09 ஜூன் 2011

அணு உலைகளை அம்மா ஆதரிப்பாரா ?


தமிழகத்தில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் .அதே வேளையில் புதிய அரசின் சில அறிவிப்புகள் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது .

இதில் புதிய சர்ச்சை நேற்று முன் தினம் அம்மா அவர்கள் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை .

தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு கூடன்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை உடனடியாக  துவக்கவேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை .

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினைதான் .ஆனால் அணு உலை செயல்பட ஆரம்பித்தால் மின் தட்டுப்பாட்டை விட பெரிய பிரச்சினை புதிதாக ஆரம்பிக்கும் .

இந்த நேரத்தில் அணு ஆபத்து தொடர்பாக அம்மா அவர்கள் 4 வருடங்களுக்கு முன்பாக விடுத்த அறிக்கை நினைவுகூரத்தக்கது .

கடந்த 1-7-2007 அன்று நிமிட்ஸ் என்ற அமெரிக்கப் போர்க்கப்பல் சென்னை துறை முகத்திற்கு வந்தது .அது வருவதற்கு முன்பாக 26-6-2007 அன்று அம்மா அளித்த பேட்டியில் இந்த போர் கப்பல் அணு சக்தி மூலம் இயங்கக்கூடியது .அது சென்னை துறை முகத்துக்கு வந்தால் மக்களுக்கு கதிரியக்க ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது .எனவே அக்கப்பல் சென்னை துறை முகத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் என்றும் மதிய அரசுக்கு கோரிக்கை விடுத்தார் .

ஆனால் இப்போது தென் தமிழக மக்கள் தலைக்கு அடியில் வைத்து தூங்க அணு உலைகளை கேட்கிறார் .இது எந்த விதத்தில் நியாயம் .

ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்துக்களுக்கு பிறகு பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூடி வருகின்றன .கூடன்குளம் அணு உலையோ கடற்கரையில் சுனாமி எளிதில் தாக்கும் வகையில் உள்ளது .எனவே கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு பதிலாக சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத வேறு ஏதாவது வழிகளில் மின்சாரம் தயாரிக்க முயற்சித்தால் நல்லது என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்கள் மற்றும் தென் தமிழக மக்களின் விருப்பம் .

8 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அம்மா ஒரு தெளிவுக்கு வந்தால் சரி...

சக்தி கல்வி மையம் சொன்னது…

பொறுத்திருந்து பார்ப்போம்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

வணக்கம் பாலா!

அணுசக்தியை இன்று உலகின் பல முன்ன்ணி நாடுகள் பயன்படுத்துகின்றன! இப்போதெல்லாம் தகுந்த பாதுகாப்பு முறைகள் கையாளப்படுகின்றன! இங்கு வெளிநாடுகள் கைக்கொள்ளும் பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாட்டில் கையாண்டால், அணு சக்தி என்பது ஒரு வரமாகவே இருக்கும்! என நினைக்கிறேன்!

ஆனாலும் சுற்று சூழலியல் தொடர்பான உங்கள் கரிசனம் வியக்க வைக்கிறது

கூடல் பாலா சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி அதுக்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க ராஜீவன்...இவங்களுக்கு பணம் கெடைச்சுதுன்னா எல்லாத்தையும் மறந்திடுவாங்க .

கடம்பவன குயில் சொன்னது…

//அதுக்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க ராஜீவன்...இவங்களுக்கு பணம் கெடைச்சுதுன்னா எல்லாத்தையும் மறந்திடுவாங்க .//

நீங்க சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் பாலா. மக்கள் பாதுகாப்பு ஆபத்துகாலத்தில் கேள்விக்குறியே.

ஹேமா சொன்னது…

நம் நாடுகளுக்கும் இதுக்கும் ஒத்துவராது.ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கமாட்டார்கள் யாருமே !

கூடல் பாலா சொன்னது…

@ஹேமாவெல்கம் ஹேமா .....

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில்ஏதோ நம்மளால முடிஞ்சா அளவு முயற்சி செய்வோம் .நன்றி கடம்பவன குயில் .