09 ஜூன் 2011

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery  மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு  தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ்  கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
 
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .


ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள் .

34 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை எனை நனைத்ததே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரயில்வே ஸ்டேஷ்ன்களில் ரொம்ப ஓவர் போலிகள்

Unknown சொன்னது…

மாப்ள மிகவும் தேவையான விழிப்புணர்வுப்பதிவு நன்றி!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வளிக்கும் பதிவு பாலா

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அவசரமான வாழ்வில் அவசரமாய் வாழ்வை முடித்துக்கொள்ளும் மனிதர்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கவா போகிறது...??

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பூச்சி்க்கொல்லி மருந்தைக் (கூல் டிரிங்ஸ்) கூட நடிகர்களோ நடிகைகளோ விளம்பரம் செய்தால் வாங்கிக்குடிக்கும் சராசரி மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம் பாலா.

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்மழையில பாத்து நனையுங்க ......தண்ணியில நிறைய பிரச்சினை இருக்கு ........

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்\\\ரயில்வே ஸ்டேஷ்ன்களில் ரொம்ப ஓவர் போலிகள் \\\உண்மை ...உண்மை .....

கூடல் பாலா சொன்னது…

@விக்கி உலகம்நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ....

கூடல் பாலா சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன்நீங்கள் சொல்வது போல் நிறையப்பேர் அப்படித்தான் .அதனால்தான் மருத்துவ மனைகளில் கூட்டம் அதிகமாகி போலி மருத்துவர்களும் அதிகரித்து வருகிறார்கள் .....

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான் நண்பா.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

மிக அருமையான, அவசியமான பதிவு நண்பா!!!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

இதுநாள் வரைக்கும் எனக்கு இது நிஜமாகவே தெரியாது.. ஒரு பயனுள்ள பதிவிற்கு வாழ்த்துக்கள்..

சென்னை பித்தன் சொன்னது…

மிக அவசியமான பதிவு!தகவ்லுக்கு நன்றி பாலா!

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா கருத்துக்கு நன்றி நண்பர் ராஜா

கூடல் பாலா சொன்னது…

@சென்னை பித்தன் நன்றி சென்னை பித்தன் அவர்களே .

தனிமரம் சொன்னது…

இதில் இவ்வளவு விசயங்களா! இதைத்தான் இங்கு குடிநீர்  என்று காசு கொடுத்து வாங்கிகுடித்து நோயையும் தேடுகிறோமோ?

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!ஆம் .எனக்குகூட சமீபத்தில்தான் தெரியும் .......கருத்துக்கு நன்றி கருண் .

கூடல் பாலா சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கருத்துக்கு நன்றி ராஜீவன் .

Sameera Redy சொன்னது…

Rompa avasiyamaana thakaval pakirvukku rompa nanri...

எம் அப்துல் காதர் சொன்னது…

எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டிய அவசியமான பதிவு. வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

நல்ல ஒரு தகவலை வழங்கியுள்ளீர்கள் பாஸ் ...

பிரபாஷ்கரன் சொன்னது…

நல்ல தகவல்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மிகத்தேவையான தகவல்கள் பாஸ். பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்!

கூடல் பாலா சொன்னது…

@எம் அப்துல் காதர்கருத்துக்கு நன்றி சகோதரரே . .

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி.தேங்க் யூ .........தேங்க் யூ.........

கூடல் பாலா சொன்னது…

@பிரபாஷ்கரன்வாங்க பிபாஷ்கரன் ....

கூடல் பாலா சொன்னது…

@பன்னிக்குட்டி ராம்சாமிஅப்புறம் பேப்பர் பத்திரம் அண்ணே .....

மகேந்திரன் சொன்னது…

அருமையான
தேவையான
பதிவு
நன்றி

Unknown சொன்னது…

அருமையான தகவல் நண்பரே

goma சொன்னது…

ஃபாஸ்ட் உலகில் இதைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை.....
என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
------------
இதயநிபுணர் அடிக்கடி சொல்லும் ஜோக் இது[மாடிப்படி ஏறினால் நல்லது என்பதை வலியுறுத்த சொல்வது
“மாடி ஏற சோம்பல் பட்டு லிஃப்ட் உபயோகித்தால் ‘சீக்கிரம் மேலே போய்விடலாம்..’
----------
ஃபாஸ்ட் ஃபுட் அடிக்கடி சாப்பிட்டால் ஃபாஸ்டா மேலே போய்விடலாம்.
------------
இந்த எச்சரிக்கையும் பத்தோடு 11 அத்தோடு இதுவும் ஒன்று

அன்புடன் நான் சொன்னது…

மிக பயனுள்ளத்தகவல்.... மிக்க நன்றிங்க

G.AruljothiKarikalan சொன்னது…

migavum gavanikka vendiya seidhi

aalunga சொன்னது…

நல்ல தகவல்.. நன்றி!