06 ஜூலை 2011

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே !

இது போன்ற  பல பழமொழிகளை நாம் அடிக்கடி உபயோகிக்கிறோம் .ஆனால் இவை பலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது .
 
 1 .பகையாளி வீட்டை உறவாடிக்கெடு
 
இதை மேலோட்டமாக பார்த்தால் நமது முன்னோர்கள் ஒரு டெரரான  பாதையை  நமக்கு காண்பிப்பது போல் தோன்றும் .இந்த பழமொழியின் உண்மையான பொருள் என்னவென்றால் பகையாளியிடம் நாம் உறவாடினால் நாளடைவில் அவர்களும் நம்மிடம் உறவாட ஆரம்பித்து அந்த பகை கெட்டுப்போகும் என்பதுதான் .
 
டிஸ்கி :அளவுக்கதிகமாக பகையாளியிடம் உறவாடினால் இவன் ரொம்ப நல்லவனா இருக்கான்னு நெனச்சி அளவுக்கதிகமாக அடிக்கவும் வாய்ப்புள்ளது .
 
2 .ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
 
மேலோட்டமாக பார்த்தால் இது முரண்பாடு நிறைந்ததாக தோன்றும் .அதெப்படி அடுத்த வீட்டு பிள்ளையை ஊட்டினால் நம் பிள்ளைக்கு சாப்பாடு போடவேண்டிய அவசியம் இல்லையா .?
இதன் உண்மையான பொருள் வேறு .இது புது மாப்பிள்ளைகளுக்காக வகுக்கப்பட்ட பழமொழி .இங்கு ஊரார் பிள்ளை என்று மனைவியை குறிப்பிடுகிறார்கள் .கட்டிய மனைவிக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் அவள் வயிற்றில் இருக்கும் தனது பிள்ளை நன்கு வளரும் என்பதே கணவனுக்கு கூறப்படும் அறிவுரை .
 
டிஸ்கி : நம்மாளு ஒருத்தர் பக்கத்து வீட்டு பையன் ஊட்டியில உள்ள பாட்டி வீட்டுல வளருறதுனால அவரோட பையனுக்கு சரியா சாப்பாடே போடுறதில்ல.மிஸ் அண்டர்ஸ்டேன்டிங் 
 
3 .கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே  

அப்படீன்னா வீட்டு சாவியை கள்ளன்கிட்ட கொடுக்கலாம் .பக்கத்து வீட்டுக்காரன் குள்ளமாக இருந்தால் அவனிடம் கொடுக்கக்கூடாதா
இது பாகவதத்துல உள்ள கதைங்க .இங்கே கள்ளன் என அழைக்கப்படுபவர் கண்ணன் .கண்ணனை நம்பியவர்கள் அனைவரும் நன்மையே அடைந்தார்கள். குள்ளன் என்பது வாமனனை.மன்னன் மகாபலி மூன்றடி மண்தானே என்று குள்ளமாக இருந்த வாமனனை  மெத்தனமாக எண்ணியதால் ஆட்ச்சியை இழக்க நேரிட்டது .

 
டிஸ்கி : குள்ளர்களாக இருப்பவர்களிடம் உயரமானவர்களை விட ஏதோ ? ஒரு திறமை  இருப்பதாக மட்டும் பலர் சொல்கிறார்கள் .

8 கருத்துகள்:

Niroo சொன்னது…

vadai

பெயரில்லா சொன்னது…

சூப்பர் பாஸ் , இறுதி இரண்டுக்கும் இன்று தான் பூரண அர்த்தத்தை புரிந்துகொண்டேன் ....

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான விளக்கம் தோழா..

Mathuran சொன்னது…

விளக்கம் சூப்பர்....

மகேந்திரன் சொன்னது…

ஏற்றுக்கொள்ளக்கூடிய
விளக்கங்கள் அருமை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

குள்ளர்களாக இருப்பவர்களிடம் உயரமானவர்களை விட ஏதோ ? ஒரு திறமை இருப்பதாக மட்டும் பலர் சொல்கிறார்கள் .//

உண்மைதான். அவர்கள் சற்று தந்திரமாகவே சிந்திக்கிறார்கள்.

Jayadev Das சொன்னது…

\\இங்கே கள்ளன் என அழைக்கப்படுபவர் கண்ணன் .கண்ணனை நம்பியவர்கள் அனைவரும் நன்மையே அடைந்தார்கள். குள்ளன் என்பது வாமனனை.மன்னன் மகாபலி மூன்றடி மண்தானே என்று குள்ளமாக இருந்த வாமனனை மெத்தனமாக எண்ணியதால் ஆட்ச்சியை இழக்க நேரிட்டது.\\ பெருமாளுக்கு கொடுத்த காசு எங்கேயும் போய் விடாது ஐயா. ஆயிரம் மடங்காக பெருமாள் திரும்பக் கொடுப்பார், ஏன் சில சமயம் பக்தர்களுக்கு தன்னையே குடுப்பார். அப்படியே நீங்கள் கொடுத்தாலும் அது அவருடைய பணம்தானே, அவரிடமிருந்து எடுத்ததை அவரிடமே திரும்பக் கொடுக்கிறோம், ஆகையால் அப்படிப் பார்த்தாலும் நீங்கள் எதையும் இழக்கவில்லை. மகாபலி சக்ரவத்தி பாதாள லோகத்தில் மன்னனாக ஆண்ட காலம் முழுவதும் அவரது வாயிற்க் காவலனாக இருக்கும் பொறுப்பை பெருமாள் ஏற்றுக் கொண்டார் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

Ezhilarasi சொன்னது…

thanks for useful information regarding proverb, it was easy to understand and acceptable, please can u share some more proverb so that we can know the real meaning of the proverb