12 ஜூலை 2011

கற்களாக மாறிய தங்க காசுகள் !

ஒரு பெரிய செல்வந்தன் இருந்தான் .ஆனால் சரியானகஞ்சன்.யாருக்கும் ஐந்து பைசாகூட 
உதவி செய்யமாட்டான் .

அவனிடம் ஏராளமான தங்க காசுகள்  இருந்தன .அவற்றை வீட்டில் வைத்தால் யாரும் திருடிவிடக்கூடாது என்று எண்ணி ஊரின் அருகிலிருந்த அடர்ந்த வனப்பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஓர் மரத்தடியில் குழி தோண்டி புதைத்து வைத்தான் .

அடிக்கடி புதைத்து வைத்த இடத்திற்கு சென்று அவை  பத்திரமாக இருக்கின்றனவா என்பதை கவனித்துக்கொண்டான் .

அவனுக்கு இப்போது வயதாகிவிட்டது .அவனுடைய பிள்ளைகள் சரியான வருமானமில்லாமல் வறுமையில் இருந்தார்கள். அவர்களுக்கு கூட எந்த உதவியும் செய்யவில்லை .தங்க காசுகள்  இருப்பதையும் தெரியப்படுத்தவில்லை .

அடிக்கடி இவன் காட்டிற்கு சென்று வருவதை சில திருடர்கள் கவனித்துவிட்டனர் .அவனை ரகசியமாக பின்தொடர்ந்து தங்க காசுகளின்  இருப்பிடத்தை அறிந்து கொண்டனர் .அதே நாள் இரவில் அத்தனை தங்கத்தையும்  சுருட்டிக்கொண்டு இடம் பெயர்ந்தனர் .

சிலநாள் கழித்து வந்த செல்வந்தன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவன் தங்கத்தை  புதைக்கப்பட்டிருந்த குழி வெற்றாக இருந்தது .அழுது புலம்பினான் தரையில் படுத்து உருண்டான் .

அப்போது அந்த வழியாக ஒரு ரிஷி வந்தார் .அவரிடம் நிகழ்ந்தவற்றை கூறினான் .அவர் அவனுக்கு ஆறுதல் சொல்லி அடுத்தநாள் இதே இடத்திற்கு வா தங்கத்தை  மீட்டு தருகிறேன் என்று கூறினார் .

இரவு முழுவதும் தூக்கமில்லாத அவன் விடிந்ததும் ரிஷி கூறிய இடத்திற்கு சென்றான் .ரிஷி அவன் கையில் ஒரு பொட்டலத்தை நீட்டி உனது தங்ககாசுகள்  சரியாக இருக்கின்றனவா என்று சோதித்துக்கொள் என்றார் .

பொட்டலத்தை அவிழ்த்த செல்வந்தனுக்கு மேலும் அதிர்ச்சி அதில் வெறும் கற்கள்தான் இருந்தன .ரிஷியிடம் நான் புதைத்து வைத்திருந்தது இவைகளையல்ல தங்க காசுகள்  என்றான் .

ரிஷி இவை  நீ வைத்திருந்த தங்க காசுகளுக்கு  இணையானவைதான் .நீ புதைத்து வைத்திருந்த தங்கம்  யாருக்கும் பயன்படாமல் இருந்தது. அதே இடத்தில் இந்த கற்களை  புதைத்து வைத்தாலும் அதே நிலைதான் .

உனக்குத்தான் ஒரு வேலை மிச்சம் கற்களை யாரும் எடுக்கமாட்டார்கள்  என்பதால்  அடிக்கடி வந்து சோதிக்க வேண்டியதில்லை .


செல்வந்தனுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை ஆனாலும்  தான் செய்த தவறை உணர்ந்து விட்டான் .இருக்கின்ற சொத்துகளையாவது பிள்ளைகளுக்கு கொடுப்போம் என்று எண்ணி வீடு நோக்கி நடந்தான் .
 

டிஸ்கி : நம் நாட்டில் இப்போதும் இது போல பல செல்வந்தர்கள் உள்ளார்கள் .

27 கருத்துகள்:

கடம்பவன குயில் சொன்னது…

//இருக்கின்ற சொத்துகளையாவது பிள்ளைகளுக்கு கொடுப்போம் என்று எண்ணி வீடு நோக்கி நடந்தான் //

//டிஸ்கி : நம் நாட்டில் இப்போதும் இது போல பல செல்வந்தர்கள் உள்ளார்கள் //

ஆஹா....சாருக்கு யார்மேல கோபம் என்று எனக்குத் தெரிஞ்சுடுச்சு. சரிசரி கவலைப்படாதீங்க. நான் வேணும்னா பேசிப்பார்த்து சொத்தில் பங்கு வாங்கித் தருகிறேன்.

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில் No.I mean swiss bank black money and some wealthy temples ..

கோவை நேரம் சொன்னது…

//wiss bank black money and some wealthy temples .. ///
ஓஹோ..இதுல உள்ளர்த்தம் வேற இருக்கோ ..?

Unknown சொன்னது…

என்னாது நீங்களும் கதையா???

Unknown சொன்னது…

ம்ம் டிஸ்கி'ல ஏன் கடிக்கிறீங்க ஹிஹிஹி

கூடல் பாலா சொன்னது…

@கோவை நேரம் இந்தியாவின் கடன் அத்தனையையும் அடைத்துவிட்டு பிறநாடுகளுக்கு கடன் வழங்கக்கூடிய அளவிற்கு பணமும் தங்கமும் உள்ளன ........ஆனால் அவை மதிகெட்ட பெரிய மனிதர்களால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர் ......Thanks for your comment..

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா வெரைட்டி குடுக்க வேற வழி...?

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா எங்க ஊருல கொசு கடிச்சா odomas போடுவோம் ....வாங்கி அனுப்பவா ?

A.R.ராஜகோபாலன் சொன்னது…

நல்ல கருத்துடைய கதை , செல்வத்தை தன்னை விட்டு செல்லாமல், செல்லாக்காசாக்கும் மனிதர்கள் அறிய வேண்டிய கதை

vidivelli சொன்னது…

கருத்து நிறைந்த படைப்பு,,,,
நல்லாயிருக்குங்க...
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் சொன்னது…

அத்கப்படியான பணம் இங்கே
வெறும் காகிதம் தான்
நிதர்சனமறிந்து
கொடுத்து வாழவேண்டும்.

ஹேமா சொன்னது…

பணம்தான் பணம்தான் ....எல்லாமே.
ஆனால் நாயும் தின்னாது !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நாய் பெற்ற தெங்கம் பழம்தான்.

பாடுபட்டுப் பணம் தேடிப்புதைத்துவைக்கும் மாந்தர்கள்.

பிரகாசம் சொன்னது…

Google Adsense பற்றி விபரங்கள் அறிய விரும்புகிறேன். தாங்கள் முன்பே பதிவிட்டிருந்தால் விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன்

காட்டான் சொன்னது…

கத நல்லாதான் இருக்கு இத நான் எங்கப்பாவிற்கு அனுப்ப போறேன்..!'??

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஆஹா....சாருக்கு யார்மேல கோபம் என்று எனக்குத் தெரிஞ்சுடுச்சு. சரிசரி கவலைப்படாதீங்க. நான் வேணும்னா பேசிப்பார்த்து சொத்தில் பங்கு வாங்கித் தருகிறேன்.// repeattuuu..

கூடல் பாலா சொன்னது…

@A.R.ராஜகோபாலன் கருத்துக்கு நன்றி ARR

கூடல் பாலா சொன்னது…

@vidivelli வாழ்த்துக்கு நன்றி செம்பகம்

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நல்ல கருத்து

கூடல் பாலா சொன்னது…

@ஹேமா
இது கரெக்ட்

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி அழகிய கருத்து

கூடல் பாலா சொன்னது…

@பிரகாசம் நம்ம சசி அண்ணன்கிட்ட கேட்டு பாருங்களேன்

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! உங்க வீட்லயும் இதே பிரச்சினைதானா .....விடு ஜூட் ...

கூடல் பாலா சொன்னது…

@காட்டான் அவசரப்பட்டு அரிவாள எடுத்திடாதீங்க ......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கொடுத்து வாழ வேண்டும் பிறர் கெடுக்க வாழ்ந்திடாதே.....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கத கேளு கத கேளு

நிரூபன் சொன்னது…

காலத்திற்கேற்ற கதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நீதிக் கதையாக, நீங்கல் சம கால அரசியலுக்கும் பொருந்தும் வகையில் பகிர்ந்திருக்கிறீங்க.

கலக்கல் பாஸ்.