20 செப்டம்பர் 2011

அணு உலை போராட்டக்குழு அலைக்கழிப்பு -பேச்சு வார்த்தைகள் ரத்து

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 127 பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று பத்தாவது நாளாக நடைபெறுகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தி வணிகர்கள் ஆதரவளித்தனர் .
இந்நிலையில் போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்த இடிந்தகரை வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார் .ஆனால் இன்று மாலை வரை வரவில்லை .

திடீரென மாலை 4 -25 மணிக்கு ராதாபுரம் தாலுகா அலுவலகத்திலுள்ள தலையாரி இடிந்தகரை வந்து 4 -30 மணிக்கு அமைச்சரை சந்திக்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் .இடிந்தகரையில் இருந்து ராதாபுரம் செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகும் அப்படியிருக்கையில் இந்த அழைப்பு போராட்டக் குழுவினரை அவமதிக்கும் செயல் எனக் கருதப் பட்டதால் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த 15 000 க்கும் அதிகமான மக்கள் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .

இந்நிலையில் 16 பேர் கொண்ட குழு நாளை தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது .ஆனால் முதல்வர் அலுவலகத்தால் இப்பட்டியல் திருத்தியமைக்கப் பட்டது .பட்டியலிலிருந்து போராட்டத்திற்கு பேராதரவு அளித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் பெயர் நீக்கப்பட்டது .குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 10 ஆக குறைக்க கேட்டுக்கொள்ள பட்டது .இதற்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதன் காரணமாக முதலமைச்சருடனான பேச்சு வார்த்தையும் ரத்து செய்யப்பட்டது .


இன்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள்

மேலும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடப்பட்டுள்ளது .அதில் அணு உலை பிரச்சினையில் நேற்று முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் அமைச்சரவையைக்கூட்டி கூடங்குளம் அணு உலைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டம் கைவிடப்படும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது .

போராட்டம் 11 நாளை நோக்கி .....
-------------------------------------------------------------------------------------------------------
சற்று முன் : மத்திய அமைச்சர் நாராயண சாமி தற்போது உண்ணாவிரதத்தை பார்வையிட்டு சென்றார் .பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை .

14 கருத்துகள்:

K சொன்னது…

கவலையான செய்தி பாலா அண்ணே!

SURYAJEEVA சொன்னது…

இது வரை உற்சாகமாக இருந்த எங்களுக்கு சற்று விழித்தெழ வைத்துள்ளீர்கள்... தொட்டு விடும் தூரம் என்று இருந்த என்னை அது கானல் நீர் என்று காட்டி விட்டீர்கள்... வெற்றி கிட்டி விடும் என்று தளர்ந்திருந்த குரல்களை ஓங்கி ஒழிக்க வேண்டிய நேரம் இது... இன்குலாப் ஜிந்தாபாத்

பெயரில்லா சொன்னது…

ஜெயா இரட்டை வேடம் போடுவதாக எனக்கு தோனுகிறது...மு க வின் இலங்கை நாடகங்கள் போல...
ரெவெரி

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தொடர்ந்து போராடுங்கள்.... அரசு செவிமெடுக்கும் வரை...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போராட்டத்தை ஊடம் பார்க்க அமைச்சர் வந்திருப்பார் என நினைக்கிறேன், இருந்தாலும் நமக்கு வெற்றி நிச்சயம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தளர்ந்திடாமல் போராடுவோம், போராட்டத்தை வலுப்படுத்துவோம்....

சம்பத்குமார் சொன்னது…

நண்பரே.. தளர வேண்டாம் !

போராட்டத்தினை தீவிரப்படுத்துவோம்

பதிவுலக நண்பர்களே ஒண்றிணைந்து ஓங்கிக் குரல்கொடுப்போம்

இன்குலாப் ஜிந்தாபாத்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

போராட்டத்தை வலுப்படுத்துவோம்...

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,
மத்திய அரசின் இச் செயலும், அமைச்சர் நாராயணசாமியின் பாராமுகத் தன்மையும் கவலையளிக்கிறது.

காட்டான் சொன்னது…

உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..

பெயரில்லா சொன்னது…

போராட்டம் வெற்றியடைய வேண்டுகிறேன்....

(நட்சத்திர அந்தஸ்துக்கும் வாழ்த்துக்கள்)

துளசி கோபால் சொன்னது…

நட்சத்திர வாழ்த்து(க்)கள் பாலா. கூடங்குளம் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

யாழ்.பாஸ்கரன் சொன்னது…

புகுஷிமாவை பார்த்தும் புத்திவரவில்லை நம் அரசியல் வியாபாரிகளுக்கு. உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

பெயரில்லா சொன்னது…

கூடங்குளம் அணு உலைகளைத் தடுத்து நிறுத்திவிட்டால், இந்தியா தன்னிறைவு அடையாது. ரஷ்யா மேலும் உதவுவது தடுக்கப்படும். இந்திய மார்க்கெட்டில், அமெரிக்கா நுழையலாம்; பணம் கொழிக்கலாம். இதுதான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பின், பின்புலத்திலுள்ள முக்கிய காரணம்.அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் சம்பந்தமான விவாதங்கள், 2006 முதல் 2008 வரை, இந்திய முழுவதும் நடைபெற்று வந்தன. அப்போது, ரஷ்யா உதவியுடன், கூடங்குளம் அணு உலைகளின் கட்டுமான வேலைகள், பெரிய அளவில் நடைபெற்று வந்தன.அப்போதெல்லாம் அணு உலைகள் அமைக்கப்பட்டால், அவை வெடிக்கும்; லட்சக்கணக்கான மக்கள் மாண்டு விடுவர் என, போராட்டங்கள் வெடிக்கவில்லை ஏன்?

அணு உலைகளே வேண்டாம் என்பவர்கள், இப்போது போல் அப்போது கொதித்தெழுந்திருக்க வேண்டியது தானே! ஏன் வாய் மூடி மவுனம் காத்தனர்? காரணம் வெள்ளிடைமலை.அமெரிக்காவுடன் ஏற்பட்ட, 123 அணு உலை ஒப்பந்தம் அமலுக்கு வர, பல சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. இழப்பீடு சம்பந்தமான இந்திய சட்டத்தை, இங்கு உலைகள் கட்டவிருந்த, அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்திய மண்ணில் அமெரிக்கா கால் வைக்க முடியவில்லை.கூடங்குளம் அணு உலைகள், வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கினால், ரஷ்யாவே இந்தியாவில் கட்டப்படவுள்ள மற்ற உலைகளைக் கட்டத் துவங்கும். பெரிய இந்திய மார்க்கெட்டை, அமெரிக்கா இழக்கும்; அமெரிக்க ஆசை, நிராசையாகப் போய்விடும்.

அந்நிலையைத் தடுக்கவே, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், கூடங்குளம் அணு உலை உற்பத்தியைத் துவங்கும் சமயத்தில், இந்த திடீர் போராட்டம்; அதுவும் இத்தனை உக்கிரமாக.லோக்கல் காரணம்மற்றுமொரு முக்கியமான தூண்டுதல், மூன்று மாவட்டங்களின் முக்கிய பிரமுகர்களிடமிருந்து. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில், பூமிக்கடியில் அதிகளவு கனிமங்கள் உள்ளன.இவற்றை, சில தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்து பணத்தை அபரிமிதமாக அள்ளிக் கொண்டிருக்கின்றன. கனிம சாம்ராஜ்யம் நடத்துவோர், எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தற்சமயம் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கினால், மத்திய அரசு சட்டப்படி, 16 கி.மீ., சுற்றளவுக்கு கனிமங்களை வெட்டி எடுக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்கவோ அனுமதியில்லை என்பது, பெரும் தொழிலதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதனால், பல கொழுத்த தொழிலதிபர்களும், கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்து வருவதோடு, பல உதவிகளையும் செய்து வருகின்றனர்.நிபுணர் குழு ஒன்றை அமைத்து, உலையை ஆய்வு செய்து, மக்களின் அச்சத்தைப் போக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களின் அச்சத்தைப் போக்க முடியுமா?திறந்த மனதுடன் அவர்கள், எதையும் கேட்கத் தயாராயில்லை. அளவுக்கு மீறிய பொய்ப் பிரசாரங்களாலும், துர்போதனைகளாலும், அச்சமும், மனக் கிளர்ச்சியும், அம்மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.கிளர்ச்சியை முன்னிருந்து நடத்துபவர்கள், சில சமூகக் கட்டுப்பாட்டை தீவிரமாகவும், முழுமையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் இயங்கி வரும், 529 உலைகளிலும், மிகவும் அதிநவீனமான பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது, கூடங்குளம் அணு உலைகள் என, எத்தனை விஞ்ஞான ஆதாரங்களுடன் நிரூபித்தாலும், அவர்கள் காது கொடுத்து கேட்கத் தயாரில்லை.தமிழகத்திலேயே, கல்பாக்கத்தில், 25 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும், தலைசிறந்த உதாரணத்தை நினைத்துப் பார்க்கவே அவர்கள் விரும்பவில்லை.கல்பாக்கம் உலையைச் சுற்றி, 40 ஆயிரம் மக்கள், எந்த பாதிப்புமின்றி கடந்த கால் நூற்றாண்டு காலமாக வசித்து வருவதையோ, உலையைச் சுற்றி எப்போதும் போல், மீனவர்கள் மீன் பிடித்து வாழ்ந்து வருவதையோ, ஒரு சாதாரண நிர்தட்சயமான உண்மை என்று, கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

பற்பல லெட்டர்பேடு இயக்கங்கள், இந்த சாக்கில் மக்களைத் தூண்டி விட்டு, தங்களை முன்னிறுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும், இவையெல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால், ஓட்டு ஆதாயங்களுக்காக, கூடங்குளம் விவகாரங்களை அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றன. பாமரத்தனமான பயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்ப் பிரசாரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. இதனால், மின் பற்றாக்குறையால் அல்லலுறும் அப்பாவித் தமிழக மக்கள் தான், ஐயோ பாவம்!