16 ஜூலை 2011

உலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் !

முக்காலத்திலும் யாரும் செய்ய முடியாத நல்லாட்சியான ஒன்பது ஆண்டு கால காமராஜர் ஆட்சி ஹிந்தி எதிர்ப்பு புயலில் சிக்கி சிதைந்தது .

அண்ணா இப்போது புதிய முதல்வராகிவிட்டார் .ஒரு மாதம் கடந்தது ....வழக்கம் போல பத்திரிகையாளர்கள் காம ராஜரிடம் அண்ணா ஆட்சி எப்படியுள்ளது என்று கேட்டனர் .

தம்பி ,அவர் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்தானே ஆகிருக்கு ...நான் எந்தெந்த கோப்புகளை எங்கெங்கே வச்சிருக்கேன்கிரத கண்டு பிடிக்கிரதுக்கே அவருக்கு ஆறு மாதமாகும் ...அப்படி இருக்கும்போது எப்படி அவரோட ஆட்சி பத்தி கருத்து சொல்ல முடியுன்னேன் என்றார் காமராஜர் .

தற்போதுள்ள அரசியல்வாதிகளோ  தேர்தல் முடிந்த அடுத்த நாளே புதிய ஆட்சியை குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள் .இவர்கள் தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை .

அண்ணா முதலமைச்சராக இருந்த போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் .அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சனை சந்திக்க அண்ணா விரும்பினார் .ஆனால் நிக்சனோ அண்ணாவை சந்திக்க தாம் விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.அண்ணாவுக்கு இது பெரிய ஏமாற்றம் .

சில மாதங்கள் கழித்து இந்தியாவிற்கு வந்த நிக்சன் காமராஜரை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார் .

"ஒரு தமிழன் அமெரிக்காவுக்கு வந்து சந்திக்க விரும்புனதுக்கு முடியாதுன்னு சொன்னவன நான் ஏன் சந்திக்கனும்ன்னேன்" என்று அமெரிக்க அதிபரை சந்திக்க மறுத்துவிட்டார் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர் .

இவரல்லவா உலகின் சிறந்த எதிர் கட்சி தலைவர் .நேற்று இப்பெருந்தலைவரின் பிறந்த நாள் .

27 கருத்துகள்:

கிராமத்து காக்கை சொன்னது…

நேர்மையான மக்களை பற்றி சிந்திக்கும் அரசியல்வாதிகள் இவர்களை போல் இப்போது
யாரும் இல்லை என்பது வருந்தத்ததக்க விஷயம்

Unknown சொன்னது…

ஆமா சார்...உண்மையான தலைவர்!

கடம்பவன குயில் சொன்னது…

மனிதருள் மாணிக்கம் அல்லவா பெருந்தலைவர்.
இனி யார் வேட்பாளராய் எலக்சனில் தமிழ்நாட்டில் போட்டியிட்டாலும் காமராஜர் வாழ்க்கை வரலாறு கொள்கைகள் நேர்மை எல்லாவற்றையும் கண்டிப்பாய் படிக்கணும்னு சொல்லி ஒரு டெஸ்ட் வைத்து பாஸ்ஆனால்தான் எலக்சனிலேயே நிற்கமுடியும்னு சொல்லிடணும்.

கடம்பவன குயில் சொன்னது…

எளிமை மற்றும் நேர்மையின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர்.

நிகழ்வுகள் சொன்னது…

நன்றி சார், புது தகவல் அறிந்துள்ளேன் ..

மகேந்திரன் சொன்னது…

தன்னலமில்லா பெருந்தலைவர்
ஏழைப்பங்காளன்
அவரைப்போல் ஒரு தலைவர் இனி நம் நாட்டுக்கு
கிடைப்பது அரிது
ஆரம்பக்கல்வி அனைவருக்கும் கிடைத்ததற்கு
முழுப்பெருமையும் பெருந்தலைவரையே சாரும்.

அரசர்களை உருவாக்கியவர் பற்றிய பதிவிட்டதற்கு
மிக்க நன்றி தோழரே.

http://www.ilavenirkaalam.blogspot.com/

rajamelaiyur சொன்னது…

இப்போ எது போல யார் இருக்கா?

M.R சொன்னது…

அவர் சிப்பிக்குள் முத்து ,ஒழி வீசும் டயமண்ட் , இப்ப இருப்பவர்கள் கூழாங்கற்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

huum.. ஹூம் அவர் போல வருமா?

Mathuran சொன்னது…

இவரல்லவா தலைவர்.. நம்மூர் அரசியல்வாதிங்களும் இருக்காங்களே.. ம்ஹும்

நவீன கணனியின் தந்தைக்கு நேர்ந்த அவல முடிவு

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை உண்மைதான் ...

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா சரி தல ..

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில் \\\இனி யார் வேட்பாளராய் எலக்சனில் தமிழ்நாட்டில் போட்டியிட்டாலும் காமராஜர் வாழ்க்கை வரலாறு கொள்கைகள் நேர்மை எல்லாவற்றையும் கண்டிப்பாய் படிக்கணும்னு சொல்லி ஒரு டெஸ்ட் வைத்து பாஸ்ஆனால்தான் எலக்சனிலேயே நிற்கமுடியும்னு சொல்லிடணும்\\\ நான் எலக்சன் கமிஷனரா ஆனா கண்டிப்பா நீங்க சொன்னதை செய்வேன் ....

கூடல் பாலா சொன்னது…

@நிகழ்வுகள் தலைவரை பற்றி இது போன்ற நூற்றுக்கணக்கான நல்ல விஷயங்கள் உள்ளன ...

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் மிக்க நன்றி அண்ணா ...!

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா அவ்ளோனும் கள்ளப்பயிலுவ...

கூடல் பாலா சொன்னது…

@M.R மிகச்சரியான உவமை ....

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார் ஹூம்...இப்போதைக்கு ஒருவ(னு)ரும் இல்லை ....

சக்தி கல்வி மையம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பா..

நிரூபன் சொன்னது…

உலகின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் பற்றிய, நான் இதுவரை அறிந்திராத தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

எளிமையான தலைவர்..... நல்ல பகிர்வு.

Mahan.Thamesh சொன்னது…

இவர மாதிரி தலைவர்கள் மக்கள் மனதில் நீங்காது என்றும் நிலைத்திருப்பார்கள் . பகிர்வுக்கு நன்றி

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருண்

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் தலைவரின் நல்ல விஷயங்களைச் சொல்ல 100 பதிவுகள் போட்டாலும் போதாது .....

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ்

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thamesh நன்றி தாமேஷ்

உலக சினிமா ரசிகன் சொன்னது…

பெருந்தலைவர் பற்றி நாம் இன்றும் பெருமையுடன் நினைத்து மகிழ்கிறோமே!
இது அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்.