12 ஜூலை 2011

சேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா ?

இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பான காணொளிகளை சேனல் 4 ஒளிபரப்பியதன்மூலம் இலங்கை அரசின் முகத்திரை கிழிந்தது .

அதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன .இருந்தபோதிலும் இந்திய ஊடகங்கள் இது பற்றி அமைதி காத்து வந்தன .

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனல் 4 வீடியோக்களை அடிக்கடி ஒளிபரப்பி வருகின்றது .இது தற்போது டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

இது குறித்து கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நட்டா இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்திய அரசு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கருத்து தெரிவித்தார் .

இந்த வீடியோ குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவிடம்  செய்தியாளர்கள் கேட்டபோது இது பற்றி இப்போதைக்கு கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளார் .

இலங்கையில் போர்குற்றம் நடந்தபோதோ அதை சேனல் 4  ஒளிபரப்பியபோதோ வாய் திறக்காத காங்கிரஸ் அரசு தற்போது அதை நேரடியாக காண்கின்ற போதும் வாய்திறக்க மறுப்பது கண்டனத்திற்குரியது .


இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கருத்து தெரிவிக்கையில் காங்கிரஸ் அரசின் இச்செயல் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் மூலம் ஐ நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் தகுதியை இந்தியா இழந்துவிட்டது எனவும் கூறினார் .

7 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இலங்கையில் போர்குற்றம் நடந்தபோதோ அதை சேனல் 4 ஒளிபரப்பியபோதோ வாய் திறக்காத காங்கிரஸ் அரசு தற்போது அதை நேரடியாக காண்கின்ற போதும் வாய்திறக்க மறுப்பது கண்டனத்திற்குரியது

A.R.ராஜகோபாலன் சொன்னது…

காங்கிரஸ் அரசு தமிழர்கள் உணர்வுகளை பற்றீ கவலை படுவதாகவே தெரியவில்லை, கொடுமையிலும் கொடுமை இந்த அரசு

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எல்லாம் கண்துடைப்பு சந்திப்புகள்...

பெயரில்லா சொன்னது…

எப்பிடி பாஸ் காங்கிரஸ் வாய் திறக்கும்.. அவர்களுக்கும் பங்கு இருக்கே ....

சக்தி கல்வி மையம் சொன்னது…

கண்டனத்துக்குரியது,,

Unknown சொன்னது…

இவனுக திருந்தமாட்டாங்க சார்!!!

எஸ் சக்திவேல் சொன்னது…

கேள்வி:

"அந்தப் பேர்வழி தூத்தேறி" என்று கருத்துரையிட்டால் "தணிக்கை" செய்துவிடுவீர்களா?