22 செப்டம்பர் 2011

காலவரையற்ற உண்ணாவிரதம் நிறைவு -போராட்டம் தொடர்கிறது

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நடைபெற்று வந்த 127  பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று காலை 11  மணியளவில் நிறைவு பெற்றது .எனினும் சாதகமான சூழ்நிலை வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது .

கடந்த 11  நாட்களாக இடிந்தகரையில் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம் .நேற்று முதல்வருடன் நடந்த பேச்சு வார்த்தையில் அணு உலைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழு அறிவித்தது .

அதன்படி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 127  பேரின் உண்ணாவிரதத்தை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் திரு இவான் அம்புரோஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார் .எனினும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தை தொடர்கின்றனர் .

இப்போதிலிருந்து நடைபெறுகின்ற போராட்டங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கெதிராக அணு உலையை மூடக்கோரும் போராட்டமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

எனது உடல்நிலை சாதாரணமாகவே உள்ளது .

அணு உலையை மூடும் வரையில் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம் .

17 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முதல் பழச்சாறு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணம் இணைப்பு குடுத்துட்டேன்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போராட்டம் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள், முதல்வருக்கும்....

மாலதி சொன்னது…

போராட்டம் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள், முதல்வருக்கும்....

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா...

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் பாலா
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Mahan.Thamesh சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ .

SURYAJEEVA சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்

மகேந்திரன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே,
போராட்ட வெற்றிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.
தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்
நடத்துபவர்களுக்கு இன்குலாப் ஜிந்தாபாத்.

ராஜா MVS சொன்னது…

வாழ்த்துகள் நண்பா...

தமிழ்10ல் இணைத்துவிட்டேன்..பாலா..

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே...ரெவெரி

கோகுல் சொன்னது…

வாழ்த்துக்கள் அனைவருக்க்கும்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டமைக்கு நன்றி!
நமக்கான முதல் கதவு திறந்துள்ளது.இன்னொரு கதவு மூடப்படும் வரை போராட்டத்தைதொடருவோம்!

koodal kanna சொன்னது…

வாழ்த்துக்கள் அனைவருக்க்கும்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டமைக்கு நன்றி!
நமக்கான முதல் கதவு திறந்துள்ளது.இன்னொரு கதவு மூடப்படும் வரை போராட்டத்தைதொடருவோம்!

மாய உலகம் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே,
போராட்ட வெற்றிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.
தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்
நடத்துபவர்களுக்கு இன்குலாப் ஜிந்தாபாத்.

Agape Tamil Writer சொன்னது…

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

குடிமகன் சொன்னது…

வாழ்த்துக்கள் பாலா!!

குறையொன்றுமில்லை. சொன்னது…

வாழ்த்துக்கள்