02 ஜூலை 2011

குழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் !!!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று சொல்கிறோம் .கடவுளுக்கு எப்படி மரியாதை குறைந்துவிட்டதோ அது போலத்தான் குழந்தைகளையும் சரியாக பலர் பேணுவதில்லை  .

இதில் நம் நாடு சற்று பரவாயில்லை .ஐரோப்பிய நாடுகளில் ......
படங்களை பாருங்கள் விளங்கும்

தகர டப்பாவை விட கேவலமாய் தரையில்

அண்ணாச்சி எந்த இடத்துல கண்ணி போட்டீங்க ......பாவம்யா


ரெண்டையும் எந்தலையில கெட்டிட்டு இந்த சனியன் எங்க போயி தொலஞ்சது 

ஒரு தள்ளுவண்டி ஒரு இழுவண்டி

குழந்தையை பற்றி கவனமில்லாமல் தனது மேட்டரில் கவனமாய்

முழு பலத்தோட இழுத்து பாத்தாச்சி ம்......ஹூம்

குரங்குக்கும் எனக்கும் வித்தியாசமே கிடையாதாம்மா

என்னத்த படம் புடிக்கிற 

மாட்டை விட கேவலமா இழுக்கிறானே வலி தாங்க முடியலியே

 பிள்ளையா டிராலியா 

நாய்கூட முன்னாடி போகுது 

21 கருத்துகள்:

Mahan.Thamesh சொன்னது…

சகோ ஐரோப்பிய நாடுகளில் குழந்தை பிறந்தது முதல் பிள்ளையை தாயோ தகப்பனோ தூக்குவது மிக குறைவு
பிள்ளை நடக்காத பருவத்தில் வண்டிலுக்குள் கொண்டு செல்வார்கள் நடக்கத்தொடங்கியதும் இவ்வாறு தான். சிலவேளை
பிள்ளை விழுந்தாலும் துக்கமாட்டர்கள் பிள்ளை தானாக எழும்பும் வரை பார்த்துகொண்டு இருப்பார்கள் . நன்றி சகோ /

Unknown சொன்னது…

அட கொடுமையே ....இந்த பெற்றோரை இந்த குழந்தைகள் முதியோர் இல்லத்தில் தான் சேர்க்கும் பின்னாளில்

Unknown சொன்னது…

வடையுடன்
விடைபெறுகிறேன்

Unknown சொன்னது…

வடை போச்சே

மதுரை சரவணன் சொன்னது…

padaththudan vilakkam arumai... vaalththukkal

கூடல் பாலா சொன்னது…

@ ரியாஸ் அஹமது ஆமா ..வடை போச்சே .உண்மையிலேயே நீங்க சொன்ன மாதிரிதான் நடக்கும் ...

கூடல் பாலா சொன்னது…

@ Mahan.Thamesh ஒருவேளை மனைவியை தூக்குவார்களாக இருக்கும்

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஹா...ஹா...

rajamelaiyur சொன்னது…

Parent child relationship is change country to country . In this matter we proud to be a indianParent child relationship is change country to country . In this matter we proud to be a indian

கூடல் பாலா சொன்னது…

@ மதுரை சரவணன் நன்றி சரவணன்

கூடல் பாலா சொன்னது…

@ !* வேடந்தாங்கல் - கருன் *! ஏன் சிரிக்கிறீங்க ..உங்களையும் இப்படித்தான் இழுத்தாங்களா ?

கடம்பவன குயில் சொன்னது…

என்ன கொடுமை இது? நிஜமாகவே நம்முர் குரங்காட்டி குரங்கை நடத்துறது போலதான் நடத்துறாங்கப்பா.

கிராமத்து காக்கை சொன்னது…

நம்ம நாட்ல இந்த கலாச்சாரம் வராமல் இருந்த சரி

நிரூபன் சொன்னது…

பாஸ் படங்களைப் பார்க்கையில் வேதனையாகவும் இருக்கிறது, வேடிக்கையாகவும் இருக்கிறது.
எங்கள் நாடுகளுக்கு இந் நிலமை பரவமால் இருந்தால் சந்தோசமே.

ஹேமா சொன்னது…

சிரிப்பாத்தான் இருக்கு படங்களைப் பார்க்க.ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வயது வர தன்பாட்டில் தம் வாழ்க்கையை இயக்கப் பழகிக்கொள்கிறார்கள் இங்கு பிள்ளைகள் !

மகேந்திரன் சொன்னது…

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில்
மட்டுமல்ல அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ
அங்கெல்லாம் இந்த விஷத்தை விதைக்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரக்கத்தில் நான் இந்த கூத்தை
நிறைய பார்த்திருக்கிறேன்.

இங்கு படித்து வளர்ந்த நம்ம ஊர்ப்பெண் ஒருவர்
நம்ம ஊர் மதுரை பக்கம் திருபுவனம் என்னும் ஊரில்
வாக்கப்பட்டார். மேலை நாடுகளின் கலாச்சாரத்தில்
ஊறியவர். அவருக்கு குழந்தை பிறந்ததும் சில நாட்களில்
இப்படி ஒரு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு
போவதை பார்த்தேன்....
அவர் என் நண்பரின் மனைவி.........

குழந்தைகளை கூட்டிச் செல்லும் போது உங்கள் இதய
வாசகங்கள் அவர்களின் காதில் கேட்குமாறு
நெஞ்சோடு அனைத்துச் செல்லுங்கள். அப்போதுதான்
தாய்மையின் உத்தமமும் உறவுகளின்
இணைப்பும் அவர்களுக்கு உரமாகும்.
இப்படி இழுத்துச் சென்றால் முதலில் நம்ம ஊர்
சாலைகளின் நிலைமைக்கு அவர்கள் குடல் வெளியே வந்துவிடும்.

""" திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்"""

அன்பன்
மகேந்திரன்

கோவை நேரம் சொன்னது…

அட பாவமே ...இப்படியுமா ...பின் எப்படி பாசம் இருக்கும் ..?

குணசேகரன்... சொன்னது…

படங்களைப் பார்க்கையில் வேதனையாகவும் இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நானும் நேரடியாகக்கண்டு வேதனைப்பட்டிருக்கிறேன். குழந்தைகள் அழுவதை பொருட்படுத்துவதே இல்லை. கைகுழந்தயை உள்ளே வைத்து வலைகதவை மூடிவிட்டு தாயும் தந்தையும் புகை பிடிக்கும் கண்றாவிக்காட்சி சகிக்க முடியவில்லை. வீட்டிற்குள் புகைத்தால் பயர் அலாரம் அடிக்குமே.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கூடல் பாலா - நாட்டிற்கு நாடு கலாச்சாரம் மறும் - அது அடுத்தவர்களுக்கு வேடிக்கையாகத் தான் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் தன் கால் ஊன்றி வளர வேண்டும் என்றே பெற்றோர் நினைக்கின்றனர். நல்வாழ்த்துகள் பாலா - நட்புடன் சீனா

Mohamed Faaique சொன்னது…

ஐரோப்பிய குழந்தைகள் சுட்டித்தனம் நிறைந்தவர்கள். விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த முறை பாதுகாப்பாய் தெரிகிறது. இதில் எதுவும் தூக்கி சுமக்க கூடிய குழந்தையாய் தெரியவில்லை..