07 செப்டம்பர் 2011

திருநெல்வேலி கலெக்டர் : பரபரப்பு !

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு விரைவில் செயல் பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது .மேலும் புதிதாக 6  அணு உலைகளை கட்டவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது .

கூடங்குளத்தில் அணு உலை அமையும் பகுதியிலிருந்து 30  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 400 ஊர்களில் 10  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் .சமீபத்தில் ஜப்பான் நிகழ்ந்ததைப் போன்றதொரு அணு உலை விபத்து நிகழ்ந்தால் மக்களை காப்பாற்றுவதற்கு அரசிடம் எந்த திட்டமும் இல்லை .இதன் காரணமாக அணு உலைகளை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்  .


இதன் ஒரு பகுதியாக வருகின்ற 11-9-2011 அன்று முதல் பத்தாயிரக் கணக்கான மக்கள் பங்கு பெறுகின்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இடிந்தகரையில் வைத்து நடை பெறுகிறது .

இதை தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் செல்வராஜ் செய்தித் தாள் வாயிலாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் .அதில், கடலில் 500  கிலோ மீட்டருக்குள் மீன் பிடிக்க தடை செய்யப் பட்டுள்ளதாக சிலர் வதந்தியை பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார் .

ஆனால் 500  மீட்டருக்குள் மீன் பிடிக்க தடை விதிக்கப் பட்டிருப்பதாக இதற்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெயராமன்தான்  தெரிவித்துள்ளார் .


இப்போது மாவட்ட ஆட்சியராக இருக்கும் செல்வராஜ் அறிக்கையின் படி வதந்தியைப் பரப்பியது யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர்களுக்கு என்ன பரிசு (?)அளிக்கலாம்  என்பதை வாசகர்கள் கருத்தின் வாயிலாக தெரிவிக்கலாம் .

டிஸ்கி :

பத்திரிகை செய்தியை பெரிதாக்கி படிக்க கிளிக் செய்யவும்
போராட்டம் ஆரம்பமாவதால் சில நாட்களுக்கு நான் பிசி 

16 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

இப்படி எல்லாம் பரிசு கொடுக்கப் போறதா வதந்தி கிளப்பி விட்டுடாதீங்க.. நம்பி இவனுங்களும் வந்துடுவானுங்க..

Mahan.Thamesh சொன்னது…

வணக்கம் நலமா அண்ணே
நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திக்கிறேன்.
நல்லது போராட்டம் வெற்றி பெறட்டும்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

போராட்டம் வெற்றி பெறட்டும்

shanmugavel சொன்னது…

என்னத்த சொல்றது! போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

shanmugavel சொன்னது…

தமிழ் 10 பிராப்ளமா இருக்கே!

மகேந்திரன் சொன்னது…

வதந்தி என்ன வாந்தியா
வாயில் சரளமாக வருகிறதே....
வதந்தியை மூட்டை கட்டிவச்சிடுங்க
இல்லையென்றால்...
உங்கள் உறுப்புகளை மூட்டகட்டிவிடுவோம்.

இடிந்தகரை போராட்டம் வெற்றிபெறட்டும்.
காதவிந்து போயிருக்கும் ஆட்சியாளர்களுக்கு
உணர்ச்சி வரட்டும்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,
சுய நலத்துடன் வதந்தியைப் பரப்பிய அதிகாரியினை, இனங்கண்டு கொண்டமையே, பொது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி,ம்

இந்தப் போராட்டம் கண்டிப்பாக உரிய பயனைப் பெற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன்.

நிரூபன் சொன்னது…

உங்கள் போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துக்களையும் பகிர்நது கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

போராட்டம் வெற்றி பெறட்டும்...வாழ்த்துக்கள்

ரெவெரி

rajamelaiyur சொன்னது…

All the best

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

என்னமோ... ஏதோ.... நடக்கட்டும்...

இந்திரா சொன்னது…

போராட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

koodal kanna சொன்னது…

சுய நலத்துடன் வதந்தியைப் பரப்பிய அதிகாரியினை, இனங்கண்டு கொண்டமையே, பொது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி,ம்

இந்தப் போராட்டம் கண்டிப்பாக உரிய பயனைப் பெற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன்.

koodal kanna சொன்னது…

@koodal kannaசுய நலத்துடன் வதந்தியைப் பரப்பிய அதிகாரியினை, இனங்கண்டு கொண்டமையே, பொது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி,ம்

இந்தப் போராட்டம் கண்டிப்பாக உரிய பயனைப் பெற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன்.

koodal kanna சொன்னது…

@koodal kannaபோராட்டம் வெற்றி பெறட்டும்...வாழ்த்துக்கள்

koodal kanna சொன்னது…

போராட்டம் வெற்றி பெறட்டும்...வாழ்த்துக்கள்