13 ஜூலை 2011

பில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது

பில் கேட்ஸ் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது பெர்சனல் தகவல்களை வெளியிட்டுள்ளார் .அதில் குறிப்பிடத்தக்க ஐந்து தகவல்கள் .
ரகசியம் 1: அவருடைய மூன்று குழந்தைகள் தலா 15,12,9 வயதுடையவர்கள் .அடிக்கடி அவரை பார்த்து பில்லியனர் என்ற Travie McCoy ன் பாடலை பாடி கேலி செய்கிறார்களாம் .

அடிஷனல் ரகசியம்  : இதற்க்கு பதிலடியாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்ற பாடலை பாட பயிற்சி செய்து வருவதாக ஒரு தகவல் உள்ளது

ரகசியம் 2 : இது வரை பல்வேறு திட்டங்களுக்காக 12 ,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்

அடிஷனல் ரகசியம்  : அடுத்த எலெக்ஷன்ல செலவழிக்க நன்கொடை குடுத்தா ஆட்சிக்கு  வந்ததும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் ,கலியுக கர்ணன் பட்டமும்  கொடுத்து  கவுரவிக்க விருப்பதாக தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவரின் வாரிசு தெரிவித்துள்ளார் .


ரகசியம் 3 : ஒரே ஒரு twitter  account  உள்ளது. இருக்கின்ற ஒரே ஒரு Facebook  account  ல் நண்பர் வேண்டுதல்கள் எல்லை மீறி போய்விட்டதால் சரியாக வேலை செய்வதில்லை

அடிஷனல் ரகசியம் : தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பதிவர் மட்டும் ஆயிரம் அழைப்புகளை அனுப்பி பில் கேட்சை வெறுப்படைய வைத்துவிட்டாராம்


ரகசியம் 4 : புற்று நோய்க்கு உதவ பல அமைப்புகள் இருப்பதால் மலேரியாவை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்

அடிஷனல் ரகசியம் : மருத்துவக்காபீட்டுத் திட்டத்துக்கும் உதவ கேட்க அமெரிக்காவிற்கு விரைவில் அம்மா ஆள் அனுப்புள்ளதாக அம்மாவின் உண்மை விசுவாசி தெரிவித்துள்ளார்


ரகசியம் 5 : சில முக்கியமான நபர்கள் கூட நான் யார் என்பதை சரிவரத்தெரியாமல் இருக்கிறார்கள் .சமீபத்தில் இந்தியாவில் ஒரு முதலமைச்சர் தம்மை அவருடைய நண்பர்களுக்கு இவர் எனது வெள்ளை கார நண்பர் என்று மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாராம் .

அடிஷனல் ரகசியம் :குறிப்பிட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு கமிஷன் வழங்க மறுத்ததாலேயே அவரை அவ்வாறு கூற நேரிட்டது என்று அந்த முன்னாள் முதல்வரின் முன்னாள் உதவியாளர் தெரிவித்துள்ளார்

நன்றி :Mashable

34 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

சபாஷ் சரியான ரகசியங்கள்..

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

அடேங்கப்பா..

இண்டர்போல் ஐ யே மிஞ்சிட்டீக..

அம்மாகிட்டேயிருந்து உளவுத்துறையில் சேரச் சொல்லி
தகவல் வந்தாலும் வரலாம்..

தயாரா இருங்க..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

பெயரில்லா சொன்னது…

///.சமீபத்தில் இந்தியாவில் ஒரு முதலமைச்சர் தம்மை அவருடைய நண்பர்களுக்கு இவர் எனது வெள்ளை கார நண்பர் என்று மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாராம் //என்ன கொடும சரவணன் ...

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருண்

கூடல் பாலா சொன்னது…

@சிவ.சி.மா. ஜானகிராமன் எனக்கு கவர்மெண்டு வேலையெல்லாம் வேணாம் ......

Admin சொன்னது…

தகவல்களை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது அருமை நண்பா!

மகேந்திரன் சொன்னது…

சாத்திதவர்கள் சொல்கிறார்கள்
சரியாத்தான் இருக்கும்
கேட்டுக்க வேண்டியதுதான்

Balaganesan சொன்னது…

@கந்தசாமி. என்ன கொடுமை மாப்ள ...

கடம்பவன குயில் சொன்னது…

பில்கேட்சைப் பத்தின தகவல்கள் அருமை. ஆனால் இடையில் என்ன ஈரோட்டுக்காரர வம்பிழுக்கிறீர்கள்? பில்கேட்சே நம்ம ஈரோட்டுக்காரரோடு பரம ரசிகராமே. அத ஏன் சொல்லாமல் விட்டீங்க.

rajamelaiyur சொன்னது…

//
அடிஷனல் ரகசியம் : அடுத்த எலெக்ஷன்ல செலவழிக்க நன்கொடை குடுத்தா ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் ,கலியுக கர்ணன் பட்டமும் கொடுத்து கவுரவிக்க விருப்பதாக தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவரின் வாரிசு தெரிவித்துள்ளார்
//

டாக்டர் வாழ்க ( எனக்கு கம்பவுண்டர் பட்டம் தருவாங்களா ?)

கூடல் பாலா சொன்னது…

@Abdul Basith நன்றி பாசித் ...!

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நன்றி அண்ணே !

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில் அப்படீன்னா உங்களுக்கு அந்த ஈரோட்டு காரரை தெரியுமா ......கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ் ....

Unknown சொன்னது…

மாப்ள கலக்கலுய்யா!

நிரூபன் சொன்னது…

பில்கேட்ஷின் ரகசியங்களை வைத்து, பின்னிப் பெடலெடுத்திருக்கிறீங்க.
ஆமா யாருங்க அந்த ஈரோடு பதிவர்...

vidivelli சொன்னது…

அட அந்த அருமையான மனுசனைப்பற்றி இரகசியமா சொல்லுறீங்க....
நில்லுங்க அப்பிடியே போன் பண்ணிட்டு வாறன்..
hahahaha!!!!!


ஆகா கலக்குங்க
பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ரகசியங்கள் கண்டுபிடித்த ரகசியத்தூதுவருக்கு பாராட்டுக்கள்.

கிராமத்து காக்கை சொன்னது…

அப்படியா .......

தடம் மாறிய யாத்ரீகன் சொன்னது…

// ரகசியம் 5 : சில முக்கியமான நபர்கள் கூட நான் யார் என்பதை சரிவரத்தெரியாமல் இருக்கிறார்கள் .சமீபத்தில் இந்தியாவில் ஒரு முதலமைச்சர் தம்மை அவருடைய நண்பர்களுக்கு இவர் எனது வெள்ளை கார நண்பர் என்று மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாராம் .///

இது எல்லா இந்தியரும் பண்றதுதான்

M.R சொன்னது…

இதுதான் சிதம்பர ரகசியமா நண்பரே .

யாரை நம்பி நான் பொறந்தேன் .....

என்று பயிற்சி செய்வதா சொன்னீங்களே ,
பசங்க இப்பவே வெளில போக சொல்லிடான்களோ

thulithuliyaai.blogspot.com

ad சொன்னது…

ஹா ஹா ஹா...

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா எவ்வளவு நன்கொடை வச்சிருக்கீங்க ?

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம் ரொம்ப நன்றி மாம்ஸ்

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் ஆமா யாருங்க அந்த ஈரோடு பதிவர்... ???

கூடல் பாலா சொன்னது…

@vidivelli யாருக்கு போன் பண்ண போறீங்க ?

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி நன்றி அக்கா !

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை அப்படியா ....... ???

கூடல் பாலா சொன்னது…

@அசோக் குமார் இருந்தாலும் இது ரொம்ப கொடுமை இல்ல ......

கூடல் பாலா சொன்னது…

@M.R எதிர் காலத்துல நடக்க அதிக வாய்ப்பிருக்கு ......

கூடல் பாலா சொன்னது…

@எஸ்.பி.ஜெ.கேதரன் ஹி.....ஹி....ஹி....

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

சில முக்கியமான நபர்கள் கூட நான் யார் என்பதை சரிவரத்தெரியாமல் இருக்கிறார்கள் >>>>>

நம்மூர்க்காரங்க யாருக்கு தான் மரியாதை கொடுத்தாங்க?

bittupadam சொன்னது…

nallaave illai.....thappu thappaa ezhuthi irukkire mathiri irukkuthu...
oru nalla manitharai keli seyyum vitham sari illai.....

ஹேமா சொன்னது…

நிச்சயமா இதெல்லாம் ரகசியமா இருந்தா எப்பிடி உங்க காதுக்கு வந்திச்சு !

Riyaash சொன்னது…

துப்பரியும் சிங்கமே