்கிறது...
வெல்க போராட்டம்....

குடிமகன் சொன்னது…

நல்ல செய்தி!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

நல்ல செய்தி..
ஒன்றுபடுவோம், வெற்றிபெறுவோம்...

இந்திரா சொன்னது…

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் போராட்டம் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வெற்றியை நோக்கி போராட்டம் ...வாழ்த்துக்கள் .

SURYAJEEVA சொன்னது…

ஏழு கிலோ உடல் எடை குறைந்தது தவிர மற்ற அனைத்தும் நல்ல செய்திகளே.. இனி தொட்டு விடும் தூரம் தான் வெற்றி..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நமது போராட்டம் வெற்றியின் எல்லையில், இனி உலகத்துக்கே நாம் முன்னோடிகள் என்று மார்தட்டிக்கொள்ளலாம்...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மைனஸ் ஓட்டு போட்ட நண்பா, உனக்காக்கவும்தான் கூடல்பாலா போராடுகிறான் மறந்துவிடாதே....!!!

K சொன்னது…

நண்பா, உனது போராட்டத்தை மெச்சுகிறேன்! உனது உடல்நிலை கவலை தருகிறது! போராட்டம் கண்டிப்பா வெற்றியடையும்!

ராஜா MVS சொன்னது…

தங்களின் உடல்நிலை கவலை தருகிறது, மற்ற செய்திகள் நல்லவையே..
மனஉறுதியோடு போராடி வரும் மக்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும்..
போராட்டம் வெற்றியடையும்..பாலா...

தங்களின் இந்த பங்களிப்பை பாராட்டுகிறேன்..நண்பா...

Thennavan சொன்னது…

நல்ல செய்தி!!

கடம்பவன குயில் சொன்னது…

தங்கள் உடல் நிலை நினைத்து கவலைப்படுகிறோம் நண்பரே. விரைவில் நல்ல முடிவுடன் போராட்டம் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

நல்ல செய்தி...
ஒன்றுபடுவோம்... வெற்றிபெறுவோம்...

நிரூபன் சொன்னது…

வெற்றியை நோக்கிய உங்களின் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா.

தடம் மாறிய யாத்ரீகன் சொன்னது…

வாழ்த்துக்கள் பாலா !! உங்கள் போராட்டம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!