17 செப்டம்பர் 2011

வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்

தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று 7  வது நாளை எட்டியுள்ளது .

ஒவ்வொரு நாளும் 20000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஊக்கப் படுத்தி வருகிறார்கள் .

எங்களில் பலருடைய உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளபோதிலும் எப்பாடு பட்டேனும் அணு உலையை மூட வழி கிடைத்தால் மட்டுமே பட்டினிப் போரை முடிவுக்கு கொண்டு வருவதென்பதில் உறுதியாக உள்ளோம் .

எங்களின் இந்த முயற்சிக்கு பதிவுலகம் மிகப் பெரிய அளவில் ஆதரவளித்து வருவது மிகவும் உற்சாகமளித்து வருகிறது .ஆதரவளித்து வரும் சக பதிவர்கள் அனைவருக்கும் எண்ணிலடங்கா நன்றிகள் .

அலைப்பேசியில் பல பதிவர்கள் தொடர்புகொண்டு வாழ்த்தியது ஆனந்தமளித்தது .

விடமாட்டோம் போராட்டத்தை வெற்றி கிட்டும் வரை !

பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வேறு ஊர்களிலிருந்து நடந்துவரும் மக்கள்
                              போராட்டத்தை ஆதரித்த புரட்சிப் புயல் 


                                                      பால பிரஜாபதி அடிகளார்
                                                 வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் 
                       செண்டிமேன்டாகப் பேசி அழ வைத்த பள்ளி மாணவி


                                            அணி திரண்ட பள்ளி மாணவர்கள் 


                                                            மயக்கமடைந்தவர்

43 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

கண்டிப்பாக unkal ladsiyam niraiverum

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில் ...


“நான் ரொம்ப ஏழைங்க. பக்கத்து ஆளுகிட்ட பைசா கேளுங்க” - கருணாநிதி துயரம்

rajamelaiyur சொன்னது…

idli joined

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தொடர்ந்து போராடுங்கள். வெற்றி நமக்கே...

நிரூபன் சொன்னது…

பாலா அண்ணா.
வெற்றி நிச்சயம் கிட்டும்
உங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
என் மெயிலுக்கு உங்கள் அலைபேசி இலக்கத்தைப் பகிர முடியுமா?

M.R சொன்னது…

போராட்டம் வெற்றி பெறும் நண்பரே

கூடல் பாலா சொன்னது…

thank you all my brothers and sisters ...To contact +91 99407 71407 Email: n.balaganesan@gmail.com

M.R சொன்னது…

நிரூபன் சொன்னது…
பாலா அண்ணா.
வெற்றி நிச்சயம் கிட்டும்
உங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
என் மெயிலுக்கு உங்கள் அலைபேசி இலக்கத்தைப் பகிர முடியுமா?


நிருபன் நண்பரே நண்பர் பாலாவின் அலைபேசி இலக்கம் நண்பர் வைரை சதீஷ் அவரது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்

Admin சொன்னது…

போராட்டம் வெற்றி பெற்று, அணுமின் நிலையம் மூடப்பட வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நண்பா!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .

SURYAJEEVA சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்

கோகுல் சொன்னது…

வெற்றி நிச்சயம் நண்பா!
பக்கபலமாய் நம் நட்புலகம் உள்ளது!

மகேந்திரன் சொன்னது…

கவலைகொள்ளீர் தோழரே
கவனம் சிதறோம்
கொண்ட காரியத்தில்
வெற்றி கிடைக்கும் வரை
கொடுமுடித்தலை பிடிப்போம்

வெல்வோம்.....

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

இன்று என் பதிவு:

சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜெ அறிக்கை: ஒரு பார்வை

Unknown சொன்னது…

வெற்றிபெற வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் சொன்னது…

பற்றவைத்து ஊதி அனைப்பதற்கு தீக்குச்சி இல்லை நாங்கள் . தீ இன்றி பற்றி எரியும் காட்டுத் தீ இந்தப் போராட்டம் என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது இதில் இணைக்கப் பட்டிருக்கும் புகைப்படங்கள் . வாழ்த்துக்கள் தோழா விரைவில் வெற்றி நிச்சயம் . முடியாது என்று எப்பொழுது எண்ணத் தொடங்கிவிட்டோமோ அப்பொழுது நம்மை தோல்வி நெருங்கத் தொடங்கிவிடும் . எப்பொழுது முடியும் என்று நீ போராடத் தொடங்கிவிட்டாயோ அப்பொழுது தோல்வி என்பது நொறுங்கிவிடும் . நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை . நானும் விரைவில் ஒரு பதிவை வெளியிடுகிறேன் . வெற்றி நிச்சயம் .

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ingulab jinthabhaath...

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்களின் உழைப்பு(இந்த உண்ணாவிரதம்) வீண் போகாது நண்பரே..

வெற்றியுடன் சந்திப்போம்..

நிகழ்காலத்தில்... சொன்னது…

இத்தனை மனங்களின் துடிப்புக்கு நிச்சயம் நல்லபலன் கிடைத்தே தீரும்.,

போராட்டம் வெற்றிஅடைய வாழ்த்துகிறேன்

நிகழ்காலத்தில் சிவா

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இடுகையின் தலைப்பே
சூழலின் தீவிரத்தைக் காட்டுவதாக உள்ளது!!!!!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் போராட்டம்..

மரணத்தைத் தாண்டிய
வெற்றிப் பயணமாகவே அமையும் நண்பா!!!

பாளை.தணிகா சொன்னது…

தமிழகத்தை சுடுகாடாக மாற்றுவதற்குள் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.அணு என்ற பேரழிவில் இருந்து காப்பாற்ற பாடுபடும் அனைத்து மக்களும் வெற்றிபெற இறைவனை வேண்டிகொள்கிறேன்.பாளை.தணிகா.அல்ஜீரியா

Unknown சொன்னது…

இது மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான போராட்டமாகவே தெரிகிறது. வெல்லட்டும் போராட்டம்.

Unknown சொன்னது…

போராட்டக்களத்தில் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்..

சத்ரியன் சொன்னது…

வெல்வது உறுதி.

Unknown சொன்னது…

போராடுவோம் வெற்றி பெறுவோம்
வெற்றி பெறும்வரை போராடுவோம்
பாலா! உங்களை வலை உலகமே வாழ்த்துகிறது

நானும் இப் போராட்டம் பற்றி கவிதை
ஒன்று எழுதியுள்ளேன்

அன்புடன்
புலவர் சா இராமாநுசம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

கடம்பவன குயில் சொன்னது…

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே..
அனைவரின் உறுதியும் உண்ணா நோன்பும் அணுஅரக்கனை வீழ்த்தும் . இறைவனை வேண்டுகிறேன். வெற்றி நிச்சயம்.

shanmugavel சொன்னது…

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நிச்சயம் வெற்றி பெறும்.உறுதியாய் போராடுவோம் வெற்றி கிட்டும் வரை

kobiraj சொன்னது…

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

ராஜா MVS சொன்னது…

''துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!''-விவேகானந்தர்.

அங்கே கூடியிருக்கும் அனைவரிடமும் துணிவு இருக்கும் பொழுது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் பாலா...

வாழ்த்துகள்...

பெயரில்லா சொன்னது…

தொடர்ந்து போராடுவோம்... வெற்றி நமக்கே...பாலா...

koodal kanna சொன்னது…

பற்றவைத்து ஊதி அனைப்பதற்கு தீக்குச்சி இல்லை நாங்கள் . தீ இன்றி பற்றி எரியும் காட்டுத் தீ இந்தப் போராட்டம் என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது இதில் இணைக்கப் பட்டிருக்கும் புகைப்படங்கள் . வாழ்த்துக்கள் தோழா விரைவில் வெற்றி நிச்சயம் . முடியாது என்று எப்பொழுது எண்ணத் தொடங்கிவிட்டோமோ அப்பொழுது நம்மை தோல்வி நெருங்கத் தொடங்கிவிடும் . எப்பொழுது முடியும் என்று நீ போராடத் தொடங்கிவிட்டாயோ அப்பொழுது தோல்வி என்பது நொறுங்கிவிடும் . நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை . நானும் விரைவில் ஒரு பதிவை வெளியிடுகிறேன் . வெற்றி நிச்சயம் . அங்கே கூடியிருக்கும் அனைவரிடமும் துணிவு இருக்கும் பொழுது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் பாலா...போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே..
அனைவரின் உறுதியும் உண்ணா நோன்பும் அணுஅரக்கனை வீழ்த்தும் . இறைவனை வேண்டுகிறேன். வெற்றி நிச்சயம்.

Prabu Krishna சொன்னது…

வெற்றி நிச்சயம் சகோ. இணையத்தின் பலத்தை நிரூபிப்போம். தமிழனின் பலத்தை உணர்வோம்.

சம்பத்குமார் சொன்னது…

அரசவையே ! உங்களின்
செவிக்குள் எங்களின்
ஒப்பாரிகள் ஒலிக்கவில்லையா ?
உங்கள் கண்ணீரின்
உப்பு கரிக்கவில்லையா ?
இதயக் கிணற்றில்
இரக்க நீர் சுரக்கவில்லையா ?
எங்களின் சுவாசங்கள்
அடைபடப் போகிறதே…
சுவாசிக்கும் உங்களுக்கு
இன்னுமேன் தெரியவில்லை ?

இன்றைய எனது பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன் நண்பரே..

ஒன்றிணைந்து ஓங்கிக்குரல் கொடுப்போம் எழுப்பும் குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்படி செய்வோம்

வெற்றி நமதே.. வெற்றி நமதே..

ஒதிகை மு.க.அழகிரிவேல் சொன்னது…

கண்டிப்பாக வெற்றி கிட்டும்...

கவி அழகன் சொன்னது…

உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
பிணமாக விழுந்தாலும் இனமாக வீழ்வோம் வரும் சந்த்ததியினை காப்போம்

Vijayan Durai சொன்னது…

தங்கள் கோரிக்கை நியாயமானதே   .உங்கள்   போராட்டம் நிச்சயம் வெல்லும் .வாய்மையே  வெல்லும்.... 

Sivakumar சொன்னது…

போராட்டம் வெற்றி பெற எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எங்க அண்ணன் பாலபிரஜாபதியும் வந்துருந்தாரா...??? எங்க அண்ணன்னா சும்மாவா.....!!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வெற்றிக்கு என்றும் துணையிருப்போம்...

சீனிவாசன் சொன்னது…

தங்களின் மேன்மையான இந்த செயலும் மக்களின் போராட்டமும் வெற்றியடைய வாழ்த்துக்கள்