18 ஜூன் 2011

பிறந்தது காதில்லாத முயல் !கிளம்பியது பீதி !வீடியோ

ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று நடந்த நில நடுக்கம் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது .ஃபுகுஷிமா அணு உலைகள் வெடித்துச் சிதறியது மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கியது .
 

கதிரியக்கத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சியிருந்த நிலையில் அணு உலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நமி என்ற நகரத்தில் ஒரு முயல் காதில்லாத குட்டியை  ஈன்றுள்ளது .இது ஜப்பான் மக்களை பெரும் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது .

பீதிக்கு காரணம் இதற்க்கு முன் கடந்த 1986  ம் ஆண்டு செர்னோபிலில் நிகழ்ந்த அணு விபத்து நடந்த சிலமாதங்களில் கை கால்கள் வளர்ச்சியடையாமல் குழந்தைகள் பிறந்தன .எனவே ஜப்பானிலும் அது போல நிகழ வாய்ப்பிருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர் .

இதற்கு முன்னோட்டமாகவே மரபணு குறைபாட்டோடு  காதில்லாத முயல் பிறந்துள்ளதாக மக்கள் கருதுகிறார்கள் .செர்நோபில் போன்றதொரு துயரம் ஜப்பானில் நிகழாமலிருக்க கடவுளை வேண்டுவோம் .

                                காதில்லாத முயல் வீடியோ கீழே .

16 கருத்துகள்:

கடம்பவன குயில் சொன்னது…

கடவுளே அப்படி ஒரு தண்டனையை ஜப்பான் மக்களுக்கு கொடுத்துவிடாதே.

பாதிப்புகள் இல்லாதிருக்க கடவுளை வேண்டுவதைத்தவிர வேறு வழியில்லை.

பெயரில்லா சொன்னது…

ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் கதிரியக்க பாதிப்பு ஏற்படுமா என்பது கேள்விக்குறியே...! அந்த சிறுவனின் புகைப்படம் மனதை கலங்க வைக்கிறது ...

கிராமத்து காக்கை சொன்னது…

கதிரியக்கம் விலங்களுக்கு கூட மிக பெரிய விளைவை ஏற்படுத்ததுகிறதா?

Unknown சொன்னது…

அப்படி ஒன்று நடக்காமலிருக்கட்டும்!

ஹேமா சொன்னது…

பயங்கரமான செய்திதான் !

Mahan.Thamesh சொன்னது…

எதுவும் நடக்காமல் இருக்க கடவுளை பிரார்த்திப்போம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அய்யய்யோ

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில்உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி.பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் மகிழ்ச்சிதான்

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கைஆம் ...விலங்குகள், பறவைகள் ,தாவரங்கள் ,மனிதர்கள் ,அனைவருக்கும் கதிரியக்கத்தால் பாதிப்புதான்.

கூடல் பாலா சொன்னது…

@ஜீ...அதுதான் நமது விருப்பம்

கூடல் பாலா சொன்னது…

@ஹேமாஆம்

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thameshநன்றி ..தாமேஷ் .

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்ரொம்ப அதிர்ச்சியாகிட்டீங்களோ?

Unknown சொன்னது…

இப்படி நடக்காது இருக்க இறைவனை பிராத்திப்போம் ...

நிரூபன் சொன்னது…

சகோ, மனதிற்கு வேதனையைத் தரும் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க. இப்படி ஒரு நிலமை துன்பத்திற்குள்ளாகி இருக்கும் ஜப்பான் மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பது தான் என் விருப்பம்.