26 ஜூலை 2011

சுகமாக வாழும் உரிமை மக்களுக்கு இல்லை : அணுசக்தி துறை

ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று நிகழ்ந்த   பூகம்பத்தால் அணு விபத்து ஏற்பட்டு லட்ச்சக்கணக்கான மக்கள் ஊரை காலி செய்து விட்டனர் .


விபத்து நிகழ்ந்து 4  மாதங்களாகியும் கதிர் வீச்சின் அளவு குறைந்த பாடில்லை .

இந்நிலையில் புகுஷிமா பகுதியிலிருந்து மேலும் மக்களை வெளியேற்றுவது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் மக்களுக்கும் அணு சக்தி துறை அதிகாரிகளுக்கும் இடையே நடை பெற்றது .

அப்போது மக்கள் கதிர் வீச்சினால் உண்டான பல்வேறு இடர்பாடுகள் குறித்து முறையிட்டனர் .

அப்போது பேசிய ஒருவர் ஜப்பானில் பிற பகுதிகளில் வாழும் மக்களைப்போல் எங்களுக்கும் கதிர்வீச்சில்லாத சுகமான வாழ்க்கை வாழ்வதற்கு உரிமை உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா என்று அதிகாரிகளிடம்  கேட்டார் .

அதற்கு பதிலளித்த அணுசக்தித் துறை தலைமை அதிகாரி அப்படி ஒரு உரிமை உள்ளதா என எனக்குத்தெரியவில்லை எனக்கூறிவிட்டார்  .


இதைக்கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் .அரசுக்கு எதிராக கூச்சலிட்டனர் .அவர்களில் பலர் கதிரியக்க சோதனைக்கு தங்கள் குழந்தைகளின் சிறு நீரை கொண்டு வந்திருந்தார்கள் .அதை சோதனை செய்யவும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர் .


கீழே காணொளி


20 கருத்துகள்:

Unknown சொன்னது…

விரைவில் நல்லது நடக்கணும் அங்கே ...அங்கேயுமா இந்த மாதிரி அதிகாரிகள்

Unknown சொன்னது…

BRO IF U DUNT MIND ,,,PLZ CHG DA FONT COLOR FOR BETTER READING ....THIS COLOR IS TOO LIGHT

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பதிலளித்த அணுசக்தித் துறை தலைமை அதிகாரி அப்படி ஒரு உரிமை உள்ளதா என எனக்குத்தெரியவில்லை எனக்கூறிவிட்டார் .//

அரக்கத்தனமான பதிலாக அல்லவா வருத்தப்பட வைக்கிறது.

கிராமத்து காக்கை சொன்னது…

நம்ம ஊர் அரசியல்வாதிகள் போலவே அங்கு
ஒருவர் உள்ளர்

கிராமத்து காக்கை சொன்னது…

@கிராமத்து காக்கை

சக்தி கல்வி மையம் சொன்னது…

நம்ம நாட்டு அரசியல் அங்கேயுமா?

rajamelaiyur சொன்னது…

Good postGood post

M.R சொன்னது…

அடபாவி மனுஷா ,இவன கொண்டு போய் அந்த இடத்தில குடியிருக்க சொல்லனும்

Unknown சொன்னது…

இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...

பெயரில்லா சொன்னது…

ஜப்பானுக்கே இந்த கதி... வழக்கம் போல் நல்ல பதிவு பாலா....

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

இந்த கொடுமை விரைவில் அகல இறைவனை வேண்டுகிறேன்.

Mathuran சொன்னது…

அடப்பாவிகளா.. அங்கயுமா இப்பிடி அதிகாரிகள் இருக்கிறாங்கள்... என்ன கொடுமை அப்பா

ஈழத்தமிழர் விடயத்தில் விஜய் செய்தது தவறா?

மகேந்திரன் சொன்னது…

இவனுகள திருத்தவே முடியாது ........

மாய உலகம் சொன்னது…

நம்ம அரசியல்வாதிங்க கிட்டருந்து அவங்க கத்துக்கிட்டாய்ங்க் போலருக்கு.... கொடுமைகள் விலகட்டும் நன்மைகள் பிறக்கட்டும்

நிரூபன் சொன்னது…

கதிர் வீச்சின் கொடுரத்தை விளக்கி, எம் நாட்டிலும் கதிர் வீச்சு வேண்டாம் எனப் போராடத் தூண்டும் விழிப்புணர்வுப் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடப்பாவமே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அதிகாரிகளே இப்பிடி அலட்சியமா அங்கேயுமா...??? பாவிகளா...!!!

அம்பாளடியாள் சொன்னது…

பதிலளித்த அணுசக்தித் துறை தலைமை அதிகாரி அப்படி ஒரு உரிமை உள்ளதா என எனக்குத்தெரியவில்லை எனக்கூறிவிட்டார் .//

இது கடவுளுக்கே அடுக்காது.
மிக்க நன்றி பகிர்வுக்கு .

Mahan.Thamesh சொன்னது…

நம்ம நாட்டு தலைவன் போல பேசியிருக்காரு

mohan சொன்னது…

Hi Friend This Is Mohan Vellore
We buyd one script (cannot copy) your content anyone Copying ?
This problem Was Solved
Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
You Need This Just Rs 500 Lets buy
Contact Mohanwalaja@gmail.com