23 ஜூலை 2011

உலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் !

என்று  ஒரு பெண் இரவில் தனியாக ஊருக்குள் நடமாட முடிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் என்றார் தேசப்பிதா .


பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .இந்நிலை  பல நாடுகளிலும் உள்ளது .

சமீபத்தில் போஸ்டன் நாளிதழில் உலகிலேயே பெண்களுக்கு அதிக தீங்கிழைக்கும் சில நாடுகளின் பட்டியல் வெளியானது .இப்போது அது உங்கள் பார்வைக்கு .

1 .ஆப்கானிஸ்தான்


பெண்களுக்கெதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடு .மோசமான பொருளாதார சூழ் நிலைகள் சுகாதார சீர்கேடு போன்றவற்றால் இங்குள்ள பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் .

2 .காங்கோ


உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் நாடு .ஒவ்வொரு வருடமும் 4  லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் .

3 .பாகிஸ்தான்


மத ரீதியான வன்முறைகள் ,திராவகம் வீச்சு பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது .குழந்தை திருமணங்கள் அதிகம் நிகழ்கின்றன .

4 .இந்தியா

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் கடத்தப் படுகிறார்கள் .கடந்த நூற்றாண்டில்  பாலியல் தொழிலுக்காக மட்டும் 50  லட்சம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் இவர்களில் 40  சதவீதம்பேர் பருவ வயதை எட்டாதவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம் .

5 .சோமாலியாபெண்களுக்கெதிராக அதிக பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன .பெண் கல்வி ,சுகாதாரம் மிகவும் குறைவாக உள்ள நாடு .

பெண்களுக்கெதிரான இந்த தீமைகள் குறைந்தால்தான் உலகம் செழிக்கும் .

29 கருத்துகள்:

M.R சொன்னது…

வேதனையான விஷயம்தான் பாலா

சக்தி கல்வி மையம் சொன்னது…

அமாம் .. இதில் இந்தியாவும் இருப்பது வேதனையான விஷயம்..

மகேந்திரன் சொன்னது…

வேதனையான விஷயம்

சிவா சின்னப்பொடி சொன்னது…

சிறீலங்காவை விட்டு விட்டார்களே

rajamelaiyur சொன்னது…

Very shame . . . Very shame . . .

பெயரில்லா சொன்னது…

இலங்கை ஆறாவது இடமோ ?

மாய உலகம் சொன்னது…

கேவலமாக நடந்துக்கொள்ளும் நாடுகள்... குறிப்பாக இந்தியாவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

//பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் கடத்தப் படுகிறார்கள் .//

ஆண்களையே கடத்துகிறார்கள்... பின் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு... பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்... சமீபத்தில் பிடிப்பட்ட விபச்சார புரோக்கர்கள் மேக்ஸிமம் பெண்களாகவே இருக்கிறார்கள்... எனவே பெண்களுக்கு மோசமான ஆண்களால் மட்டுமல்ல முன் பின் தெரியாத மோசமான பெண்களாலும் கூட ஆபத்து வரலாம் எனவே பெண்கள் இந்த சமூகத்தில் பாதுகாப்பை எதிர்பார்ப்பது இரண்டாம் பட்சம்... முதல் பட்சமாக பெண்கள் ஒவ்வொருவரும் தற்காப்புகலையை கற்றுக்கொள்ள வேண்டும், எங்கு சென்றாலும் குடும்பத்தில் உள்ளோரோடும் நெருங்கிய உறவினர்களோடும் செலவது சிறப்பு, எந்த ஒரு சிறிய செயலாக இருந்தாலும் நெருங்கியவர்களோடு பகிர்ந்துகோள்வதும் ஒரு வகை பாதுகாப்பே.... நல்ல பெண்களை மதிக்காத நாடு சாபக்கேடு பெற்றுள்ள நாடு.... கவனிக்க வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

NOT HAPPY NEWS ... SO WE HAD SEEN OUR SCAR IN DA MIRROR LETS SPREAD LOVE AND DIGNITY TO ALL ...AND MAKE BETTER INDIA ALSO BETTER WORLD FOR GIRLS AND WOMEN

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

அட இந்தியாவுமா ?

எங்கே செல்லும் இந்த பாதை ?
யாரோ யாரோ யார் அறிவாரோ ?

http://sivaayasivaa.blogspot.com

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்போ இலங்கை.....................!!!!???

கூடல் பாலா சொன்னது…

@M.R உண்மைதான் ..

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! இந்தியாவுக்கு இது ஒரு களங்கம்தான் .....

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் உண்மைதான் ....

கூடல் பாலா சொன்னது…

@சிவா சின்னப்பொடி 2 வருடங்களுக்கு முன்னாலிருந்து மேற்கொள்ளப்பட்ட கணிப்பு என்பதால் இதில் இலங்கை இடம்பெறவில்லை ...இப்போதுள்ள சூழ்நிலையில் உலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான நாடு இலங்கைதான் ....

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா puppy shame ..

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ இந்த எல்லா கொடுமைகளின் ஒட்டு மொத்த உருவம்தான் இன்றைய இலங்கை ....

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. அடுத்து ஒரு கணிப்பை இப்பத்திரிகை நடத்தினால் அதில் இலங்கை முதலிடத்தை பெறும் ...

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம் கராத்தே சொல்லி குடுப்பீங்களா ?

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது I also forward this one ...

கூடல் பாலா சொன்னது…

@சிவ.சி.மா. ஜானகிராமன் கடவுள்தான் காப்பாத்தணுமா.....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

என்று சகஜநிலைவருமோ.....

சிந்திக்க உண்மைகள். சொன்னது…

பெண்ணடிமையா ? பெண்ணுரிமையா ?

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?


>> 2. இந்தியாவில் வளர்வது பெண் அடிமைத்தனத்தனமா? பெண் உரிமையா?
இந்தியாவில் 2009ல் நடந்த பெண் (வன்)கொடுமைகள்.


>> 3 .
பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??


>> 4. பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் .

>> 5. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?

>> 6. “பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” - வேதம். இல்லை யென்றால் அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவில‌க்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும். --குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது “ உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”.

>> 7. பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.

>> 8. . இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம்


>> 9. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

>> 10. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது.ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..

shanmugavel சொன்னது…

வரலாற்றுப்பிழை!

Jayadev Das சொன்னது…

இது நமக்கு வெட்கத்தையும் வேதனையையும் தரக்கூடிய விஷயம். நம் நாட்டில், எவனாவது அப்பாவி கணவன் கிடைத்தால் அவன் மீது போய் கேசு போட சட்டத்தில் நல்ல வசதி பண்ணி வச்சிருக்கானுங்க, மத்த படி அவங்க மேல நடக்கும் வன்முறைக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஐயா அப்துல் கலாம் அவர்களே, உங்க இந்தியா-2020 கனவு கானல் நீராயிடும் போல இருக்கே???

Kumaresan Rajendran சொன்னது…

இந்தியன் என்ற முறையில், வெட்கபட வேண்டிய விஷயம்!!!!!!!!!!!!

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ், சிறிய இடை வேளையின் பின் வந்திருக்கிறேன். தாங்கள் நலமா.

வேதனையான விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க. எம் நாடுகளில் மகளிரைப் பாதுக்காப்பதற்கான சட்டங்கள் இன்மையே இந்த இழி நிலைக்கான காரணங்கள் என நினைக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வேதனையான பகிர்வு..

Mahan.Thamesh சொன்னது…

தற்போது ஸ்ரீலங்காதான் முன்னிலையில் அத விட்டிட்டியள் நண்பா

!? கோவை சாட்டை ?! சொன்னது…

சார் படிச்சாலே பயமா இருக்கு,