01 செப்டம்பர் 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் !

ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள் .இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன .மாறாக இந்தியப் பிரதமர் பல அணு உலைகள் அமைப்பதில் தீவிரமாக உள்ளார் .


இதனிடையே தென் தமிழகத்திற்கு  அச்சுறுத்தலாகி வரும் கூடங்குளம் அணு உலையைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன .

இந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் கடும் நெருக்கடியை சமாளிக்கவேண்டிய சூழ் நிலையில் இருக்கின்ற வேளையில் அணு உலையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது .

கூடங்குளம் அணு உலை 2001  ம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டது .
தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படும் மணலில் கடல் மண் கலக்கப் படுவதாக சர்ச்சை எழுந்தது.

அப்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த  அப்பாவு அவர்கள் திருநெல்வேலி  மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.பின்னர் இது பற்றிய விளக்கங்கள் எதுவும் பொது மக்களுக்கு தெரியப்  படுத்தப் படவில்லை .


இந்நிலையில் இப்போது புதிதாக சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வந்துள்ளன .அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 5  கிலோ மீட்டர் சுற்றளவிலான பகுதி நுண்ம பாது காப்பு பகுதி (Sterilized zone) என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை .அதிலும் அணு உலை அமைந்திருக்கும் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை .

ஆனால் தற்போது அணு உலையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் குவாரி செயல் பட்டு வருவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .இதன் காரணமாக அணு உலையின் அடித் தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .இது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியுள்ளது .

இது சம்மந்தமாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது .உயர்நீதிமன்றம் நெல்லை மாவட்ட ஆட்சியரை  இரண்டு வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளது .

17 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

ஐயா!மன்மோகன் நல்ல விஷயங்கள்ல மத்த நாடுகளோட போட்டி போடுங்க!இது மாதிரி விஷயங்கள்ல வேண்டாம்!

காமன்வெல்த் பாலம் ரேஞ்சுக்கு அணுஉலைகள் கட்டப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.நம்ம நாமே அணுக்கதிர்களால் தாக்கிக்க சூழலை உருவாக்காதீர்கள்!
முடிஞ்சா பேஸ்மட்டத்த ஸ்ட்ராங்கா போடுங்க இல்லன்னா ஆணியே புடுங்க வேண்டாம்!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிகவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விசயம் .விழிப்புணர்வுடன் அனைவரும் செயல்படவேண்டும் .

கோகுல் சொன்னது…

வலைச்சர வாழ்த்துக்கள்!
மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

திடுக்கிடும் செய்தி பால!
பலரும் அறிய பதிவிட்டீர்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

shanmugavel சொன்னது…

கண்ணை விற்று சித்திரம் வாங்குவது என்பது இதுதான்.

shanmugavel சொன்னது…

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

Prabu Krishna சொன்னது…

இது குறித்து நீங்கள் தரும் தகவல்களை நினைத்தால் கவலையாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

ஒரே நல்லது.. அதனால் வேலை வாய்ப்பு தான்..

பெயரில்லா சொன்னது…

வரும் முன் காப்பது தான் சிறந்தது.. உதாரணமாய் போபால் விசவாயு அனர்த்தம் ...

COOL சொன்னது…

//
முடிஞ்சா பேஸ்மட்டத்த ஸ்ட்ராங்கா போடுங்க இல்லன்னா ஆணியே புடுங்க வேண்டாம்!
//
இந்த ஆணிய புடுங்க வேண்டாம்னு நாம சென்னா கேப்பாங்களா.
வருத்தப்படும் விஷயம்.
தகவலுக்கு நன்றி நண்பா...

மாய உலகம் சொன்னது…

விழிப்புடன் செயல் படவேண்டும் ..

M.R சொன்னது…

tamil manam 9
வருத்த படவேண்டிய விஷயம் நண்பரே.நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவோம் நண்பரே.

rajamelaiyur சொன்னது…

இத விஷயம் அனைவருக்கும் தெரியபடுத்தவேண்டும்

மகேந்திரன் சொன்னது…

நச்சென்ற ஆதாரங்கள் நண்பரே....

இப்போது பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள்
ஒரு பாதுகாப்பு சாதனமுமின்றி பணிபுரிகிறார்கள்
கடல் மண்ணை கலந்து அஸ்திவாரம் கட்டியவர்கள்
மனித உயிரைப் பற்றியா கவலைப் படப்போகிறார்கள்.
துரத்தியடிக்க வேண்டும் நண்பரே....
போராடுவோம்.

Krishna சொன்னது…

எனக்கு ஒரு டவுட்?

நிரூபன் சொன்னது…

மக்கள் குடியிருப்பிற்கு அருகே கூடங்குளம் அணு உலைகள் அமைந்திருப்பது இன்னும் ஆபத்தானது..
பாலா அண்ணா, இவர்களின் இக் கொடூர முயற்சியினைப் பிரச்சாரங்கள், போராட்டங்கள் மூலமாகத் தடுத்து நிறுத்த முடியாதா?

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை கைவிட தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம் ...நல்ல முடிவை எதிர் பார்க்கிறோம் .