29 ஜூன் 2011

பின் பாக்கெட்டில் மணி பர்சா ? முதுகுவலி ஆபத்து !

ஆண்களில் பலருக்கு இந்த பழக்கம் இருக்கும் .பேண்டின் பின் பாக்கெட்டில் மணி பர்சை வைப்பது .

இவ்வாறு பர்சை வைத்துக்கொண்டு இருக்கையில் அமர்பவர்களுக்கு நாளடைவில் முதுகுவலி வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளதாக கனடா வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டூவர்ட் மெக்கில் கண்டறிந்துள்ளார்.

இவ்வாறு அமரும்போது உடல் ஒருபக்கமாக சரிகிறது இதன் மூலமாக  இடுப்பு மூட்டு நரம்பின் மீது அதிக அழுத்தம்  ஏற்படுத்தப் படுகிறது.பிட்டத்தின் வழியாகச் செல்லும் இந்த நரம்பு முதுகு வலியை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக உள்ளது .

எனவே மணி பர்சை பயன்படுத்துபவர்கள் இருக்கைகளிலோ இருசக்கர வாகனகளில் அமரும்போது அதை பக்கவாட்டில் உள்ள பாக்கெட்டில் வைத்துவிட்டு அமருங்கள் .முதுகு வலியை வரவழைப்பதை தவிருங்கள் .




டிஸ்கி :சைடு பாக்கெட்டில் பர்சை வைத்தால் திருடன் அதை லவட்ட அதிக வாய்ப்புள்ளது .

14 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பா..
இன்டலி எனக்கு வேலை செய்யல மாப்ள..

கடம்பவன குயில் சொன்னது…

லோட் ஆகவே 15 நிமிடம் ஆகிறது. ஏன் இப்படி? இன்ட்லி வேறு காணவில்லை. முதுகு வலிக்கிறது. அப்புறம் வந்து ஓட்டுப்போடுறேன்.

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில்இன்ட்லி ,தமிழ் மணம் இரண்டுமே இன்று சரியாக வேலை செய்யவில்லை இதன் காரணமாகவே திறப்பதிலும் கால தாமதமாகிறது .....வருகைக்கு நன்றி குயில் ..

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!நன்றி கருண் ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடப்பாவிகளா எங்கே போனாலும் சீக்கா.....???!!!

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ இன்னும் நிறைய இருக்கு .........

Unknown சொன்னது…

என்னய்யா ஒரே பாக்கு பெர்சு எண்டு போகுது பதிவு??அடுத்து சொக்ச்சா??ஹிஹி சும்மா சும்மா

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா கை கடிகாரம் .....தோள் வலி
பேனா ..நெஞ்சுவலி
ஷூ .......மூட்டுவலி
இப்படி ஏதாவது இருக்குதான்னு தேடிப் பாத்துட்டு வர்றேன் ...
விடாது கருப்பு

மகேந்திரன் சொன்னது…

அறிய தகவல்கள்
அறியத்தந்தமைக்கு
மிக்க நன்றி நண்பரே.

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி!மாப்ள பார்ச எடுத்து மேசைல வச்சிட்டேன்...இப்போ சந்தோசமா ஹிஹி!

உணவு உலகம் சொன்னது…

//விக்கியுலகம் சொன்னது…
தகவலுக்கு நன்றி!மாப்ள பார்ச எடுத்து மேசைல வச்சிட்டேன்...இப்போ சந்தோசமா ஹிஹி!//
யாரை கவுத்த?

உணவு உலகம் சொன்னது…

பயனுள்ள தகவல்.

நிரூபன் சொன்னது…

விழிப்புணர்வோடு கூடிய பயனுள்ள தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க, நன்றி பாஸ்.

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

என்னப்பா இது புதுசா புதுசா கண்டுபிடிக்கறீகளே ?

ம்ம்ம்.. படிச்சாச்சு கடைபிடிப்போம்.

நன்றி..