23 ஜூலை 2011

செல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான ஆறு உணவுகள் !

நம்மில் பலர்  வீடுகளில் செல்லப் பிராணிகளை  குழந்தைகளுக்கு நிகராக அன்புடன் வளர்க்கிறோம் .பலர் தாங்கள் சாப்பிடும் உனாவுப் பொருட்களை செல்லப் பிராணிகளுக்கும் கொடுப்பதுண்டு .


இவற்றில் சில செல்லப்பிராணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவன   என்பது உங்களுக்கு தெரியுமா ?


1 .சாக்லேட்
குழந்தைகளுக்கு மிகப்பிடித்த உணவு .ஆனால் செல்லப்பிரானிகளுக்கு ஆபத்தான உணவு .சாக்லேட்டில் உள்ள தியோபிரோமின் எனும் வேதிப்பொருள் நாய்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது .அதிகமாக சாக்லேட் உட்கொண்டால் நாய்களுக்கு ஆபத்து .



2 .பூண்டு
மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது பூண்டு .ஆனால் விலங்குகளுக்கு மிகச்சிறிய அளவு பூண்டுதான் ஜீரணிக்கும். அளவுக்கதிகமாக பூண்டை உட்கொண்டால் ஆபத்து .


3 . வெங்காயம்
இதுவும் மனிதர்களின் அத்தியாவசிய உணவு.ஆனால் இதிலுள்ள  தையோ சல்பேட் விலங்குகளுக்கு ஆபத்தானது .குறைந்த அளவு வெங்காயத்தை உட்கொண்டாலே நாய் ,பூனைகள் உயிருக்கு ஆபத்து .

4 .எலும்புத்துண்டு

நாய்களுக்கு விருப்ப உணவு .ஆனால் பெரிய அளவிலான எலும்புத் துண்டுகள் நாயின் ஜீரண உறுப்புகளை சிதைக்கக்கூடியவை

5 .காய்ந்த பீன்ஸ் விதைகள்

பறவைகள் விரும்பி சாப்பிடும் உணவு .ஆனால் இதிலுள்ள ஹீமா குளுட்டனின் எனும் வேதிப்பொருள் செல்லப்பிராணிகளின் இரத்த சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது
 
6 .பீர்

நம்மை போல் நமது செல்லப்பிராணிகளும் குதூகலமாக இருக்கட்டும் என்று நினைத்து அவற்றுக்கு பீர் அருந்தக் கொடுத்தால் அவ்வளவுதான்

டிஸ்கி : வாசகர்களும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை கருத்தில் பகிரலாம்

 நன்றி : mother nature network

16 கருத்துகள்:

Mathuran சொன்னது…

அடடா... இப்பிடியெல்லாம் இருக்கா... இது தெரியாம கண்டதையும் கொடுத்து செல்லப்பிராணிய கொல்ல பாத்திருக்கிறோமே....
நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல் பாஸ் ,எனக்கு இதில் சில இதுவரை தெரியாது ஆகவே நன்றி ....

கிராமத்து காக்கை சொன்னது…

5 அறிவு பற்றிய தகவலுக்கு 6 அறிவுகள் நன்றி சொல்ல வேண்டும்ல நன்றி நன்றி

கோவை நேரம் சொன்னது…

தகவலுக்கு நன்றி

M.R சொன்னது…

தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் .
பகிர்வுக்கு நன்றி .

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

செல்லப் பிராணிகளை வளர்ப்பதில்லை..

ந்ன்றி


அன்புடன் வணக்கம் ,,

என்ன கொடுமை நண்பரே,

நீங்க 343 பேரை பாலோ பண்ணி ...
உங்களை வெறும் 37 பேர் தான் பாலோ பண்றாங்களா ?

நாட்டுலே இப்படியுமா ?

சரி..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

மன்னிக்க அதில் உள்ள பின் செய்தி வேறு ஒரு நண்பருக்கு உரியது ..

தவறுதலாக இங்கும் வெளியிடப்பட்டது.

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
வீட்டில் உள்ள பிராணிகளுக்கு எப்படியான உணவுகளைக் கொடுக்காது தவிர்க்க வேண்டும் என்பதனை விளக்கும் வண்ணம் அருமையான பகிர்வினைத் தந்திருக்கிறிங்க

மாய உலகம் சொன்னது…

புதிய உபயோகமான தகவல்.. நமது செல்லபிராணியை காப்போம்...

பெயரில்லா சொன்னது…

தகவலுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்...
பகிர்வுக்கு நன்றி நண்பரே...

Reverie

Unknown சொன்னது…

TQ ....FRIEND
GOOD POST CONGRATS

Unknown சொன்னது…

லே அவுட் சூப்பர் தல...அவ்வவ் பதிவில் காரம் ஜாஸ்தி!!

Unknown சொன்னது…

நான் மீன் முள்ளு குடுப்பதில்லை ஹிஹி

மகேந்திரன் சொன்னது…

பயனுள்ள செய்திகள்
ஆனால் எலும்புத்துண்டு பற்றிய செய்திதான்
சற்று திகைக்க வைக்கிறது.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

useful information. thanks