21 செப்டம்பர் 2011

வெற்றி : விரைவில் முடிவுக்கு வருகிறது உண்ணாவிரதம்

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 11 வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று போராட்டக்குழுவினர் நேற்று இரவு சென்னைக்கு பேச்சு வார்த்தைக்கு புறப்பட்டுச் சென்றனர் .

இன்று முதல்வருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது .அப்போது அணு உலையை தற்காலிகமாக மூட நாளை அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் முடிவு செய்துள்ளார் .மேலும் நிரந்தரமாக மூட மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கப்போவதில்லை எனவும் முதல்வர் உறுதியளித்துள்ளார் .

எனவே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

கூடிய விரைவில் உண்ணாவிரதம் முறைப்படி முடிவுக்கு வரும் . 

போராட்டம் வெற்றி பெற உழைத்த மக்களுக்கும் உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவுலக சொந்தங்களுக்கும் மிக்க நன்றி !

29 கருத்துகள்:

அமுதா கிருஷ்ணா சொன்னது…

இத்தனை நாட்கள் நீங்கள் அனைவரும் பட்ட கஷ்டம் வீண்போகாது.

rajamelaiyur சொன்னது…

All the best . .

Unknown சொன்னது…

மாப்ள நல்லதே நடக்கும்!

Unknown சொன்னது…

போராட்டம் வெற்றி பெற உழைத்த மக்களுக்கும் உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.. கூடங்குளம் காப்பாற்றப்பட்டது

COOL சொன்னது…

வெற்றி நிச்சயம்...

மகேந்திரன் சொன்னது…

நல்ல செய்தியை கொண்டு வந்துருக்கீங்க நண்பரே...
உடலை வருத்தி நிலைத்த கொள்கையுடன் உங்களுடன் உண்ணாவிரதம் இருந்த அத்தனை உள்ளங்களுக்கும்
உளம் நிறைந்த நன்றிகள்.
தற்காலிக முடிவு என்றாலும் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.
கூடிய விரைவில் மொத்தமாக மூட வழிவகை பிறக்கும்
என்ற நம்பிக்கையுடன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த தற்காலிக வெற்றியோடு நின்றுவிடாமல் நிரந்தர தீர்வுக்காக தொடர்ந்து இணைந்திருப்போம்....

தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

அனைவருக்கும் நன்றி!நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!
நன்றி! நன்றி! நன்றி!

குறிப்பாக பாலா உங்களுக்கு
மிக மிக நன்றி!
புலவர் சா இராமாநுசம்

ராஜா MVS சொன்னது…

நல்ல செய்தி பாலா...
இவ்வளவு நாள் தங்களுடன் உடலை வருத்தி போராடிய அத்தனை நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் & வாழ்த்துகள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லசெய்தி கேட்கும் போது மனம் உவகை கொள்ளவே செய்கிறது, இப்போராட்டத்தில் பதிவர்கள் சார்பாகவும் நீங்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருகிறது....அதிகாலையின் விடிவெள்ளி பூத்து விட்டது இதோ விடியலும் வந்தேவிட்டது வந்தேமாதரம்.....

Thennavan சொன்னது…

முதல் கட்ட வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது .
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !

SURYAJEEVA சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை தோழா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சியான செய்தி .
வாழ்த்துக்கள் .

Prabu Krishna சொன்னது…

கடந்த பதிவோகளையும் படித்தேன் சகோ...

நிரந்தரமாக மூடப்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

நெல்லி. மூர்த்தி சொன்னது…

முதல் கட்ட வெற்றியினை நினைக்கும் போது மனம் மகிழ்கின்றது. கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்! இருப்பினும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை நமக்கு ஓய்வில்லை என்பதையும் உணரவேண்டும். தேர்தலுக்காக கனிவான பார்வை வீசுகின்றதா இல்லையா என்பது போகப்போக தெரியும். தற்போதெல்லாம் நம் முதல்வர், தனக்கென / தன் குழுவினர்க்கென தனிச் சிந்தனையிருந்தாலும் பொதுமக்களின் எழுச்சிக்கு மதிப்பளிக்கின்றார் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். இதுவே கலைஞராக இருந்திருந்தால், காங்கிரஸின் நிர்ப்பந்தத்திற்க்காக எப்படியாவது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்திருப்ப்பார். இதை நாம் கடந்த காலத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலையின் வாயிலாக பெற்ற கசப்பான அனுபவம்! - நெல்லி. மூர்த்தி http://nellimoorthy.blogspot.com

சம்பத்குமார் சொன்னது…

மகிழ்ச்சியான செய்தி நண்பரே..

இந்த வெற்றி பெற குரல்கொடுத்த ஓவ்வொரு நல்இதயத்திற்க்கும் கோடானுகோடி நன்றிகள்

எனினும் முழுவெற்றி எட்டிவிடும் தூரம்தான்

நன்றியுடன்
சம்பத்குமார்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் பாலா - மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பது நிரூபணம் ஆகிறது. இது தற்காலிக வெற்றி தான். நிரந்தர வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மாய உலகம் சொன்னது…

போராட்டம் வெற்றி பெற உழைத்த மக்களுக்கும் உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவுலக சொந்தங்களுக்கும் மிக்க நன்றி !

மாய உலகம் சொன்னது…

இவ்வளவு நாள் தங்களுடன் உடலை வருத்தி போராடிய அத்தனை நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் & வாழ்த்துகள்...

பெயரில்லா சொன்னது…

மகிழ்ச்சி நண்பரே ...

கடம்பவன குயில் சொன்னது…

மிகவும் மகிழ்சியான செய்தி நண்பரே. தங்களுடன் உண்ணாவிரதம் இருந்து போராடிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். நிரந்தரமான தீர்வு விரைவில் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன் .

M.R சொன்னது…

மகிழ்ச்சியான செய்தி நண்பரே

பெயரில்லா சொன்னது…

முதல் கட்ட வெற்றி மகிழ்ச்சியை தருகிறது... இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி...குறிப்பாக பாலா உங்களுக்கு... பதிவுலக சொந்தங்களுக்கும் மிக்க நன்றி... நிரந்தர வெற்றி எட்டிவிடும் தூரம்தான்...

ரெவெரி

Unknown சொன்னது…

வெற்றி......வெற்றி......வெற்றி.......

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

உலக சினிமா ரசிகன் சொன்னது…

இந்த தற்காலிக வெற்றி....நிச்சயம் நிரந்தர வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

Angel சொன்னது…

உங்களுக்கும் உங்களுடன் உடல் வருத்தி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற உறவுகளுக்கும் நன்றி .நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே எங்களது மேலான விருப்பம்

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

மக்களின் உணர்வு பூர்வமான எழுச்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

செய்திப் பகிர்விற்உ நன்றி.

Thennavan சொன்னது…

//நெல்லி. மூர்த்தி சொன்னது…

இதுவே கலைஞராக இருந்திருந்தால், காங்கிரஸின் நிர்ப்பந்தத்திற்க்காக எப்படியாவது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்திருப்ப்பார். இதை நாம் கடந்த காலத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலையின் வாயிலாக பெற்ற கசப்பான அனுபவம்! - நெல்லி. மூர்த்தி http://nellimoorthy.blogspot.com//


கண்டிப்பாக செய்திருப்ப்பார்.

சென்னை பித்தன் சொன்னது…

மிக மகிழ்ச்சியளிக்கும் செய்தி பாலா!